Tue ,Apr 30, 2024

சென்செக்ஸ் 74,964.55
293.27sensex(0.39%)
நிஃப்டி22,723.90
80.50sensex(0.36%)
USD
81.57
Exclusive

Guru Peyarchi 2022 in tamil: இந்த 6 ராசிகள் குருப்பெயர்ச்சியால்  பெறும் அதிர்ஷ்டம் ஏராளம்!  

Manoj Krishnamoorthi April 15, 2022 & 11:45 [IST]
Guru Peyarchi 2022 in tamil: இந்த 6 ராசிகள் குருப்பெயர்ச்சியால்  பெறும் அதிர்ஷ்டம் ஏராளம்!  Representative Image.

குருவின் பார்வை கோடி நன்மை என்பது பழமொழியாகும், அந்த வாக்கியத்தின் அடிப்படையில் குரு ஜோதிடத்தில் நற்பலன்களை அளிக்கும் கிரகமாகும். 14.04.2022 முதல் 22.04.2023 இருக்கும் குருப்பெயர்ச்சியில் அதிக நற்பலனைப் பெறும் ராசிகள் பற்றிக் காண்போம்.

ரிஷபம்

அன்பான பேச்சால் எளிதில் காதல் வசப்படுத்து உங்களின் ராசியில்குருபகவான் இது வரை 10 ஆம் இடத்திலிருந்து  சரியான முடிவை எடுக்க முடியாதவாறு செய்திருப்பார். இவ்வாறு கஷ்டப்பட்ட உங்களுக்கு  ஏப்ரல் 14, 2022 ஆம் தேதி முதல் 11ம் வீட்டில் இருக்கும் குருபகவான் தெளிவான சிந்தனை அளித்து சுறுசுறுப்பாக செயல்பட செய்வார்.

உத்தியோகத்தில் வரும் பிரச்சனைகள் அனைத்திருக்கும் உடனடி தீர்வு கிடைக்கும். நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். 2022ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி  பற்றி விரிவாகப் படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யுகள்.

கடகம்

தன் கலகலப்பான சுபாவத்தால் பிறரை சந்தோஷப்படுத்தும் கடக ராசிக்காரரே உங்கள் ராசியில் 14.04.2022 அன்று குரு பகவான் 9ம் வீட்டிற்கு வருவதால் குரு பகவான் உங்களுக்கு தைரிய ஸ்தானத்தில் இருந்துது ஏற்படும் பிரச்சனைகளை சாதகமாக மாற்றுவார். அரசு உத்தியோகத்தில் இருப்பவர் தொழிலில் முன்னேற்றம் காணம் தருணம் இதுவாகும்.

மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும், உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும். இன்னும் விரிவாக குருவின் பார்வையால் கிடைக்கும் பலன் பற்றி அறிய கொடுக்கப்பட்ட லிங்கை க்ளிக் செய்யவும்.

கன்னி

மற்றவர்களிடம்  போலித்தனமாக இருக்காமல் தன் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக வெளிக்காட்டும் கன்னி இராசிக்காரரே உங்கள் ராசியில் ஏப்ரல்14, 2022 முதல் 22.4.2023 வரை குரு பகவான்  7ம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார், இது உங்கள் வாழ்வை மேம்படுத்தும் என்பதில் ஐய்யம் இல்லை. உங்கள் திறமைக்கு ஏற்ற  பலன் நிச்சயமாகக் கிடைக்கும்.  இந்த குருப்பெயர்ச்சி உங்கள் பணியிடத்தில் உங்கள் முக்கியத்துவத்தை அதிகரித்து  தொழிலில் முன்னேற்றமும் நல்ல பெயரும் அளிக்கும். 

தொழில் ஸ்தானம் மிகவும்  சிறப்பாக உள்ளது.  உங்கள் ராசியில் 11ம் வீடான லாப ஸ்தானத்தில் குருவின் பார்வை அமைவதால் சில பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும், இதனால் வாழ்க்கை மேம்படும். அதுமட்டுமின்றி 5ம் வீட்டில் சனி பகவான் நிலை கொண்டு இருப்பது கல்வி நிலையை மேம்படுத்தும். இன்னும் விரிவாக உங்கள் இராசியின் குருப் பெயர்ச்சி பலன் பற்றி அறிய கொடுக்கப்பட்ட இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

விருச்சிகம்

கடினமான சூழ்நிலையிலும் நேர்மை தவறாமல் கண்ணியத்துடன் இருக்கும் விருச்சிக இராசிக்காரரே உங்கள் ராசியில் 14.04.2022 அன்று 4ம் வீட்டில் இருந்து 5ம் வீட்டில் அமர்வது குழந்தைப் பாக்கியம் அளிக்கும். இந்த குருப் பெயர்ச்ச்சி காலம் உங்கள்  தொழில் வளர்ச்சி பெற்று நல்ல லாபத்தை அளிக்கும். குரு பகவான் உங்கள் செல்வ நிலையை உயர்வதால் வசதி வாய்ப்பு அதிகமாகும்.

உங்கள் ராசியில் 5ம் வீட்டில் குருவின் பார்வை இருப்பதால் நிலுவையிலிருந்த கடன்களைத் தீரும். உங்களுக்கு 2022ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி பலன் பற்றி இன்னும் விரிவாக காண இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

மகரம்

உங்கள் எளிமையான தோற்றமும் அன்பான குணமும் உங்களின் மீது மற்றவருக்கு அதிக மதுப்பை உருவாக்கும் மகர ராசி வாசகரே இந்த வருடம் 14.04.2022 அன்று ஏற்பட்ட குருப்பெயர்ச்சியால் குரு பகவான் உங்கள் ராசியில் 3ம் இடத்தில் அமர்ந்திருப்பது தன புகழை உயர்த்துவார். இந்த குருப் பெயர்ச்சியில் செல்வ நிலை உயரும். தொழில் ஸ்தானம் அமோகமாக உள்ளது, உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில முக்கியமான பொறுப்புகள் கிடைக்கும் ஆனால் அயராது உழைத்தால் நிச்சியமாக முன்னேற்றத்தை அளிக்கும். 

குரு தன் சொந்த இடத்தில் இருப்பது மகர ராசிக்குச் சாதகமாகும், அன்பான சுபாவத்தாலும் எளிதில் எதிரிகளையும் நண்பராக்கும் உங்களுக்கு இந்த வருட குருப்பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை விரிவாகப் பார்க்க நாங்கள் கொடுத்த லிங்கை க்ளிக் செய்யவும்.

கும்பம்

சாதுரியமான குணத்தால் வெற்றியைத் தாக்க வைத்துக் கொள்ளும் கும்ப ராசிக்காரரே இந்த வருடம் 2022ல் குரு பகவான் உங்கள் ராசியில் 2ம் வீட்டில் அமர்ந்து  எளிதில் தொழிலில் வெற்றி காண உதவி செய்வார். குடும்ப ஸ்தானத்தைப் பொருத்தவரை நிம்மதியான வாழ்வை குரு பகவான் தருவார். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும், திருமணம் ஆகாதவருக்கு திருமண கோலம் கொள்ளும் யோகம் உள்ளது.

இந்த குரு பார்வை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், புதிய கல்வி அறிவு பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும், இந்த வருடம் 2022ல் குருப்பெயர்ச்சியில் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Guru Peyarchi 2022 Palangal: குருவின் பார்வையால் ராஜ யோகம் பெரும்  அதிர்ஷ்ட  ராசிகள் இதுவா! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்