Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்வதால் எத்தனை பலன்கள் உண்டு தெரியுமா..? | Chitra Pournami Girivalam Benefits

Gowthami Subramani Updated:
சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்வதால் எத்தனை பலன்கள் உண்டு தெரியுமா..? | Chitra Pournami Girivalam BenefitsRepresentative Image.

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதிலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய சித்ரா பௌர்ணமிக்கு தனிச்சிறப்பு உள்ளது. அதாவது, சித்தர்களின் ஆசி பெறுவதற்கு, இறைவனை வழிபட்டு பல்வேறு நற்பலன்களைப் பெறக்கூடிய ஒரு அற்புத நாளாக இந்த இனிய நாள் அமைகிறது. இந்த சிறப்பு தினத்தில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது சிறப்பு. திருவண்ணாமலை கிரிவலம் செல்வதால் கிடைக்கக் கூடிய நற்பலன்களை இதில் காணலாம்.

சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்வதால் எத்தனை பலன்கள் உண்டு தெரியுமா..? | Chitra Pournami Girivalam BenefitsRepresentative Image

சித்ரா பௌர்ணமி 2023

இந்த 2023 ஆம் ஆண்டின் சித்ரா பௌர்ணமி தினமானது மே 5 ஆம் நாள் வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த சிறப்பான தினத்தில் கிரிவலம் செல்வதால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி தினத்தில் கிரிவலம் செல்லும் போது, தீர்க்க முடியாத பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்பது ஐதீகம்.

சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்வதால் எத்தனை பலன்கள் உண்டு தெரியுமா..? | Chitra Pournami Girivalam BenefitsRepresentative Image

சித்திரை முழு நிலவில்

நம் உடலிற்கு சூரிய சக்தி அதிக அளவில் தேவைப்படுகிறது. இவையே உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. அது போல, சந்திர சக்தியும் ஆற்றலைத் தருவதாக அமைகீறது. அதிலும் குறிப்பாக திருவண்ணாமலை, சதுரகிரி, பொதிகை மலை போன்ற தளங்களில் பௌர்ணமி தினத்தில் செல்வதால் அற்புத மாற்றங்கள் நிகழும். இந்த சிறப்பு மாற்றங்கள் முழு நிலவு தினத்திலேயே அதிக அளவில் நிகழ்கிறது என கூறப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்வதால் எத்தனை பலன்கள் உண்டு தெரியுமா..? | Chitra Pournami Girivalam BenefitsRepresentative Image

சிவனின் பரிபூரண அருள் கிடைக்க

மாதந்தோறும் வரக்கூடிய பௌர்ணமி தினத்தைக் காட்டிலும், சித்திரை மாதத்தில் வரக்கூடிய சித்ரா பௌர்ணமி தினத்தில் இறை சக்தியின் ஆற்றல் அதிகமாக இருக்கும். மேலும், இந்த தினத்தில் பூமியில் இருந்து எழக்கூடிய ஒருவித சக்தியானது அனைவருக்கும் நல் அருளைத் தரவல்லது. இந்த சக்தியைத் தங்களுக்குள் கிரகித்துக் கொள்ள சூட்சும வடிவில் சித்தர்கள், யோகிகள் போன்றோரும் கிரிவலம் சென்று இறைவனை வழிபடுவர்.

சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்வதால் எத்தனை பலன்கள் உண்டு தெரியுமா..? | Chitra Pournami Girivalam BenefitsRepresentative Image

சித்ரா பௌர்ணமி கிரிவலம் பலன்கள்

சித்ரா பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலையில் பல்லாயிரம் சித்தர்கள் எதாவது ஒரு வடிவில் கிரிவலம் வருவதாகக் கூறப்படுகிறது. அதன் படி, எவரொருவர் தங்களது முழு மனதோடு சிவனை மனதில் சிந்தித்து கிரிவலம் வருகிறார்களோ, அவர்களுக்கு சித்தர்களின் பரிபூரண அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்