Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பது எப்படி.? கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விதிமுறைகள்..!

Gowthami Subramani Updated:
ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பது எப்படி.? கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விதிமுறைகள்..!Representative Image.

அல்லாவின் விருப்பத்திற்கேற்ப நோன்பு இருந்து, அதிக ஈடுபாட்டுடன் அல்லாவின் கருணையைப் பெற மேற்கொள்ளும் செயல் சிறப்பைத் தரும். இஸ்லாமியர் ஒவ்வொருவரும் நோன்பைக் கடைபிடித்து வருவதன் மூலம் உடல் மற்றும் மன வலிமை அடைவர் என்று கூறலாம்.

இந்த நோன்பானது ஒவ்வொரு முஸ்லீமும் இருக்க வேண்டிய கடமை ஆகும். நோன்பு இருப்பது என்பதும் சாதாரண விஷயம் அல்ல. இந்த நோன்பு இருக்கும் நேரத்தில் நாம் அறியாத சில விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, ரமலான் நோன்பு குறித்து நன்கு அறிந்து இருப்பது அவசியம். இந்த நோன்பை மேற்கொவதற்கு முன்னதாக அதன் விதிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பது எப்படி.? கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விதிமுறைகள்..!Representative Image

தொழுகைக்கு முன்

நோன்பை ஆரம்பிப்பதற்கு முன்னரும் முறை கையாள்வது அவசியம். நோன்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாக எதுவும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. சாப்பிடாமல் நோன்பை ஆரம்பிப்பது செல்லாது எனக் கூறலாம். எனவே, நோன்பை ஆரம்பிக்கும் முன்னதாக சஹர் உணவைச் சேர்த்து உண்ண வேண்டும். அதிலும் குறிப்பாக, ஃபஜர் தொழுகை ஆரம்பிப்பதற்கு முன்னதாக உணவை உட்கொள்ள வேண்டும்.
 

ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பது எப்படி.? கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விதிமுறைகள்..!Representative Image

தாமதம் இல்லாமல்

முஸ்லீம் நோன்பைப் பொறுத்த வரை, நோன்பு ஆரம்பிக்கும் முன் எப்படி உணவை உட்கொண்டு ஆரம்பிக்கிறோமோ, அது போல, சூரிய அஸ்தமனம் ஆன உடன் தாமதப்படுத்தாமல் விரைவாக நோன்பை முடிக்க வேண்டும். இது இஸ்லாமியர்களின் நோன்புகளில் முக்கியமான ஒன்று.
 

ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பது எப்படி.? கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விதிமுறைகள்..!Representative Image

ஆரம்பிக்கும் மற்றும் முடிக்கும் முறை

நோன்பு இருக்கும் சமயத்தில் அவர்களை அறியாமல் தண்ணீர் அல்லது உணவை உட்கொள்வதால் எந்த தவறும் இல்லை. ஆனால், குறிப்பாக நோக்கத்துடன் நீர் அல்லது உணவு எடுத்துக் கொண்டால் அது நோன்பு இருப்பதற்குத் தகுதி இல்லாமல் போய் விடும்.
 

ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பது எப்படி.? கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விதிமுறைகள்..!Representative Image

மாதவிடாய் காலத்தில்

பெண்கள் நோன்பு இருக்கும் காலத்தில் மாதவிடாய் சுழற்சி ஆரம்பித்தால் நோன்பு இருப்பதைத் தவிர்த்து விட வேண்டும். சிறு துளி தான் இரத்தக்கசிவு ஏற்படுகிறது எனக் கருதி நோன்பு இருத்தல் ஆகாது. மாதவிடாய் காலம் முற்றிலும் முடிவடைந்த பிறகு மீண்டும் நோன்பை ஆரம்பிக்கலாம்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்