Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குரு பகவானின் அருளால் 2023ல் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிகள்.. | Guru Peyarchi 2023 to 2024

Nandhinipriya Ganeshan Updated:
குரு பகவானின் அருளால் 2023ல் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிகள்.. | Guru Peyarchi 2023 to 2024Representative Image.

வியாழன் கிரகம் தான் தேவர்களின் குரு என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குருபகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை. 

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக குறைந்தது 12 மாதங்களாவது எடுத்துக் கொள்வார். அந்தவகையில், வருகின்ற 2023 புத்தாண்டில் குரு பகவான் ஏப்ரல் 22, 2023 ஆம் தேதி மீனத்தை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்குகிறது. அதுமட்டுமல்லாமல், குரு பகவானின் பெயர்ச்சி 12 ராசிக்காரர்களுக்கு தனது தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இதனால், அவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செல்வ செழிப்பும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கும் திருமணம் யோகம் ஏற்படும். அந்தவகையில், 2023 ஆம் ஆண்டில் குரு பகவானின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப் போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம். 

குரு பகவானின் அருளால் 2023ல் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிகள்.. | Guru Peyarchi 2023 to 2024Representative Image

மேஷம் [Guru Peyarchi Palan 2023 Mesham]

குரு பகவானின் சஞ்சாரத்தால் உருவாகும் கஜலக்ஷ்மி ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை தரப்போகிறது. இதற்கு காரணம் குரு பகவான் தனது ராசியை மாற்றி மேஷம் ராசிக்குள் தான் பிரவேசிக்கவுள்ளார்.  இதனால், மேஷம் ராசிக்காரர்களுக்கு இருந்துவந்த பணப்பிரச்சனை அனைத்தும் விலகப்போகிறது. தொழில் வியாபாரத்திலும் லாபத்தை பெற போகிறார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் ஏற்படும். திருமணமாகாமல் இருந்த மேஷ ராசியினருக்கு திருமணம் கைகூடி வரும். ஏற்கனவே திருமணமானவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கடன் பிரச்சனை அனைத்திற்கும் தீர்வு கிடைக்கப் போகிறது. தள்ளிப்போன சுபகாரியங்கள் அனைத்து நடந்து முடியும். 

குரு பகவானின் அருளால் 2023ல் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிகள்.. | Guru Peyarchi 2023 to 2024Representative Image

மிதுனம் [Guru Peyarchi Palan 2023 Midhunam]

வியாழனின் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களை அதிர்ஷ்டம் ஆதரிக்கத் தொடங்கும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். ரொம்ப நாட்களாக கடன் பிரச்சனையில் இருந்து நிரந்தர தீர்வை கொடுக்கப் போகிறார் குரு பகவான். வியாபாரம் நல்ல முறையில் இருக்கும். எதிர்பார்த்தைவிட நல்ல லாபத்தை கொடுக்கும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, வியாபாரிகளுக்கு தான் லாபகரமான காலமாக இருக்கப்போகிறது. நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கையில் இருந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் விடிவுகாலம் பிறக்கப் போகிறது. 

குரு பகவானின் அருளால் 2023ல் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிகள்.. | Guru Peyarchi 2023 to 2024Representative Image

தனுசு [Guru Peyarchi Palan 2023 Dhanusu]

குரு பகவானின் ராசி மாற்றத்தால், தனுசு ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும். தொழிலில் இதுவரை நஷ்டத்தையே சந்தித்துவந்த உங்களுக்கு பெரும் வெற்றி கிடைக்கப் போகிறது. பணியில் இருப்பவர்களுக்கு நீங்க ஆசைப்பட்ட பொறுப்பு கிடைக்கலாம். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண யோகம் இல்லாத தனுசு ராசிக்காரர்களுக்கு  குரு பகவானின் அருளால் திருமணம் நிச்சயம் ஆகும். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு உண்டாகும். கடன் பிரச்சனை இருந்தால் அனைத்தும் விலகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்