Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sai Baba History in Tamil Part 6: தண்ணீரில் விளக்கு ஏற்ற முடியுமா..? சாய்பாபா செய்தார்….! எப்படினு பாருங்க….

Gowthami Subramani July 07, 2022 & 09:15 [IST]
Sai Baba History in Tamil Part 6: தண்ணீரில் விளக்கு ஏற்ற முடியுமா..? சாய்பாபா செய்தார்….! எப்படினு பாருங்க….Representative Image.

Sai Baba History in Tamil Part 6: கடந்த வாரத்தில், பாபாவை எதனால், மக்கள் அழைக்கத் தயங்கினார்கள் என்ற காரணத்தையும், அதன் பிறகு அவர் தங்கியிருந்த இடத்தைப் பற்றியும் கண்டோம். இதில், பாபாவை மக்கள் அனைவரும் எவ்வாறு ஏற்றுக் கொண்டனர். அப்படி பாபா, எந்த அதிசயத்தை நிகழச் செய்தார் என்று பார்ப்போம்.


Sai Baba History in Tamil Part 5: கோவிலில் பிரகாசிக்கும் சாய்பாபாவுக்கு ஆரம்ப காலத்தில் கோவிலில் அனுமதி இல்லையாம்….! என்ன காரணம் தெரியுமா..?


துவாரக மாயி

மக்கள ஒதுக்கிய பின், பாபா அன்று முதல் வேப்ப மரத்தடியில் தங்கினார். அதுவே அவருக்கு புனித தலமாகி விட்டது. அந்த வேப்பமரத்தடியில் உள்ள இலைகளைப் பிரசாதமாக எடுத்துச் செல்வர். மேலும், அதில் சில இலைகள் கசப்பதே இல்லை எனவும் கூறுகின்றனர். இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் பாபாவை ஏற்று அவரை வணங்கத் தொடங்கினர். இவ்வாறு கோவிலுக்கு அருகில் பாபா தங்கிய இடத்தை “துவாரக மாயி” என போற்றினர். இந்த இடத்திற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரையை மேற்கொள்கின்றனர்.

தண்ணீரில் விளக்கெறித்த சாய்பாபா

சாய்பாபா தங்கிய மசூதியில் விளக்கு எரித்தனர். இதனால், அந்த பகுதியில் இருந்த அக்கம் பக்கத்தினர் விளக்கிற்காக எண்ணெய் கொண்டு வந்தனர். இவ்வாறு தினந்தோறும் எண்ணெய் கொண்டு வரத் தொடங்கினர். ஆனால், திடீரென்று விளக்குகளுக்கு எண்ணெய் கொண்டு வர நிறுத்தி விட்டனர். மசூதிக்கு எண்ணெய் வந்து சேராததால், விளக்கு எரியவில்லை. இதனால், மாலை நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. அந்த சமயத்தில் பாபா விளக்குகளில் திரியை வைத்துத் தண்ணீரை ஊற்றினார். பின், இரவு நேரம் வந்ததும் விளக்குகளை ஏற்றினார். விளக்குகள் பிரகாசமாக எரியத் தொடங்கின.


Sai Baba History in Tamil Part 4: உயிர் போன சிறுவனுக்கு, மீண்டும் உயிர்பிச்சை அளித்த சாயிபாபா….!


எண்ணெய் தராதவர்தமைக் கண்டு சிரித்தார்

மக்கள் இந்த அதிசயத்தைக் காண ஓடோடி வந்தனர். எப்படி தண்ணீரில் விளக்கெறிக்க முடியும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் அனைவரும் சாய் பாபாவை முழுவதுமாக நம்பி, அவர் தெய்வீக சக்தி வாய்ந்தவராகக் கருதப்படுகிறார் என்று நம்பினர். எண்ணெய் தராத வியாபாரிகளும் தான் செய்த தவற்றுக்கு மன்னிப்பு அருளும் படி வேண்டிக் கொண்டனர்.

பாபா கைப்பட்டால் வியாதிகள் குணமாகும்

இந்த அதிசய சம்பவத்திற்குப் பிறகு, சாய் பாபா மீது இருந்த அனைத்து சந்தேகங்களும் விலகி, அவருடைய பக்திப் பூர்வமான உரையாடலை அனைவரும் கேட்கத் தொடங்கினர். அது மட்டுமல்லாமல், பாபா அந்த பகுதியில் இருக்கும் மலைக்காட்டிற்குச் சென்று மூலிகைகளைக் கொண்டு வருவார். இந்த மூலிகைகளைப் பயன்படுத்தி, வியாதியால் துன்புறும் மக்களைக் குணப்படுத்துவார். ஒரு சில சமயம், பாபாவின் சக்தியால் அவர் தொட்ட உடனே உடம்பில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் விலக்கச் செய்வார். வியாதிகள் அனைத்தும் குணமாகும் என்றும் கூறுவர்.


Sai Baba History in Tamil Part 3: சாய்பாபாவைக் காப்பாற்றிய கோபால் ராவ் குரு….! ஆனால், குருவுக்கு நேர்ந்த விபரீதம் என்ன தெரியுமா..?


பாபா அன்று உட்கார்ந்திருந்த கருங்கல் கூட அந்த இடத்திலேயே இன்றும் இருக்கிறதாம். சாய் பாபா கோவிலுக்குச் செல்கிறவர்கள் இதனை வணங்காது வர மாட்டார்கள் என கூறுகின்றனர். மேலும், அதன் இடதுபக்கத்தில் சற்றே உயரமான ஒரு அக்னி குண்டம் இருக்குறது. அது “துனி” என அழைக்கப்படுகிறது. இதில் கிடைக்கக் கூடிய புனித சாம்பலை “உதி” எனக் கூறுவர். இதனை விபூதியாக எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த சாய்பாபாவின் கோவிலுக்குச் செல்ல யாருக்குத் தான் ஆசை இருக்காது.

சாய்பாபா குடியிருக்கும் அந்த பகுதியில் நிகழ்த்திய இன்னொரு சாகசம் என்ன தெரியுமா..? அதனைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Sai Baba Story Tamil Language | Sai Baba Life History Tamil | Sai Baba History in Tamil | Wikipedia | Shirdi Sai Baba Temple History in Tamil | Akkaraipatti Sai Baba Temple History in Tamil | Sai Baba Temple History in Tamil | Shirdi Sai Baba History Tamil | Sai Baba History in Tamil | History of Shirdi Sai Baba | Sai Story Tamil | Sai Baba Story Tamil | Sai Baba Stories in Tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்