Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sai Baba History in Tamil Part 8: பாபாவின் எளிமையான தோற்றத்திற்கு இது தான் காரணமா….?

Gowthami Subramani July 21, 2022 & 06:50 [IST]
Sai Baba History in Tamil Part 8: பாபாவின் எளிமையான தோற்றத்திற்கு இது தான் காரணமா….?Representative Image.

Sai Baba History in Tamil Part 8: கடந்த பதிவில் சாந்த் பட்டீல் என்பவரின் காணாமல் போன குதிரையை சாய்பாபா ஒரு வழியைக் காட்டி குதிரையைக் காண்பித்து தந்தார். இன்னும் சில பல்வேறு அற்புதங்களை சீரடியில் நிகழ்த்தியிருக்கிறார். அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். மேலும், வியாழக்கிழமை தோறும் சாய்சத்சரித்திரத்தைப் படிப்பது மிகவும் நல்லது என்று கூறுவர். சாய் நாதரின் சத்சரித்திரத்தைப் படித்தால், நமக்கு வேண்டும் அத்தனையும் சாய்பாபா அருள்வார் எனக் கூறுவர்.


Sai Baba History in Tamil Part 7: சாய்பாபாவிடம் இப்படி வேண்டிக் கொள்ளுங்கள்… நீங்கள் எதிர்பார்த்த அத்தனையும் உங்களுக்குக் கிடைக்கும்…!


சாய்பாபா என அழைப்பதற்குக் காரணம்

சாய்பாபா வழிகாட்டுதலின் படி, குதிரையைக் கண்டுபிடித்த பாட்டீல், சாய்பாபாவிற்கு நன்றி கூறினார். அதே சமயம் சாந்த் பட்டீலின் மகளுக்குத் திருமணம் ஆயிற்று. இதற்கு பாபா நேரில் வந்து ஆசி கூற வேண்டும் என விரும்பி, “யாசாயி” எனக் கூறி காலில் விழுந்து வணங்கினார். இதன் பொருள் “உங்களை வரவேற்கிறேன்” என்பதாகும். அன்று முதல் மக்கள் அனைவரும் சாய்பாபா என அழைக்கத்தொடங்கினர்.

சாய்பாபாவின் இருப்பிடத்தில் இருப்பவை

சாய்பாபா இருக்கும் துவாரகமாயியில் ஒரு புறம் அக்னி குண்டம் இருக்கும். அதன் அருகில், சாய்பாபா பத்மாசனம் போட்டு அமர்ந்திருப்பார். இது இந்துக்கள் புனித யாகம் செய்வது போல காட்சியளிக்கிறது. மற்றொரு பக்கம் நீர் நிறைந்த மண்பாண்டங்களை வைத்திருப்பார்கள். இதன் அருகில் புகை பிடிக்கும் குழாயை வைத்திருப்பார். இந்த காட்சி முஸ்லீம் பெரியவரைப் போல காட்சியளிக்கும். முஸ்லீம்கள், இந்துக்கள் என அனைவரும் இவரை வணங்கி ஆசி பெற்றுச் செல்வர்.


Sai Baba History in Tamil Part 6: தண்ணீரில் விளக்கு ஏற்ற முடியுமா..? சாய்பாபா செய்தார்….! எப்படினு பாருங்க….


சாய்பாபா தோற்றம்

சில சமயங்களில் இவர் நெற்றியில் நாமமோ, சந்தனமோ இட்டுக் கொள்வார். ஆனால், தலையில் பக்கீரைப் போன்று துணி கட்டிக் கொண்டிருப்பார். ஆனால், கண்களில் எப்போதும் அணையாத ஒளி தோன்றும். இவரைத் தமக்கு உகந்த ஆசானாகவே முஸ்லீம்களும், இந்துக்களும் கருதுகின்றனர். அதன் படி, இவரிடமிருந்து முறைப்படி ஆசி பெற்றுச் செல்வர்.

கடை மாம்பழம் வேண்டாம், தோட்டத்து மாம்பழத்தைக் கொடு

பாபு சாகிப் ஜோக் என்ற ஒரு பக்தர், தனது தோட்டத்திலிருந்து மாங்காய்களை பறித்துக் கொண்டு வந்தார். ஆனால், அவை எல்லாம் காயாக இருந்தது. பின்பு, கடைக்குச் சென்று நன்றாகக் கனிந்த மாம்பழங்களை வாங்கினார். இவ்வாறு கடையில் வாங்கிய கனிந்த பழங்களைச் சாய்பாபாவிற்குச் சமர்ப்பிக்க கொண்டு வந்து, சாய்பாவின் காலடியில் சமர்ப்பித்தார். ஆனால், பாபாவோ அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். உடனே சாய்பாபா, அந்த பக்தரிடம் கேட்ட கேள்வி எல்லோரையும் ஆச்சரியப் பட செய்தது. “கடையில் வாங்கிக் கொண்டு வந்த மாம்பழங்களை எனக்குக் கொடுக்கிறாயா….? உன்னுடைய தோட்டத்துப் பழங்களை எனக்குக் கொடுக்ககூடாதா” என்று கேட்டார். நாம் தோட்டத்து மாம்பழங்களை வைத்திருப்பதையும், கடையில் வாங்கிய மாம்பழத்தை சாய்பாபாவிற்கு சமர்பித்தது முதலியவை சாய்பாபாவிற்கு எப்படி தெரியும் என்ற சந்தேகத்தில் இருந்தான். பின், தெரியாமல் வைத்திருந்த மாங்காய்களை சாய்பாபாவிடம் கொடுத்தார். சாய்பாபா மாங்காய்களை கடித்து “எவ்வளவு இனிப்பாக இருக்கிறது” என்று வியந்தார். மேலும், அவற்றின் சில காய்களை எடுத்து, பக்தர்களுக்கும் அளித்துள்ளார். பழங்களின் இனிமை பிரமாதமாக இருக்கிறது என்றும், பழத்தின் இனிமை மனத்தில் தான் இருக்கிறது என்றும் கூறி சிரித்தார் சாய்பாபா…..


Sai Baba History in Tamil Part 5: கோவிலில் பிரகாசிக்கும் சாய்பாபாவுக்கு ஆரம்ப காலத்தில் கோவிலில் அனுமதி இல்லையாம்….! என்ன காரணம் தெரியுமா..?


சாய்பாபா முன் கூட்டியே செய்த செய்கையால், ஊர் மக்கள் அனைவரும் பெரிய விளைவிலிருந்து காப்பாற்றப் பட்டனர். அது என்ன நிகழ்வு என்பதை வரும் பதிவில் காணலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Sai Baba Story Tamil Language | Sai Baba Life History Tamil | Sai Baba History in Tamil | Wikipedia | Shirdi Sai Baba Temple History in Tamil | Akkaraipatti Sai Baba Temple History in Tamil | Sai Baba Temple History in Tamil | Shirdi Sai Baba History Tamil | Sai Baba History in Tamil | History of Shirdi Sai Baba | Sai Story Tamil | Sai Baba Story Tamil | Sai Baba Stories in Tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்