Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

முருகப் பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரம் 2023ல் எப்போது வருகிறது? | When is Panguni Uthiram 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
முருகப் பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரம் 2023ல் எப்போது வருகிறது? | When is Panguni Uthiram 2023 in TamilRepresentative Image.

தமிழ்க்கடவுள் முருகனை மனதில் நினைத்து வழிபடும் தினமே பங்குனி உத்திரம். இது வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம் போன்ற திருவிழாக்களைப் போல் பங்குனி உத்திரம் என்று சொன்னாலே முருகப் பெருமான் தான் நினைக்கு வருவார். பொதுவாக ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும் விரதம் இருப்பதும் வழக்கம்.

ஆனால், பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவம் உண்டு. அதுமட்டுமல்லாமல், மற்ற மாதங்களை ஒப்பிடுகையில் பங்குனி மாதத்தில் தான் அதிக தெய்வத் திருமணங்கள் நடைபெறுமாம். இது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அப்போ எவ்வளவு சிறப்பு வாய்ந்த மாதமாக இருக்கும் என்று நீங்களே யோசித்து பாருங்கள்.

முருகப் பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரம் 2023ல் எப்போது வருகிறது? | When is Panguni Uthiram 2023 in TamilRepresentative Image

பங்குனி உத்திரம் சிறப்பு:

தமிழ் மாதங்களில் 12 வது மாதமான பங்குனியும், 27 நட்சத்திரங்களில் 12 வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் இணையும் புனித நாள் தான் பங்குனி உத்திரம் என்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக, இந்த நன்னாளில் பக்தர்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்தும், தேர் இழுத்தும் அவர்களின் வேண்டுதலின் நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள். இந்த நாளில் அன்றைய தினத்தில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்,

  • தர்ம சாஸ்தாவான ஸ்ரீஐயப்பன் சுவாமி இந்த நாளில் தான் அவதரித்தார்.
  • கலைமகள் பிரம்மாவின் நாவில் அமர்ந்ததும் இந்த அற்புத நாளில் தான்.
  • அதேபோல், பார்க்கவ மஹரிஷியின் மகளாக மகாலட்சுமி உதித்ததும் இந்த நன்னாளில் தான்.
முருகப் பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரம் 2023ல் எப்போது வருகிறது? | When is Panguni Uthiram 2023 in TamilRepresentative Image

பங்குனி உத்திர விரதம் எதற்கு?

முருக பெருனுமானுக்கு விரதம் இருந்து மணம் உருக வேண்டினால் அனைத்தையும் நிறைவேற்றி காட்டும் வல்லமை படைத்தவர். பொதுவாக முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்பிறகு, சஷ்டி விரதம் அதற்கு ஒருபடி மேல். திருமணமான தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி விரதம் இருப்பார்கள்.

இதேபோல், பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தால் திருமணமான தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்குமாம். திருமண தடையும் நீங்குமாம். முருகப்பெருமானின் அருள் கிடைக்கவும், திருமண தடைகள் விலகி விரைவில் கல்யாண வரம் கிடைக்கவும், கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கவும் பங்குனி உத்திரம் இருங்க.

முருகப் பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரம் 2023ல் எப்போது வருகிறது? | When is Panguni Uthiram 2023 in TamilRepresentative Image

பங்குனி உத்திரம் 2023ல் எப்போது?

இவ்வளவு நன்மைகள் கொண்ட நன்னாளான பங்குனி உத்திரம் இந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி வருகிறது. உத்திர நட்சத்திரத்தை பொறுத்தவரை, ஏப்ரல் 4ஆம் தேதி காலை 10.29 மணி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி பிற்பகல் 12.09 மணி வரை இருக்கிறது. முந்தைய நாளே உத்திரம் நட்சத்திரம் தொடங்கினாலும் பெளர்ணமியும், உத்திர நட்சரத்திரமும் சேரும் தினம் தான் பங்குனி உத்திரம் என கருதப்படுவதால் ஏப்ரல் 05ஆம் தான் பங்குனி உத்திரமாக கணிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பெளர்ணமி திதி காலை 10.17 மணிக்கும் தொடங்கி ஏப்ரல் 06ஆம் தேதி காலை 10.58 மணி வரைக்கும் இருக்கும். 

எனவே,  அந்நாளில் அருகில் உள்ள முருகன் அல்லது சிவன் கோயிலுக்குச் சென்று சிவனையும் முருகனையும் வழிபட்டு பெருமானின் அருளையும் சகல நன்மைகளையும் பெறுங்கள்.

Panguni Uthiram Timings 2023:

Uthiram Nakshatra Tithi Starts | April 04, 2023 at 10.29 AM

Uthiram Nakshatra Tithi Ends | April 05, 2023 at 12.09 PM


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்