Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Madurai Chithirai Festival 2023 Dates | உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2023 எத்தனை நாள்? என்னென்ன சிறப்புகள்..

Nandhinipriya Ganeshan Updated:
Madurai Chithirai Festival 2023 Dates | உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2023 எத்தனை நாள்? என்னென்ன சிறப்புகள்..Representative Image.

தூங்கா நகரம், நான்மாடக்கூடல் என பல சிறப்புகளை பெற்ற மதுரை மாநகரகம் பல நூறு ஆண்டுகள் பழமையானவை. மதுரை என்றதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி தான். சிவனும், பார்வதியும் மீனாட்சி சொக்கநாதராக அரசாட்சி செய்யும் நகரம் என்பதால் தெய்வீக புகழ் பெற்றது. சிவபெருமான் பல திருவிளையாடல்களை அரங்கேற்றியதும் இந்த மதுரையில் தான். 

இந்த மதுரை மண்ணை காக்கும் அன்னை மீனாட்சிக்கு ஆண்டுதோறும் திருவிழாதான் அதிலும் சித்திரை மாதத்தில் நடைபெறும் 12 நாள் திருவிழாவான சித்திரை திருவிழா சிறப்பு வாய்ந்தவை. இந்த விழாவின் அழகை காண உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அப்படி உலக புகழ்பெற்ற இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23,2023) கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. 

Madurai Chithirai Festival 2023 Dates | உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2023 எத்தனை நாள்? என்னென்ன சிறப்புகள்..Representative Image

30 ஏப்ரல் 2023 - ஞாயிறு

ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு தங்க பல்லக்கு. மாலை விருச்சிக லக்னத்தில் இரவு 7.05 முதல் 07.29 வரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். பிறகு இரவு 9 - 11 மணி வரை சிம்ஹாசன உலா நடைபெறும். 

மே 01.2023 - திங்கள்

மே 1 ஆம் மாலை 6 மணி முதல் 11.30 மணி வரை அரசியாக முடி சூட்டிய அம்மன் மீனாட்சி திக் விஜயம் வருவார். அம்மன் திக் விஜயம் வருவதை காண பக்தர்கள் கூட்டம் மாசி வீதிகளில் அலை மோதும்.

மே 02.2023 - செவ்வாய்

மே 2ஆம் தேதி மிதுன லக்னத்தில் காலை 8.35 - 8.59 மணி வரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் (விண்ணுலக திருமணம்) நடக்கும். மாலையில் புதுமண தம்பதிகள் வீதி உலா வருவார்கள். அதன்படி, இரவு 7.30 -- 11.30 மணி வரை மாப்பிள்ளை யானை வாகனத்திலும், புதுப்பெண் மீனாட்சி பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள்.

Madurai Chithirai Festival 2023 Dates | உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2023 எத்தனை நாள்? என்னென்ன சிறப்புகள்..Representative Image

மே 03.2023 - புதன்

சித்திரை தேரோட்டம் மே 3ஆம் தேதி மாசி வீதிகளில் நடக்கும். அதன்படி, மேஷ லக்னம் காலை 5.05 முதல் 5.45 வரை திருத்தேர் எழுந்தருள்வார். காலை 6.30 மணி  திருத்தேர் வடம்பிடித்தல் மற்றும் 7 மணி முதல் 10.30 மணி வரை சப்தாவர்ண சப்ரம் நடைபெறும். அம்மை அப்பனுமாக வலம் வருவதை காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருப்பார்கள். 

மே 03.2023 - புதன்

திருக்கல்யாணத்தை காண முடியாதவர்கள் கூட தேரோட்டம் காண வந்து விடுவார்கள் மதுரைக்கு. ஏனென்றால் அன்றைக்குத்தான் கள்ளழகரும் அழகர் மலையில் இருந்து கண்டாங்கி பட்டு கட்டி தங்க சப்பரத்தில் அதிர்வேட்டு முழங்க புறப்பட்டு (7 மணி முதல் 7.10 மணி வரை) வருவார். அழகர் கோவிலில் போடப்படும் அதிர்வேட்டு மதுரை வரை எதிரொலிக்கும். மே 3 ஆம் தேதி கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது.

மே 04.2023 - வியாழன்

அழகர் மலையில் இருந்து புறப்பாடாகி வரும் அழகரை மதுரை மக்கள் 4ஆம் தேதி எதிர்கொண்டு வரவேற்பார்கள். எதிர்சேவை நிகழ்ச்சியை (காலை 6 மணி முதல் 7 மணி வரை) காண எல்லோரும் மூன்று மாவடிக்கு செல்வார்கள். 

Madurai Chithirai Festival 2023 Dates | உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2023 எத்தனை நாள்? என்னென்ன சிறப்புகள்..Representative Image

மே 05.2023 - வெள்ளி

அன்றிரவு தல்லாக்குளத்தில் தங்கும் கள்ளழகர் சித்திரா பவுர்ணமி நாளான 5 ஆம் தேதி அதிகாலையில் (காலை 5.45 முதல் 6.12 வரை) தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்குகிறார். கள்ளழகரை காண பல லட்சம் மக்கள் வைகை ஆற்றங்கரையில் திரள்வார்கள். வைகை ஆற்றங்கரை ஓரத்திலேயே குதிரை வாகனத்தில் வண்டியூருக்கு செல்வார் கள்ளழகர். 

மே 06.2023 - சனிக்கிழமை

மே 6ம் தேதி காலை 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்படுகிறார். மே 6ம் தேதி மாலை 3 மணிக்கு தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அழகர் மதுரைக்கு வந்த நோக்கம் நிறைவேறியதும் அன்றைய தினம் நள்ளிரவு விடிய விடிய திருவிழாதான். இராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் (காலை 12 மணிலிருந்து)  நடைபெறும்.

மே 07.2023 - ஞாயிறு

மே 7ம் தேதி காலை 6 மணிக்கு கள்ளழகர் மோகினி அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் அழகர். அன்று பிற்பகல் 2 மணிக்கு கள்ளழகர் இராஜாங்க அலங்காரத்துடன் அனந்தராயர் பல்லக்கில் புறப்படுவார். 

மே 08.2023 - திங்கள்

இராமநாதபுரம் மன்னர் சேதபதி மண்டபத்தில் தங்கும் கள்ளழகர் மே 8ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் அழகர்கோயில் நோக்கி புறப்படுகிறார். அப்போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை நேரத்திலும் வந்து வழியனுப்பி வைப்பார்கள். 

மே 09.2023 - செவ்வாய்

மே 9ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அப்பன் திருப்பதில் ஸ்ரீ கள்ளழகர் எழுந்துகிறார். பின்னர், காலை 10.32 மணிக்கு கள்ளழகர் கோயிலுக்கு வந்தடைகிறார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்