Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tharai Palangal : தாரை பலன் என்றால் என்ன? எப்படி பார்ப்பது?

Manoj Krishnamoorthi October 24, 2022 & 18:00 [IST]
Tharai Palangal : தாரை பலன் என்றால் என்ன? எப்படி பார்ப்பது?Representative Image.

நாம் தினமும் ராசிபலன் பார்ப்போம்,  ராசியில் சந்திரனின் நிலை எப்படி இருக்கிறதோ அதை மையமாக கொண்டு கணித்து கூறுவர், இதை கோச்சார பலன் என்று கூறலாம். சந்திரன் மனநிலைக்கு உரிய கிரகம் எனவே தினசரி பலனில் நம் மனநிலையே முதன்மை கொள்ள முடியும். இந்த ஜோதிட முறையில் தாரா பலன் என்பது என்ன கேள்விக்கு இந்த பதிவு தெளிவான பதில் அளிக்கும்.  

Tharai Palangal : தாரை பலன் என்றால் என்ன? எப்படி பார்ப்பது?Representative Image

தாரா பலன் என்றால் என்ன? (Tharai Palangal)

நம் வாழ்வியல் நிகழ்வுகளை காணும் முறை ஜோதிடம் ஆகும். ஜோதிட வேதம் கூறும்  கூற்றின் அடிப்படையில் நட்சத்திரங்களின் குறி ஈடுகள் ஆகும், ஒருவர் பிறக்கும்போது 12 ராசிகளில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ அது ஒருவரின் ஜென்ம நட்சத்திரமாக இருக்கும். தாரை, தாரா போன்ற சொல் சந்திரனைக் குறிக்கும், சந்திரன் மேற்கொண்டு இருக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் கோச்சார ரீதியாக சொல்லும் பலன் தாரா பலன் ஆகும். 

இந்த தாரா பலன் ஒருவருக்கு இன்றைய தினம் அதிர்ஷ்டமான நாளா இல்லையா என்பதை கூறிவிடும். சந்திரன் மனோகாரகன், சந்திரன் தினமும் வெவ்வேறு நட்சத்திரத்தில் பயணிப்பார் அவர் இருக்கும் நட்சத்திரம் மற்றும் நேரத்தை வைத்து ஒருவருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை அறியலாம். 

Tharai Palangal : தாரை பலன் என்றால் என்ன? எப்படி பார்ப்பது?Representative Image

தாரைகளின் பெயர் மற்றும் பலன்கள் (Thara Palan Chart Tamil)

நம் ஜென்ம நட்சத்திரம் மற்றும்  அன்றைய தின நட்சத்திரம் ஆகிய இரண்டை வைத்து கணிக்கும் இந்த தாரை பலன் 1 முதல் 9 வரை ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு பலன் உண்டு.  ஒருவேளை நாம் கணிக்கும் போது ஒன்பதுக்கு மேல் வந்தால் 9 ஆல் வகுத்தால் வரும் எண்ணின் பலனை எடுத்து கொள்ள வேண்டும். 

1.ஜென்ம தாரை- மனக்குழப்பம் மற்றும் பதற்றம் ஏற்படும்.

2. சம்பத்து தாரை- பொருள் வரவு, காரிய சித்தி, சுபகாரியம் தொடர்பான  செயல்கள் செய்யலாம். 

3. விபத்து தாரை- கோபத்தால் இழப்பு ஏற்படும், வாய்ப்புகள் தவறும்.

4. சேமத் தாரை- ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான நாளாகும்.

5. பிரத்தயக்கு தாரை- சிக்கல், கவன சிதறல், வீண் அலைச்சல் போன்றவை ஏற்படும்.

6. சாதக தாரை- எண்ணம் ஈடேறும், முயற்சிகள் வெற்றி அளிக்கும், சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

7. வதை தாரை- உடல் சோர்வு, மனதில் இனம் புரியாத கவலை அல்லது குழப்பம், பணியில் நாட்டம் இருக்காது

8. மைத்திர தாரை- தெய்வகாரியம் செய்தல், புதிய முயற்சி, புதிய செயல்கள் ஆரம்பிக்கலாம்.

9. பரம மைத்திர தாரை- அனைத்து வித சுபச் செயல்களும் செய்ய உகந்தது.    

 

Tharai Palangal : தாரை பலன் என்றால் என்ன? எப்படி பார்ப்பது?Representative Image

எப்படி கணிப்பது? (Thara Palan Calculator Tamil)

ஒருவருக்கு அஸ்வினி நட்சத்திரம் என்றால் கணிக்கும் நாள் மகம் நட்சத்திரம் என்று வைத்து கொள்ளுவோம். மகம் 27 நட்சத்திரங்களில் 10வது நட்சத்திரமாகும், இதை 9 ஆல் வகுத்தால் மீதம் 1 வரும். ஆகவே கணிக்கும் தினத்தில் இந்த அஸ்வினி நட்சத்திரக்காரருக்கு  ஜென்ம தாரை ஆகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்