Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சந்திர கிரகணம் 2023 இந்தியாவில் எங்கு எப்போது பார்க்கலாம்..? | Chandra Grahan 2023 In India

Gowthami Subramani Updated:
சந்திர கிரகணம் 2023 இந்தியாவில் எங்கு எப்போது பார்க்கலாம்..? | Chandra Grahan 2023 In IndiaRepresentative Image.

சந்திர கிரகணம் என்பது, சூரியன், பூமி, மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது ஏற்படுவதாகும். இவ்வாறு நிகழும் போது, பூமியின் நிழல் ஆனது சந்திரன் மீது விழுந்து மறைக்கப்படுகிறது. இந்நிகழ்வே சந்திர கிரகணம் எனப்படுகிறது. இதில் இந்தியாவில் நிகழக்கூடிய 2023 ஆம் ஆண்டின் சந்திர கிரகணம் பற்றிய தகவல்களை இதில் காணலாம்.

சந்திர கிரகணம் 2023 இந்தியாவில் எங்கு எப்போது பார்க்கலாம்..? | Chandra Grahan 2023 In IndiaRepresentative Image

சந்திர கிரகணம் 2023 எப்போது?

இந்த 2023 ஆம் ஆண்டிற்கான முதல் சந்திர கிரகணம் மே 5 ஆம் நாளான வெள்ளிக்கிழமை அன்று சித்திரை பௌர்ணமி தினத்தில் ஏற்படுகிறது. மேலும், இந்த கிரகணமானது பகுதி சந்திர கிரகணமாக ஏற்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

சந்திர கிரகணம் 2023 இந்தியாவில் எங்கு எப்போது பார்க்கலாம்..? | Chandra Grahan 2023 In IndiaRepresentative Image

எந்தெந்த இடங்களில் பார்க்கலாம்

2023 ஆம் ஆண்டு நிகழக்கூடிய இந்த சந்திர கிரகணம் ஆனது, உலகில் பெரும்பாலான இடங்களில் தெரியும் எனக் கூறப்படுகிறது. அதன் படி, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அண்டார்டிக்கா உள்ளிட்ட கண்டங்களில் இருப்பவர்களுக்கும் பார்க்க முடியும் எனக் கூறப்படுகிறது.

சந்திர கிரகணம் 2023 இந்தியாவில் எங்கு எப்போது பார்க்கலாம்..? | Chandra Grahan 2023 In IndiaRepresentative Image

இந்தியாவில் சந்திர கிரகணம் 2023

இந்தியாவில் மே 5 ஆம் தேதி சந்திர கிரகணத்தை எளிதாகக் காண முடியும். அதன் படி, இந்திய நேரத்தில் இரவு 08.44 மணிக்குத் தொடங்கும். அதிகபட்சமாக இரவு 10.52 மணிக்கு இருக்கும். மேலும், சந்திர கிரகணம் ஆனது இறுதியாக மே 6 அன்று அதிகாலை 01.01 மணிக்கு முடிவடைய உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்