Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காணும் பொங்கல் என்பது நீங்க நினைப்பது கிடையாது.. தெரிஞ்சிக்கோங்க.. | Kaanum Pongal 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
காணும் பொங்கல் என்பது நீங்க நினைப்பது கிடையாது.. தெரிஞ்சிக்கோங்க.. | Kaanum Pongal 2023 in TamilRepresentative Image.

பொங்கல் பண்டிகையின் போது 4வது நாள் கொண்டாடப்படும் பண்டிகை தான் காணும் பொங்கல். ஆனால், நம்மில் பலருக்கு இது எதற்காக கொண்டாடப்படுகிறது என்றே தெரியாமல் இருக்கும். வாங்க தெரிந்துக்கொள்ளலாம். இந்த காணும் பொங்கலுக்கு உண்மையான பெயர் "கன்னி பொங்கல்". இதுவே நாளடைவில் "காணும் பொங்கல்" என்று மாறிவிட்டது. 

காணும் பொங்கல் என்பது நீங்க நினைப்பது கிடையாது.. தெரிஞ்சிக்கோங்க.. | Kaanum Pongal 2023 in TamilRepresentative Image

இந்த காணும் பொங்கல் என்பது கன்னி பெண்களுக்கு உரியது. அதாவது இந்த நாளில் வீட்டில் இருக்கும் இளம்பெண்கள், தமக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். இந்த பண்டிகையின் போது வீட்டில் இருக்கும் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக கறி சமைத்து விருந்து சாப்பிட்டு, பிடித்த இடத்திற்கு சென்று வருவார்கள். இதுதான் காணும் பொங்கல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதுதான் கிடையாது. இந்த நாள் செய்த சாதத்தை உடன் பிறந்தவர்களின் நன்மைக்காக, காக்கா குருவிக்கு தானம் செய்வதே முறை. 

காணும் பொங்கல் என்பது நீங்க நினைப்பது கிடையாது.. தெரிஞ்சிக்கோங்க.. | Kaanum Pongal 2023 in TamilRepresentative Image

காணும் பொங்கல் என்றால் என்ன?

வீட்டில் அனைவரும் ஒன்றாக கூடி வீட்டு மொட்டை மாடிலோ அல்லது ஆற்றங்கரையிலோ மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு திசை பார்த்து வைத்து 5 வகையான சாதங்களை படைத்து, உடன்பிறந்த சகோதரர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். மேலும் திருமணமாகாத பெண்கள் இந்த நாளில் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும். 

காணும் பொங்கல் என்பது நீங்க நினைப்பது கிடையாது.. தெரிஞ்சிக்கோங்க.. | Kaanum Pongal 2023 in TamilRepresentative Image

கன்னிப் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

இன்றைய நாள் கன்னிப் பெண்கள் பொங்கல் வைக்கும்போது பொங்கல் பொங்கிய பிறகு பானையில் கட்டப்படும் புது மஞ்சள் கொத்தினை எடுத்து முத்தியை தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாத்தில் முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது திருமணத்தடை விலகுவதோடு, மனதிற்கு பிடித்த மணாளன் கணவராக கிடைப்பார் என்பது ஐதீகம். 

ஆனால், இந்த காலத்தில் அதை கறிநாளாக மாற்றி குடும்பத்துடன் கறி சமைத்து விருந்து சாப்பிட்டு வருகிறோம். இனியாவது நம் பாரம்பரியத்தை முறைப்படி பின்பற்றுவோம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்