Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மார்கழி ஸ்பெஷல்: மார்கழி மாதம் ஏன் கோலம் போட வேண்டும்? காரணமும் மகத்துவமும்.. | Margali Kolam Importance in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
மார்கழி ஸ்பெஷல்: மார்கழி மாதம் ஏன் கோலம் போட வேண்டும்? காரணமும் மகத்துவமும்.. | Margali Kolam Importance in Tamil Representative Image.

மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி என்பார்கள். எல்லா கஷ்டங்களும் நீங்கி வரும் தைத் திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதமும் இது தான். இந்த மார்கழி மாதத்தில் தான் மூப்பது நாட்கள் பாவை விரதம் இருந்து ஆண்டாள், பெருமாளை மணாளனாகக் கொண்டாள் என்று நமக்கு தெரியும். இந்த அற்புதமான மாதத்தில் மற்றொரு சிறப்பும் உண்டு அதுதான் கோலமிடுவது. 

பொதுவாக, நமது கலாச்சாரத்தில் வீட்டின் முன்பு, சாணம் தெளித்து கோலம் போடுவது வழக்கம். ஆனால், மார்கழி மாதத்தில் கடும் பனி பெய்யும் போது அதிகாலையில் எழுந்து கோலம் போட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து பரங்கி பூவினை நடுவில் வைப்பார்கள். வழக்கமாக கோலம் போடுவதற்கு, இந்த மாதத்தில் கோலம் போடுவதற்கும் ஒரு அறிவியல் காரணம் உண்டு. 

மார்கழி ஸ்பெஷல்: மார்கழி மாதம் ஏன் கோலம் போட வேண்டும்? காரணமும் மகத்துவமும்.. | Margali Kolam Importance in Tamil Representative Image

மார்கழி கோலத்தின் மகத்துவம்

அதாவது, மார்கழி மாதத்தில் ஓசோன் படலமானது, பூமிக்கு மிக அருகில் இருக்குமாம். அந்த சமயத்தில் அதிகாலை நேரத்தில் எழுந்து வாசலில் கோலம் போடுவதன் மூலம் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். இதன் மூலம் நம் உடலில் கூடுதலாகிவிட்ட விஷவாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடை விரட்டி ஆக்சிஜனை உடல் பெறுவதால், வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. இதனால் தான், மார்கழியில் பெண்கள் அதிகாலையில் எழுந்து சாணம் தெளித்து கோலமிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். 

அதேபோல், நீங்க போடும் கோலமாவில் சிறிதளவு அரிசி மாவையும் கலந்து கோலமிட வேண்டும். ஏனென்றால், மழைக்காலம் என்பதால் உணவுக்கு வழியின்றி இரவு முழுவதும் அடைந்து கிடக்கும் சிறு உயிரினங்கள் அதிகாலை நேரத்தில் வெளியில் வந்த தமக்கு தேவையான உணவாக அரிசி மாவை வந்து உண்ணும். 
 

மார்கழி ஸ்பெஷல்: மார்கழி மாதம் ஏன் கோலம் போட வேண்டும்? காரணமும் மகத்துவமும்.. | Margali Kolam Importance in Tamil Representative Image

கோலத்தின் நடுவே பிள்ளையார் எதற்கு?

நாம் மாட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் பூசணி பூவை வைத்தும் அழங்கரிப்போம். இதற்கும் ஒரு தத்துவம் உள்ளது. அதாவது, கிராமங்களில் மார்கழி முதல் தேதி அன்று ஒரு சாண பிள்ளையார், வைக்கத் தொடங்கி 30 நாட்களும் வரிசையாக அதிகப்படுத்திக் கொண்டே போவார்கள். இந்தப் பிள்ளையாரை கோலத்தின் மீது மண்ணில் வைக்கக்கூடாது. அரச இலையிலோ அல்லது ஆள இலையின் மீது வைக்கலாம். இந்தப் பிள்ளையாரை பிடித்து வைக்கும் பெண்கள் மனதார பிள்ளையாரை பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். 

நம் பிடித்து வைத்த சாண பிள்ளையாரை எல்லாம் சேகரித்து வைத்து தை மாத தொடக்கத்தில், கன்னிப் பெண்கள் அனைவரும் சேர்ந்து, நீர் நிலைகளில் கொண்டு போய் கரைத்து விடுவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் திருமணத்தடை இருந்தாலும் அது விலகிவிடும். நகர் பகுதிகளில் சாணம் கிடைக்காது என்பதால், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதன் நடுவே பூ வைத்து கோலத்தின் மீது வைத்துக் கொள்ளலாம். இதுவும் சிறப்பே.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்