Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மத்திய அரசு அளிக்கும் தமிழ்நாடு To காசி இலவச பயணம்..! எப்படி பதிவு செய்வது? 

Manoj Krishnamoorthi November 02, 2022 & 16:30 [IST]
மத்திய அரசு அளிக்கும் தமிழ்நாடு To காசி இலவச பயணம்..! எப்படி பதிவு செய்வது? Representative Image.

இந்து சமயத்தினர் புண்ணிய யாத்திரை செல்ல நினைக்கும் இடம் காசி ஆகும். இந்த காசி செல்லும் செலவை அரசே ஏற்று கொள்ளும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அதுமட்டுமில்லாமல் நம்மை பாதுகாப்பாக அரசாங்கம் அழைத்து செல்ல உள்ளது. இந்த ஆன்மீக பயணத்தில் நாமும் செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை பதிவில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசு அளிக்கும் தமிழ்நாடு To காசி இலவச பயணம்..! எப்படி பதிவு செய்வது? Representative Image

மத்திய அரசு இலவச தமிழ்நாடு To காசி பயணம் (Kashi Yatra Scheme From Tamil Nadu)

சைவ சமயத்தின் மூலவரான சிவனின் புகழ் பெற்ற காசி மற்றும் இராமேஸ்வரம் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது சிவ பக்தர்களின் ஆசையாகும். ஆசை என்பதை விட அது தங்கள் வாழ்நாள் கடமை என்றே சிவனடியார்கள் கூறுவர். மக்கள் புண்ணிய யாத்திரை செல்ல மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

காசி தமிழ் சங்கமம் நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை நடைபெறவுள்ளது, இந்த நிகழ்ச்சியில்  12 குழுக்கள் இருக்கும். காசிக்கு நம் நாகரீகத்துடன் பழங்காலம் முதல் இருக்கும் தொடர்பை உறுதிபடுத்த இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னை, கோவை, ராமேஸ்வரம் ஆகிய மூன்று ஊர்களில் இருந்து 3 குழுக்கள் புறப்படவுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு குழுவிற்கும் 8 நாட்கள் பயணம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.  8 நாட்கள் திட்டமிட்ட இந்த பயணத்தில் 4 நாட்கள் ரயில் பயணம், 2 நாட்கள் காசியிலும் மற்றும் 2 நாட்கள் அயோத்தியிலும் இருக்கும்.

மத்திய அரசு அளிக்கும் தமிழ்நாடு To காசி இலவச பயணம்..! எப்படி பதிவு செய்வது? Representative Image

எப்படி பதிவு செய்வது?  (How To Apply Free Kashi Yatra In Tamil)

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு மத்திய அரசு அறிவித்த இலவச காசி யாத்திரைக்கு பதிவு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

https://kashitamil iitm.ac.in/ என்ற இந்த பக்கத்தில் பயனைத்தை பற்றிய முழு தகவல் மற்றும் இரயில் புறப்படும் நேரம் , இடம் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது.  இணையப் பக்கத்தில் பதிவு ஆப்சன் இருக்கும், அதில் கேட்கப்படும் விண்ணப்பத்தை அளித்து பதிவிட வேண்டும். உங்களின் பதிவு அங்கீகரிக்கப்பட்டால் 1500 ரூபாய் வைப்பு தொகையாக கட்ட வேண்டும். பயணத்தின் பின்னர் அந்த பணம் திரும்ப அளிக்கப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்