Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,181.72
-157.72sensex(-0.21%)
நிஃப்டி22,533.55
-36.80sensex(-0.16%)
USD
81.57
Exclusive

பங்குனி உத்திரம் சிறப்புக்கள் மற்றும் விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் | Panguni Uthiram 2023 Viratham in Tamil

Priyanka Hochumin Updated:
பங்குனி உத்திரம் சிறப்புக்கள் மற்றும் விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் | Panguni Uthiram 2023 Viratham in TamilRepresentative Image.

தமிழகத்தில் பங்குனி உத்திரம் மிகவும் கோலாகலமான கொண்டாடப்படும் விசேஷ நாளாகும். தமிழ் மாதத்தில் 12வது மாதம் "பங்குனி" மற்றும் 27 நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் "உத்திரம்". இவை இரண்டும் ஒன்றாக சேரும் புனித நாளே பங்குனி உத்திரமாகும். இந்நாள் முற்றிலுமாக முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து, விசேஷ பூஜைகள் செய்து வழிபடும் நாளாகும். இன்றைய நாளில் முருகனுக்கு விரதம் இருப்பதால் நமக்கு நேர்ந்தது அல்லது நேரப்போகும் அனைத்து கெட்ட விஷயங்களும் விலகி வாழ்க்கையில் நல்லதே நடக்கும் என்பது ஐதீகம்.

பங்குனி உத்திரம் சிறப்புக்கள் மற்றும் விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் | Panguni Uthiram 2023 Viratham in TamilRepresentative Image

பங்குனி உத்திரம் விரதம் இருக்கும் முறை

இன்றைய அருமையான தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் விளக்கேற்றி முருகனை மனதார வணங்க வேண்டும். பின்னர் நாள் முழுவதும் முருகப்பெருமானை போற்றும் வகையில் இருக்கும் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் அல்லது திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களை படிக்க வேண்டும். ஒரு வேளை இவற்றை செய்ய முடியாதவர்கள் நாள் முழுக்க "ஓம் சரவண பவ" என்னும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் ஒரு வேலை மட்டும் உணவு எடுத்துக்கொண்டு நாள் முழுக்க விரமிருக்க வேண்டும். பிறகு மாலையில் அருகில் இருக்கும் முருகன் கோவிலில் அர்ச்சனை செய்து விரதத்தை முடிக்கலாம். இதுவே வயதானவர், உடல் நிலை சரியில்லாதவர் மற்றும் கர்பிணிகள் நாள் முழுக்க விரதம் இருக்க முடியாமல் போனால் பால், பழம் சாப்பிடலாம்.

பங்குனி உத்திரம் சிறப்புக்கள் மற்றும் விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் | Panguni Uthiram 2023 Viratham in TamilRepresentative Image

பங்குனி உத்திரம் திருமண விரதம்

நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் கூடிய விரையில் திருமணம் நடைபெற பங்குனி உத்திரம் நாளன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நல்ல வரன் அமையும். இதனால் தான் பங்குனி உத்திரம் விரதம் இருப்பதற்கு திருமண விரதம் என்னும் மற்றொரு பெரியாரும் உள்ளது. மேலும் இன்றைய நாளில் ரங்கநாத பெருமாள் கோவிலில் நடக்கும் வைபவத்தை காண்பதால் களத்திர தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.

பங்குனி உத்திரம் கணவன் மனைவி விரதம்

திருமணம் ஆகி கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்க, நீண்ட ஆயுளோடு இருக்க, கடன் இல்லாமல் செல்வ செழிப்போடு வாழ பங்குனி உத்திரம் விரதம் உங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும்  சுமங்கலிகள் அன்றைய தினத்தில் கோவிலுக்கு சென்று புதுத்தாலி பெருக்கிக் கட்டிக்கொள்வது வழக்கம்.

பங்குனி உத்திரம் சிறப்புக்கள் மற்றும் விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் | Panguni Uthiram 2023 Viratham in TamilRepresentative Image

இறை நிலையை அடைய பங்குனி உத்திரம் விரதம்

எவரேனும் ஒருவர் தொடர்ந்து 48 ஆண்டுகள் பங்குனி உத்திரம் அன்று விரதம் இருந்து வழிபடுகிறாரோ அவருக்கு அடுத்த ஜென்மமானது தெய்வப்பிறவியாக அமையும். மேலும் அவர் மனிதர்களின் பிறப்பு மற்றும் இறப்பின் கால சக்கரத்தில் இருந்து விடுபட்டு மோட்ச நிலையை அடைவார்கள் என்று புரங்கள் குறிப்பிடுவதாக பலரும் கூறுகின்றனர்.

பங்குனி உதிரத்தின் மற்ற சிறப்புக்கள் 

அன்றைய நாளில் தான் முருகப்பெருமான் வள்ளியையும், சிவன் பார்வதியையும், ராமன் சீதையையும் மற்றும் பல பகவான்கள் திருமணம் செய்துக்கொண்ட அமோகமான நாளாகும்.

பங்குனி உத்திரம் தினத்தில் தான் ஐயப்பன் பூமியில் சபரிமலையில் அவதரித்தார்.

மேலும் கலைமகள் பர்மாவின் நாவில் அமர்ந்ததும் இந்த விசேஷ நாளில் தான்.

அதே போல மகாலட்சுமி பூமியில் தோன்றியதும் இந்நாளில் தான் என்றால் நம்புவீர்களா.

இதனை மிகுந்த சிறப்புகளைக் கொண்ட பங்குனி உத்திரம் அன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டு நன்மையை பெறுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்