Gowthami Subramani September 13, 2023
தமிழ் மாதங்களில் ஆன்மீக மாதமாகவே கருதப்படுவது இந்த புரட்டாசி மாதம் தான். புரட்டாசி மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது சர்வ சௌபாக்கியங்களையும் தரும் வெங்கடேஷப் பெருமான். இந்த சுப மாதத்தில் வீட்டில் அசைவம் சாப்பிடவோ, சமைக்கவோ கூடாது என பெரியவர்கள் கூறுவர். இத்துடன், புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் விரதம் மேற்கொண்டு பூஜை செய்தால், நம் வாழ்க்கையில் எந்த பிரச்சனைகளும் இல்லாது அனைத்தும் செல்வமும், வளமும் கிடைக்கும் என்று பொருள்
Nandhinipriya Ganeshan September 07, 2023
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை வந்துவிட்டது. அனைவரும் வீட்டில் விநாயகருக்கு பிடித்த பல இனிப்பு பலகாரங்களை செய்ய தயாராகிக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில், விநாயகர் சதுர்த்தி என்றாலே மோதகத்திற்கு அடுத்து நம் நினைவுக்கு வருவது லட்டு தான். விநாயகருக்கு நைவேத்தியமாக படைக்கப்படும் ஒரு இனிப்பு பலகாரங்களில் இந்த மோத்திசூர் லட்டை வீட்டிலேயே மிகவும் சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Gowthami Subramani August 24, 2023
பொதுவாக, வரலட்சுமி பூஜை என்றாலே, பெண்களுக்கு ஒரு சிறப்பான நாளாகும். இந்த நன்னாளில் பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வீட்டிற்கு அம்மனை அழைத்து, பூஜை செய்து வணங்குவதாகும். இதில் நிறைய வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. பாரம்பரியமாக நடத்தப்படும் இந்த பூஜையில் பெண்கள் விரதம் இருந்து, வீட்டிற்கு சில பேரை அழைத்து பூஜை செய்த பின், தாம்பூலம் வழங்குதல் நடைபெறும். திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் நல்ல வாழ்க்கைத் துணை அமைய வேண்டி விரதம் இருப்பர் என்று பொருள்.
கர்ப்பிணி பெண்கள் வரலட்சுமி பூஜையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என சிலர் கருதிக்கொண்டு இருக்கிறார்கள். சிலரோ கர்ப்பம் ஆகிவிட்டாலே பூஜை செய்யக்கூடாது என நினைத்துக் கொண்டு அதையே பலரிடமும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? கர்ப்பிணி பெண்கள் வரலட்சுமி நோன்பு இருக்கலாமா?கூடாதா அப்படி இருக்கலாம் என்றால் எப்போது வரை இருக்கலாம்? நிறை மாத கர்ப்பிணிகளுக்கு என்ன வரைமுறை என்பதை இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.
Nandhinipriya Ganeshan August 21, 2023
பால் பாயசம் கேள்விபட்டிருப்போம். அதுமட்டுமல்லாமல், அது மிகவும் சுலபமாக தயாரித்துவிடக் கூடிய ஒரு இனிப்பு வகையும் கூட. ஆனால், கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது ஓணம் சத்யா விருந்தில் இடம்பெறும் பால் பாயசம் சற்று வித்தியாசமானது. அதாவது, அரிசியை பயன்படுத்தி பால் பாயசம் செய்யப்படும். அந்தவகையில், மிகவும் சுலபமாக அரிசி பால் பாயசம் எப்படி செய்வது இப்பதிவில் காணலாம்.
Manoj Krishnamoorthi August 13, 2023
காக்கும் தெய்வம் விஷ்ணு பகவானின் தசாவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணர் மண்ணில் ஜனித்த தருணமே கிருஷ்ண ஜெயந்தி எனக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமியில் பிறந்தமையால் இந்த தினத்தை கோலாஷ்டமி என்றும் கூறப்படுகிறது. தர்மத்தை நிலைநாட்ட மண்ணில் அவதரித்த கிருஷ்ண பகவான் தோன்றிய கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கீழ்க்காண்போம். கிருஷ்ண ஜெயந்தி வழிமுறை (Krishna Jayanthi Valipadu In Tamil) தேவகி நந்தனனாக அவதரித்து ஆயர்பாடியில் யசோதாவின் மகனாக வளர்ந்த கிருஷ்ண பகவானைக் கோகுலாஷ்டமி தினத்தில் வழிபாடு செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம் ஆகும். கிருஷ்ண பகவான் போல சகல ஐஸ்வரியம் கொண்ட குழந்தை வரம் பெற கீழ்வரும் வழிமுறையை பின்பற்ற வேண்டும். முதலில் வீட்டை சுத்தம் செய்து நாமும் குளித்த பிறகு கிருஷ்ண பகவானை நினைத்து வணங்கி விரதம் இருப்பது நன்மை. அதுவும் தம்பதியாக விரதம் இருப்பது மிகவும் சிறப்பாகும். பொதுவாக நமக்கு தெரிந்தது தான் வீட்டில் கிருஷ்ணர் பாதம் வரைவது தான், முக்கியமாகக் குழந்தை பாக்கியம் எதிர்பார்க்கும் தம்பதியினர் வீட்டின் வாசலில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ண பகவான் குழந்தை அவதார பாதம் பதிய செய்ய வேண்டும். கிருஷ்ண பகவானுக்கு படைக்க இனிப்பு வகைகளான சீடை, லட்டு அல்லது முறுக்கு போன்றவை படைக்கலாம். இவைகளுடன் கிருஷ்ணரின் விருப்பமான வெண்ணெய்யும் படைத்தல் வேண்டும். பால், தயிர் வைத்து கிருஷ்ண பகவானை வணங்குவது மிகவும் சிறப்பாகும். மேலே குறிப்பிட்ட பொருட்களை வீட்டில் இறைவன் படம் அல்லது சிலை முன் வைத்து வணங்கி, வழக்கமான வேலைகளை செய்யலாம். பின் கிருஷ்ணர் பிறந்த சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மீண்டும் பூஜை செய்து பிரசாதத்தை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
Nandhinipriya Ganeshan July 25, 2023
நமது உடலில் எந்த இடத்தில் வலி வந்தாலும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், இந்த பல் வலி, பல் சொத்தை, பல் கூச்சத்தை மட்டும் தாங்கிக்கொள்ளவே முடியாது. எது சாப்பிட்டாலும் உயிரே போகும் அளவிற்கு வலி இருக்கும். இதில் பல் கூச்சம் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், சூடான, மிகவும் குளிர்ந்த, இனிப்பான மற்றும் புளிப்பான உணவுகளை சாப்பிடும்போது அசௌகரியத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் வெறும் தண்ணீர் குடித்தால் கூட பற்களில் கூச்சம் உண்டாகும். இதற்கு காரணம் நமது பற்களின் மேலிருக்கும் எனாமல் அடுக்கு குறைவது தான். பல் கூச்சம் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். உலகளவில் 70% பேர் இந்த பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த பல் கூச்சத்தை சில வீட்டு வைத்திய முறைகள் மூலமே நாம் சரி செய்ய முடியும். அவை என்ன என்பதை பார்க்கலாம் இப்பதிவில் பார்க்கலாம். பல் கூச்சம் நீங்க வீட்டு வைத்தியம்: ➦ பல் கூச்சாத்தால் அவதிப்படுவோர் தினமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் பல் கூச்சத்திலிருந்து மெல்ல மெல்ல விடுபட முடியும். ➦ தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன்பு உங்கள் வாய் பிடிக்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெயை எடுத்து, அதை ஈறுகளில் பரவுவது போல நன்றாக கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஈறுகளில் இருக்கும் தொற்று குணமடைந்து பல் கூச்சம் தடுக்கப்படும். ➦ கொய்யா இலைகளில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. இவை கிருமிகளை எதிர்த்து போராடுவதோடு, ஈறுகளை பலப்படுத்தவும் உதவுகிறது. தினமும் இரண்டு கொய்யா இலையை எடுத்து அதை நீரில் நன்றாக கழுவிவிட்டு வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர பற்களில் உள்ள மஞ்சள் கரையும் நீங்கும். ➦ தினமும் பல் துலக்கியதும், வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து கரைத்து ஈறுகளில் படுமாறு சில நிமிடங்கள் வைத்து, வாய் கொப்பளித்தால் வாயில் உள்ள கிருமிகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல், பற்கூச்சத்தையும் தடுக்கும். இதை காலை, மாலை இரண்டு வேலைகளிலும் செய்ய வேண்டும். ➦ கிராம்பு எண்ணெய் கிடைத்தால் அதை வாங்கி, ஈறுகளில் மெதுவாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை தினமும் காலை, மாலை இரண்டு முறை செய்ய வேண்டும். ➦ 1 டேபிள் ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, பல் துலக்கிய பிறகு இதை வாயில் ஊற்றி நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும். இதை தினமும் செய்துவர பல் கூச்சத்தால் ஏற்படும் வலி விரைவில் நீங்கும். ➦ எப்பவும் பயன்படுத்தும் டூத் பேஸ்டை விட, புதினா கலந்த டூத் பேஸ்டை பயன்படுத்தினால், ஈறுகள் புத்துணர்ச்சி பெறுவதோடு பல் கூச்சமும் குறையும். தவிர்க்க வேண்டியவை: ➦ பல் கூச்சம் இருக்கும் போது சிட்ரஸ் வகை பழங்களை தவிர்க்க வேண்டும். கடினமான டூத் பிரஷ்ஷை தவிர்த்துவிட்டு, மென்மையான டூத் பிரஷ்ஷை பயன்படுத்துங்கள். ➦ நம்மில் பலரும் பற்கள் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிக நேரம் பற்களை துலக்குவோம். அது மிகவும் தவறு. ஏனென்றால், அதிக நேரம் பல் துலக்கும்போது பற்களின் எனாமல் குறைந்து பற்களை இழக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிடும். எனவே அதிக நேரம் பல் துலக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ➦ ஒரு சிலருக்கு பற்களை கடிப்பது, கொரிப்பது போன்ற பழக்கம் இருக்கும். இவ்வாறு செய்வதால் எனாமல் குறைந்து பற்கூச்சம் வரும். எனவே, அவற்றை தவிர்க்கவும்.
நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்தியாவால் உருவாக்கப்பட்ட சந்திரயான்- 3 விண்கலம் நாளை பிற்பகல் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதனை சுமந்து செல்லும் எல்.வி.எம்-3 M4 விண்கலத்திற்கான 25 1/2 மணி நேர கவுன்டவுன் இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. நிலாவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்ட சந்திரயான் - 1 விண்கலம், அங்கு தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து, மேல் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து, தற்போது, சந்திரயான் - 3 விண்கலம், நிலவின் தெற்குப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இந்த விண்கலத்தை எல்.வி.எம்.3 - M4 ராக்கெட் சுமந்து செல்கிறது. இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக ராக்கெட்டில் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. அனைத்து பரிசோதனை மற்றும் சோதனை ஓட்டங்களும் முடிவடைந்த நிலையில், எல்.வி.எம்-3 M4 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், எல்.வி.எம்3-எம்4 ராக்கெட்டுக்கான 25 1/2 மணி நேர கவுன்டவுன் இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, நாளை (ஜூலை.14) பிற்பகல் 2 மணி 35 நிமிடம் 17 விநாடியில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சத்தீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் எல்.வி.எம்-3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாயவுள்ளது. நிலவை ஆய்வதற்கான அனுப்படும் இந்த சந்திரயான்-3 விண்கலம் மூலம் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் நம்பர்களுக்கான புதிய மாற்றத்தை முன்னெடுக்கும் வகையில், 'போன் நம்பர் ப்ரைவஸி'என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் வழியாக, ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டியின் கீழ் நடக்கும் உரையாடல்களில் நீங்கள் கலந்துகொள்ளும் போது, யார் என்றே தெரியாத மற்ற குழு மெம்பர்களிடம் இருந்து உங்களின் பெயர் மற்றும் போன் நம்பரை மறைக்க முடியும்; கூடவே அனைத்து மெசேஜ்களுக்கும் ரியாக்ட் செய்யவும் முடியும். இந்த அம்சம் எப்படி வேலை செய்யும் என்பதை காட்டும் ஸ்கிரீன் ஷாட் ஒன்றும் - வாட்ஸ்அப்பீட்டாஇன்ஃபோ வலைத்தளம் வழியாக - வெளியாகியுள்ளது. போன் நம்பர் ப்ரைவஸி அம்சமானது குழு அனௌன்ஸ்மென்ட் குரூப் இன்ஃபோவின் கீழ் அணுக கிடைக்கும். இந்த அம்சத்தை இயக்கும் போது, கம்யூனிட்டி அட்மின் மற்றும் ஏற்கனவே உங்களுடைய மொபைல் நம்பரை சேமித்து வைத்திருக்கும் மெம்பர்களை தவிர மற்ற நம்பர்களிலிருந்து உங்கள் போன் நம்பர் மறைக்கப்படும். குழு அட்மின்களுக்கு உங்களுடைய போன் நம்பர் ஏற்கனவே தெரியும் என்பதால், இந்த அம்சம் கம்யூனிட்டி மெம்பர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதுதவிர்த்து, சொந்த விருப்பத்தின்கீழ் குறிப்பிட்ட கம்யூனிட்டி மெம்பர்களுடன் உங்களுடைய மொபைல் நம்பரை பகிர்ந்துகொள்ளவும் விருப்பமும் இருக்கும். ஒட்டுமொத்தமாக வாட்ஸ்அப்பின் இந்த புதிய போன் நம்பர் ப்ரைவஸி அம்சமானது, உங்கள் போன் நம்பரை, கம்யூனிட்டியில் உள்ள மற்ற உறுப்பினர்களின் பார்வையில் பாடாமல் இருப்பதை உறுதி செய்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இந்த அம்சம் தற்போது வரையிலாக அனைத்து வாட்ஸ்அப் குழு பயனர்களுக்கும் வெளியிடப்படவில்லை. வாட்ஸ்அப்பீட்டாஇன்ஃபோவின் கூற்றுப்படி, இது ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.23.14.19 வாட்ஸ்அப் பீட்டா மற்றும் ஐஓஎஸ் 23.14.0.70 பீட்டா வெர்ஷன்களை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஒருவேளை நீங்களும் இந்த புதிய அம்சத்தை முயற்சிக்க விரும்பினால் கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது டெஸ்ட்ஃபிளைட்டிலிருந்து வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் பில்ட்-ஐ பதிவிறக்கம் செய்யலாம். அறியாதோர்களுக்கு வாட்ஸ்அப் குழு என்றால், ஒரே மாதிரியான நோக்கங்களை கொண்ட வெவ்வேறு வாட்ஸ்அப் குரூப்களை "ஒரே குடையின்" கீழ் கொண்டுவந்து, ஒழுங்கமைத்து ஒன்றிணைக்கும் இடமாகும்.
Nandhinipriya Ganeshan July 12, 2023
அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் மிகவும் பிரபலமான சமூக வலைதளமாக விளங்குகிறது ட்விட்டர். இந்த ட்விட்டரை கடந்த அக்டோபர் மாதம் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் சுமார் ரூ.3.64 லட்சம் கோடி கொடுத்து வாங்கினார். இதையடுத்து ட்விட்டர் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தது. அதாவது, ட்விட்டர் பணியாளர்கள் நீக்கம், பயன்படுத்தப்படாத ட்விட்டர் கணக்குகள் நீக்கம், பிரபலங்கள் பெயரில் இருக்கும் போலி அக்கவுண்ட்கள் நீக்கம், ட்விட்டர் கணக்கு ப்ளூ டிக் பெற கட்டணம், ட்வீட்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு, இறுதியில் ட்விட்டர் லோகோ மாற்றம் என பலவிதமான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்தது. இவையனைத்தும் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பயனர்களிடையே பெரும் குழப்பத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பல நிறுவனங்கள் களத்தில் குதித்தன. இந்த நேரத்தில் தான் ட்விட்டருக்கு போட்டியாக புதிய தளத்தை உருவாக்கும் முயற்சியில் மெட்டா நிறுவனம் இறங்கியது. அப்படி உருவாக்கப்பட்ட புதிய செயலி தான் 'த்ரெட்ஸ்'. இந்த புதிய செயலியை கடந்த ஜூலை 06 ஆம் தேதி மெட்டா நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் அறிமுகம் செய்தார். இந்த செயலி தொடங்கப்பட்ட ஒரே நாளில் 5.5 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றது. ட்விட்டர் போலவே இருக்கும் இந்த செயலியிலும் கருத்துகளை எழுத்து வடிவில் பதிவிடவும், இணைப்புகளை பகிரவும், புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடவும் முடியும். இதை மற்றொருவர்கள் லைக், ஷேர், கமெண்ட் செய்ய முடியும், மேலும் பிற நபர்களின் கணக்குகளை பின்தொடரலாம். அதுமட்டுமல்லாமல், தனி நபருடன் சாட்டிங் செய்யும் வசதியும் இருக்கிறது. இந்த புதிய பிளாட்ஃபார்மை முயற்சிக்கவும், அதில் என்ன புதியதாக வழங்கப்படுகிறது என்பதைப் பார்க்கவும் பலரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலமாக த்ரெட்ஸ் -இல் இணைய தொடங்கினர். அதாவது, த்ரெட்ஸ் செயலியில் அக்கவுண்ட் தொடங்க வேண்டுமென்றால் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்க வேண்டும். அப்படி இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை பயன்படுத்தி த்ரெட்ஸ் செயலியில் அக்கவுண்ட் தொடங்கும்போது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை நீக்காமல் உங்கள் த்ரெட்ஸ் அக்கவுண்ட்டை நீக்க முடியாது. ஆனால், இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை நீக்காமல், த்ரெட்ஸ் அக்கவுட்ண்ட்டை செயலிழக்க செய்ய முடியும். அது எப்படி செய்வது என்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. How to Delete Threads Account in Tamil? ➦ இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை டெலிட் செய்யாமல் த்ரெட்ஸ் அக்கவுண்ட்டை நீக்க, முதலில் த்ரெட்ஸ் செயலியை திறந்து கீழே வலது மூலையில் உள்ள ப்ரொஃபைல் ஐகானை (Profile Icon) க்ளிக் செய்யவும். ➦ பின்னர், மேல் வலது மூலையில் இருக்கும் மெனு ஐகானை (Menu Icon) க்ளிக் செய்யவும். ➦ அதில் அக்கவுண்ட் (Account) என்பதை க்ளிக் செய்து, ப்ரொஃபைலை செயலிழக்கச் செய்யவும். ➦ இறுதியாக டிஆக்டிவேட் த்ரெட்ஸ் (Deactivate threads) சுயவிவரத்தை தட்டி உங்கள் விருப்பதை உறுதிப்படுத்தவும். ➦ அவ்வளவு தாங்க!