Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

மாசி மகம் விரதம் மேற்கொள்வதும் அதன் பலன்களும்.! | Masi Magam Viratham 2023

Gowthami Subramani Updated:
மாசி மகம் விரதம் மேற்கொள்வதும் அதன் பலன்களும்.! | Masi Magam Viratham 2023Representative Image.

மாசி மாதத்தில் மகா சிவராத்திரிக்குப் பிறகு வரும் நோன்பாக மாசி மகம் கருதப்படுகிறது. இந்த மாசி மகம் திருநாளில் விரதத்தை மேற்கொள்ளப்பட்டு பக்தர்கள் பல்வேறு விதமான பலன்களைப் பெறுவர். "மாசி பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்" என நம் முன்னோர்கள் கூறியதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இது முற்றிலும் உண்மை ஆகும். அதாவது ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய மகம் நட்சத்திரத்தை விட மாசி மாதத்தில் வரக்கூடிய மகம் நட்சத்திரத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.
 

மாசி மகம் விரதம் மேற்கொள்வதும் அதன் பலன்களும்.! | Masi Magam Viratham 2023Representative Image

மாசி மகம் விரதம்

மாசி மகம் என்ற சிறப்பான நாளை கடலாடும் நாள், தீர்த்தமாடும் நாள் என அழைப்பர். இந்த நாளில் விரதம் மேற்கொண்டு கடவுளை வணங்கி பல்வேறு விதமான தானங்களை செய்வர். இது சிறப்பான பலன்களைத் தரும். எத்தனையோ விரதங்கள் இருப்பினும், மாசி மாதத்தில் வரக்கூடிய மகம் நட்சத்திரத்தில் இருக்கும் விரதத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.
 

மாசி மகம் விரதம் மேற்கொள்வதும் அதன் பலன்களும்.! | Masi Magam Viratham 2023Representative Image

மாசி மகம் விரதம் இருக்கும் முறை

இந்த சிறப்பான நாளில் விரதத்தை மேற்கொள்பவர்கள், கீழ்க்கண்ட வழிமுறையைப் பின்பற்ற வேண்டும்.

✤ முதலில் காலையில் நேரமாக எழுந்து ஆறு, கடல், குளம் போன்ற புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். அதன் பிறகு உலர்ந்த ஆடைகளை அணிந்து சிவன் கோவிலுக்குச் சென்று சிவனே மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

✤ மேலும், சிவபெருமானின் சிறப்பைப் போற்றிக் கூறும் வகையில் திருவாசகம், தேவாரம் போன்ற பாடல்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.

✤ இதில், முழு நேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்வதுடன் இரவு நேரத்தில் பால், பழங்களை உண்ணலாம். 

✤ மாசி மகா தினத்தில் இறைவனே மட்டும் மனதில் நிறுத்தி ஒரே சிந்தனையோடு வணங்க வேண்டும்.

✤ இந்த தினத்தின் மற்றொரு சிறப்பாக, குழந்தையில்லாத தம்பதிகள், குழந்தை வரம் வேண்டி விரதமிருந்து அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

✤ அதே போல, மாசிமக நாளில் புனித நீராடி இறைவனை வணங்கும் போது தோஷங்கள் அனைத்து நீங்கி மகிழ்ச்சியுடன் இருப்போம்.

மாசி மகம் விரதம் மேற்கொள்வதும் அதன் பலன்களும்.! | Masi Magam Viratham 2023Representative Image

நைவேத்தியம்

இந்த சிறப்பு நாளில் அம்பிகைக்கு, சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு வழிபடுவது சிறப்பு.

பலன்

மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடும் போது, சிவபெருமானின் பலன் முற்றிலும் கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்