Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

அட்சய திருதியைப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..! | Akshaya Tritiya 2023 History and Significance

Gowthami Subramani Updated:
அட்சய திருதியைப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..! | Akshaya Tritiya 2023 History and SignificanceRepresentative Image.

Akshaya Tritiya 2023 History and Significance in Tamil: இந்து நாள்காட்டியின் படி, விசாக மாதத்தில் சந்திர நாளில் அட்சய திருதியை வருகிறது. இந்த நாள் அனைவருக்கும் சிறப்பு மிக்க நாளாக அமைகிறது.

அட்சய திருதியைப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..! | Akshaya Tritiya 2023 History and SignificanceRepresentative Image

மற்றொரு பெயர்

அட்சய திருதியை என்பது அகா தீஜ் என்றும் அழைக்கப்படும். இந்தியாவில் மிகச்சிறந்த பண்டிகையாக இருப்பதால், மக்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடுகின்றனர். அட்சய திருதியை என்றாலே, எல்லோருக்கும் ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் ஞாபகத்திற்கு வரும். அது தான் தங்கம் வாங்குவது. அதைத் தவிர இன்னும் சில விஷயங்கள் நமக்கு நற்பலன்களை அளிக்கும்.

இந்தப் புனிதமான நாளான அட்சயத் திருதியை நாளில் பக்தர்கள் செழிப்பிற்கு அடையாளமாக தங்கத்தை வாங்குகிறார்கள். இந்த நாளில் வாங்கும் தங்கத்தால், வீட்டிற்கு அதிக செல்வத்தை வரவழைக்கலாம் என்று கூறுவர்.

அட்சய திருதியைப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..! | Akshaya Tritiya 2023 History and SignificanceRepresentative Image

அட்சய திருதியை பொருள் (Akshaya Tritiya Meaning)

இந்தியாவில் புகழ் பெற்ற பண்டிகையாகக் கொண்டாடப்படும், அட்சய திருதியைக்கு இப்படியும் ஒரு பொருள் உள்ளது. இந்த அட்சயா மற்றும் திருதியா என்ற இந்த இரண்டு வார்த்தைகளுமே முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. இதில், ‘அட்சய்’ என்பது “ஒரு போதும் குறையாது” என்ற பொருள் உண்டு. இந்த நாளில் உண்ணாவிரதம் இருப்பவர்கள் வாழ்க்கையில் முடிவில்லாத வெளிச்சத்தைத் தரவல்லதாக உள்ளது. அட்சய திருதியை நாள் வைசாகி மாதத்தினுடைய ஒளிரும் பாதியில் மூன்றாம் நாளில் வருவதால், இதற்கு திரிதியா என்ற சொல் வந்தது.

அட்சய திருதியைப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..! | Akshaya Tritiya 2023 History and SignificanceRepresentative Image

அட்சய திருதியை கும்பிடுவதற்கான நல்ல நேரம் (Akshaya Tritiya 2023 Puja Timings)

அட்சய திருதியை முகூர்த்த நேரம்: ஏப்ரல் 22, 2023 அன்று காலை 07.49 மணி முதல் மதியம் 12.20 வரை

அட்சய திருதியை தொடங்கும் நேரம்: ஏப்ரல் 22, 2023 அன்று காலை 07.49 அளவில்

அட்சய திருதியை முடியும் நேரம்: ஏப்ரல் 23, 2023 அன்று காலை 07.47 மணி அளவில்

அட்சய திருதியைப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..! | Akshaya Tritiya 2023 History and SignificanceRepresentative Image

அட்சய திருதியையின் முக்கியத்துவம் (Akshaya Tritya 2023 Significance in Tamil)

அட்சய திருதியைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய உள்ளன.

இந்த நாளில் மக்கள் பல்வேறு வகையான விரதங்களைக் கடைபிடிக்கின்றனர். அட்சய திருதியை தினத்தன்று, தானம் செய்வது மிக சிறப்பாகக் கருதப்படுகிறது. இந்த தினத்தில் காலையில் எழுந்து முக்கூடலில் நீராடினால், அனைத்துப் பாவங்களும் விலகி விடும்.

அற்புதமான இந்த நாளில், விரதம் இருந்து அன்னதானம் செய்தால், புண்ணியங்கள் பெருகும் என்று கூறுவர். இந்த நாளில் மகாலட்சுமியை நினைத்து வழிபட்டால், செல்வம் பெருகும் என்பது சிறப்பு.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்