Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sai Baba History in Tamil Part 7: சாய்பாபாவிடம் இப்படி வேண்டிக் கொள்ளுங்கள்… நீங்கள் எதிர்பார்த்த அத்தனையும் உங்களுக்குக் கிடைக்கும்…!

Gowthami Subramani July 14, 2022 & 12:15 [IST]
Sai Baba History in Tamil Part 7: சாய்பாபாவிடம் இப்படி வேண்டிக் கொள்ளுங்கள்… நீங்கள் எதிர்பார்த்த அத்தனையும் உங்களுக்குக் கிடைக்கும்…!Representative Image.

Sai Baba History in Tamil Part 7: விளக்கு எரிக்க எண்ணெய் தராத நபர்களுக்கு பதிலடி கொடுக்கும் தண்ணீரில் விளக்கெரித்து சாகசம் செய்திட்டார் சாய்பாபா. இவரது இந்த செய்கையால், இவரை நம்பிடாத அனைவரும் இவரின் மேல் அதிக அளவிலான நம்பிக்கை வைக்கத் துவங்கினர். இது போன்று சாய்பாபா சாகசம் செய்த நிகழ்ச்சியை கடந்த வாரம் பார்த்தோம். இந்தப் பதிவில், சாய்பாபா செய்த அற்புத நிகழ்ச்சியால், ஊர் மக்கள் மட்டுமல்லாமல் அயல் நாட்டில் வசிக்கும் மக்களாலும் போற்றப்பட்டார்.


Sai Baba History in Tamil Part 6 | தண்ணீரில் விளக்கு ஏற்ற முடியுமா..? சாய்பாபா செய்தார்….! எப்படினு பாருங்க….


வழிபாட்டுத்தலங்கள்

பாபாவின் இந்த அற்புத சக்திகளைக் கண்ட மக்கள், அவரை வணங்கும் நோக்கத்தில் சாய் பாபா இருக்கும் மசூதியும், அதனைச் சுற்றி உள்ள இடங்களும் வழிபாட்டுத் தலங்களாகி விட்டன. பாபாவை ஒரு முஸ்லீம் பெரியவர், முஸ்லீமாகக் கருதினார். இதனால், அவர் திருக்குர்ஆன் வாசகங்களைப் படித்துக் காண்பித்துள்ளார். இந்த குரானின் அரிய கருத்துக்கள் பாபாவின் உரைகளில் இடம் பெற்றது. சாய் பாபாவைக் காண ஏராளக்கணக்கானோர் வரும் போது, அவர்களுடன் சேர்ந்து பாபாவும் பாடி, ஆனந்த நர்த்தனம் ஆடுவார்.

காணாமல் போன குதிரை

ஒரு நாள், பாபா தங்கியிருந்து வேப்பமரத்தடியில், அவரைத் தேடி அவுரங்க பாத்தில் வசித்த சாந்த் பட்டீல் என்ற தன்வந்தர் வந்தார். சாந்த் பட்டீலுக்கு அவருக்கு பிடித்தமான அலங்காரக் குதிரையில் செல்வதற்கு ஏற்ற குதிரையும் உண்டு. ஒரு நாள், அந்த குதிரை காணாமல் போய்விட்டது. இந்த வேதனையைத் தாங்க முடியாமல், சாந்த் பட்டீல் குதிரையைத் தேடி இரவு பகல் பாராது அலைந்து தேடினார். அவர், குதிரை அலங்காரமாக அணியும் சேணத்தைத் தோளில் சுமந்த படி, குதிரையைத் தேடி அலைந்தார்.

சாய்பாபா மற்றும் சாந்த் பாட்டீல்

வேப்ப மரத்தடியில் சாய்பாபா அமர்ந்திருந்த போது, அவரிடம் வந்த சாந்த் பாட்டீல், “சுவாமி, ஏன் இப்படி இங்கு உட்கார்ந்திருக்கிறீர்கள்? உங்களுக்கு வேறு இடம் கிடைக்க வில்லையா..? என்று சாய்பாபாவிடம் கேட்டார் பட்டீல். அதனைக் கேட்ட சாய்பாபா, “குதிரை அணிந்த சேனத்தைத் தோளில் சுமப்பதை விடவா, இது பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது” என்று பட்டீலிடம் கேட்டார். உடனே பட்டீலுக்கு “திடுக்” என்று ஆனது. நாம் வந்ததற்கான காரணத்தை இன்னும் கூறவில்லையே, எப்படி இவருக்குத் தெரிந்ததென்று தெரியாமல் நின்றார். அதன் பின் சாய்பாபாவிடம், “சுவாமி..! உங்களை நான் குறைத்து மதிப்பிட்டதாக என்ன வேண்டாம். என் குதிரை வண்டியில் பூட்டியிருந்த குதிரை காணாமல் போனது. அதனைத் தேடி வந்தேன். குதிரையைக் கண்டுபிடிக்க நீங்கள் வழிகாட்ட முடியுமா” என்று கேட்டார் சாந்த் பட்டீல்.


Saibaba History in Tamil Part 5: கோவிலில் பிரகாசிக்கும் சாய்பாபாவுக்கு ஆரம்ப காலத்தில் கோவிலில் அனுமதி இல்லையாம்….! என்ன காரணம் தெரியுமா..?


காணாமல் போனது குதிரை கிடைத்த சம்பவம்

சாய்பாபாவும், அவர்கள் நின்ற இடத்திலிருந்து ஒரு பக்கமாகக் கையைக் காட்டினார். அங்கு சென்று சாந்த் பட்டீல் பார்த்த போது, அந்த குதிரையைக் கண்டுபிடித்தார். வெகு நாள்களாகத் தேடி, கிடைக்காத குதிரை இருக்கும் இடத்தைக் கூறியுள்ளார் சாய்பாபா. அதன் படி, என்ன வேண்டும் என்று கேட்காமலேயே சாந்த் பட்டீலுக்கு சாய்பாபா உதவியுள்ளார்.

மேலும், பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் வேண்டிக் கொள்வாராயின், அவர்களுக்குக் கண்டிப்பாக என்னுடைய ஆசி உண்டு என்று கூறியுள்ளார் சாய்பாபா.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Sai Baba Story Tamil Language | Sai Baba Life History Tamil | Sai Baba History in Tamil | Wikipedia | Shirdi Sai Baba Temple History in Tamil | Akkaraipatti Sai Baba Temple History in Tamil | Sai Baba Temple History in Tamil | Shirdi Sai Baba History Tamil | Sai Baba History in Tamil | History of Shirdi Sai Baba | Sai Story Tamil | Sai Baba Story Tamil | Sai Baba Stories in Tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்