Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விநாயகப் பெருமானுக்கு இந்த மலர்களைக் கொண்டு பூஜியுங்கள்… உங்கள் வாழ்வில் செல்வமும், வளமும் மென்மேலும் பெருகும்!

Gowthami Subramani September 08, 2023 & 10:40 [IST]
விநாயகப் பெருமானுக்கு இந்த மலர்களைக் கொண்டு பூஜியுங்கள்… உங்கள் வாழ்வில் செல்வமும், வளமும் மென்மேலும் பெருகும்! Representative Image.

நம் வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய இன்னல்கள் அனைத்தையும் நீக்கி அனைத்து வளங்களையும், செல்வ செழிப்பையும் அளிக்கக் கூடிய இறைவனாய் நம்மைக் காப்பவன் விநாயகப் பெருமான். ஆனை முகத்தான் எனப் போற்றப்படும் விநாயகப் பெருமானின் சிறப்பை அறியாதோர் இந்த உலகத்தில் எவருமிலர். நம் கர்ம வினைகளைத் தீர்த்து, பாவங்களை நீக்கும் விநாயகப் பெருமானுக்கு மிகச் சிறப்பான நாளாக நாம் கொண்டாடுவது விநாயகர் சதுர்த்தி.

Most Read: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் தேன் கொழுக்கட்டை செய்வது எப்படி? 

கடவுளுக்கு நாம் படைக்கக் கூடிய பூவாக இருந்தாலும், பழமாக இருந்தாலும், பிரசாதமாக இருந்தாலும் ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் உண்டு. கடவுளுக்குப் படைக்கக்கூடியவை அனைத்தும், இந்த உலக மக்களுக்குப் பயன்படும் ஒரு சிறப்பாகவே கருதப்படுகின்றன. அந்த வகையில், விநாயகப் பெருமானுக்குப் படைக்க வேண்டிய 21 பழங்கள், 21 இலைகள், மற்றும் 21 மலர்கள் உள்ளன. அவற்றில் இந்தப் பதிவில், கணேஷனுக்குப் படைக்கக் கூடிய 21 மலர்களைப் பற்றி காண்போம்.

Most Read: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியம் செய்வது எப்படி? 

விநாயகப் பெருமானுக்கு உகந்த இந்த மலர்களை வைத்து பூஜித்து வழிபட்டால், நமது கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, ஆரோக்கியம், செல்வம், என சகல சௌபாக்கியங்களும் பெற முடியும். விநாயகருக்குப் படைக்கக் கூடிய 21 மலர்கள் என்னென்ன என்பதைக் காண்போம்.


விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு உகந்த 21 இலைகள்… இன்னல்கள் அனைத்தும் நீங்க இப்படி வழிபடுங்கள்…


விநாயகருக்குப் படைக்க வேண்டிய 21 மலர்கள்

மல்லி

ஜாதிமல்லி

முல்லை

 

சம்பங்கி

தாமரை

சாமந்தி

 

ஆரளி

மனோரஞ்சிதம்

செண்பகம்

 

பாரிஜாதம் / பவளமல்லி

தும்பைப் பூ

வில்வ பூ

 

செம்பருத்திப் பூ

ரோஜா

மாம்பூ

 

 

எருக்கம்பூ

மாதுளம்பூ

தாழம்பூ

 

கொன்றை மலர்

நந்தியாவட்டை

ஊமத்தைபூ


Representative Image. விநாயகர் சதுர்த்தியில் வளமும், செல்வமும் பெற பூஜையில் படைக்க வேண்டிய 21 பழங்கள்…!


எத்தனையோ மலர்கள் இந்த உலகத்தில் பூத்துக்குலுங்கி இருப்பினும், விநாயகருக்கு இந்த 21 மலர்களைக் கொண்டே பூஜிக்கப்படுகிறது. விநாயகருக்குச் சிறப்பான விநாயகர் சதுர்த்தி தினத்தில், இந்த மலர்களைக் கொண்டு வழிபட்டால், வாழ்வில் நமக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்று கூறுவர்.

Most Read: விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு படைக்க வேண்டிய பிரசாதங்கள்..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்