பிறர் பொருள் மீது நாட்டமில்லாத உன்னத குணம் கொண்டவர்கள் சுவாதி நட்சத்திரக்காரர்கள். அதேநேரத்தில் தனக்குரிய பொருளை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்காத பிடிவாதம் குணம் கொண்டவர்கள் ஆவர். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் சுவாதி நட்சத்திரக்காரருக்கு உரிய கோவில் எது என்பதை அறிய இந்த பதிவு உதவியாக இருக்கும்.
Also Read : அஸ்தம் நடசத்திரக் கோவில் எங்கு உள்ளது...?
அமைதியான போக்கும் பிடிவாத குணமும் கொண்ட சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய கோவில் அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில் ஆகும். இராகு பகவானை அதிபதி கொண்ட சுவாதி நட்சத்திரம் பிரகாசமான நட்சத்திரமாகும். தன்னடக்கத்தின் உச்சமாக திகழும் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாத்திரீஸ்வரர் கோவில் செல்வதால் திருமண தடை போன்ற பிரச்சனைகள் அகன்று, நலமான வாழ்க்கை வழி அளிக்கும்.
சுவாதி எனும் புனித சொல் சிவன், விஷ்ணு ஐக்கிய ஸ்வரூப சக்தி நிறைந்த சொல்லாகும். எனவே சுவாதி நட்சத்திர தினத்தில் சிவன், விஷ்ணு இருவரும் இணைந்து சித்துக்காடு தலத்தில் அருள்பாலிப்பதாக நம்பிக்கை, சுவாதி தினத்தில் வருவது சிறப்பாகும்.
Most read: பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய கோவில் எது?
படுக்கை ஜடாமுடி சித்தர், பிராண தீபிகா என்ற சித்தர்கள் நெல்லிமரத்தின் கீழ் சிவலிங்கத்தை ஸ்தாபித்து தவம் செய்தனர். சமஸ்கிருதத்தில் நெல்லி என்பதற்கு தாத்திரி ஆகும், அதுவே தாத்திரீஸ்வரர் என உருவாகியது.
கோவிலின் கட்டிடக்கலை மிகவும் உன்னதமாகும், தூண்களில் சில சித்தர்களின் சிற்பங்கள் இருப்பது கண்கவரும் விஷயமாகும். இதில் ஒரு தூணில் படுக்கை ஜடாமுடி சித்தர் உள்ளார். முக்கியமாக இத்திருத்தல மூலவருக்கு எதிரில் இருக்கும் நந்திக்கு மூக்கணாங்கயிறு இல்லை என்பது சிறப்பானது ஆகும்.
Also Read : சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கோவில் எங்கு உள்ளது?
சுவாதி நட்சத்திரக்காரருக்கான ஸ்தலமான இந்த தலத்தில் நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நெய் தீபம் ஏற்றினால் திருமண தடை நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும் திருக்கார்த்திகை, ஆடி, தை கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரத்தில் இங்குள்ள சுப்பிரமணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும்.
சென்னை பூந்தமல்லி இருந்து தண்டுரை செல்லும் வழியில் அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. தண்டுரை செல்லும் வழியில் 8 கி.மீ தூரம் சென்றால் கோவிலை அடையலாம். குறித்த நேரத்தில் மட்டுமே இந்த கோவிலுக்கு பேருந்து வசதி உள்ளது.
ரயில் மார்க்க பயணம் தேர்ந்தெடுத்தால் இறங்க வேண்டிய இடம் சென்னை ஆகும். இத்திருத்தலத்திற்கு அருகில் உள்ள விமானம் நிலையம் சென்னை ஆகும்.
கோயில் நேரம்:- காலை 8 மணி- 10 மணி வரை; மாலை 5 மணி- இரவு 7 மணி வரை
தொடர்புக்கு:- 91 94445 62335, 94447 93942
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…