Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Temple For Chithirai Natchathiram : சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கோவில் எங்கு உள்ளது?

Manoj Krishnamoorthi November 02, 2022 & 07:00 [IST]
Temple For Chithirai Natchathiram : சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கோவில் எங்கு உள்ளது?Representative Image.

பிறர் மனதை புரிந்து தனக்கு வேண்டும் என்பதை பெற்று கொள்ளும் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு உள்ள தோஷங்களை நிவர்த்தி செய்ய செல்ல வேண்டிய சித்திரை நட்சத்திரத்திற்கு உரிய கோவில் பற்றி அறிய பின்தொடரவும்.

Also Read :  அஸ்தம் நடசத்திரக் கோவில் எங்கு உள்ளது...? 

Temple For Chithirai Natchathiram : சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கோவில் எங்கு உள்ளது?Representative Image

சித்திரை நட்சத்திர கோவில் (Chithirai Natchathiram Kovil)

யதார்த்தமான மனதும் அமைதியான சுபாவம் கொண்டு வீண்வம்பு சண்டைக்கு போகாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்கள் சித்திரை நட்சத்திரக்காரர்கள் ஆவர். இவர்களுக்கான ஸ்தலம் மதுரை மாவட்டம் குருவித்துறையில் உள்ள அருள்மிகு சித்திராத வல்லபபெருமாள் திருக்கோயில்  (Chithirai Natchathiram Kovil) ஆகும். 

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்படும் தோஷம், இத்தல இறைவனை வழிபாடு செய்தால் நீங்கும். தனக்கு வேண்டும் என்பதை இடம் பொருள் அறிந்து பிறர் மனதை புரிந்து வேண்டுவதை அடைந்து கொள்ளும் திறன் கொண்ட சித்திரை நட்சத்திரக்காரர்கள் இத்தலத்திற்கு ஒருமுறையாவது வந்து பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றினால் நன்மை ஆகும். 

 

Temple For Chithirai Natchathiram : சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கோவில் எங்கு உள்ளது?Representative Image

தல சிறப்பு (Temple For Chithirai Natchathiram)

சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். மூலவர் நாராயணனை நினைத்து குரு பகவான் தவம் இருந்த இந்த ஸ்தலம் குரு தோஷத்தை நீக்கும் தலமாகும். குரு பகவானின் மகன் கசன் அசுரகுரு சுக்கிராச்சாரியாரிடம் இருந்து உயிர் பெற செய்யும் ம்ருதசஞ்சீவினி மந்திரம் கற்க  சென்றான்.  கசன் இருந்தால் ஆபத்து என நினைத்து அசுரர்கள் அவனை கொன்று சாம்பலாக்கி சுக்கிராச்சாரியர் குடிக்கும் பாலில் கலந்து விடுகின்றனர். 

கசனை ஒருதலையாகக் காதலிக்கும் சுக்கிராச்சாரியர் மகள் தேவயானி கசனை  பற்றி விசாரித்தாள். ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து சுக்கிராச்சாரியார் ம்ருதசஞ்சீவினி மந்திரத்தை பயன்படுத்துகின்றார். கசன் வயிற்றை கிழித்து வெளிவந்ததால் சுக்கிராச்சாரியார் இறந்துவிடுகிறார். 

Most read: பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய கோவில் எது?

தன் குருவை காப்பாற்ற ம்ருதசஞ்சீவினி மந்திரத்தை பயன்படுத்தி கசன் சுக்கிராச்சாரியரை உயிர்த்தெழ செய்கிறார். இதனால் மனம் மகிழ்ந்த அவர் தன் மகளை கசனுக்கு திருமணம் செய்து தர விரும்புகிறார். ஆனால் சுக்கிராச்சாரியர் வயிற்றில் இருந்து வெளிவந்ததால் தேவயானி தனக்கு தங்கை முறை வேண்டும், எனக் கூறி தேவலோகம் திரும்ப முயல்கிறான். கோபம் கொண்ட தேவயானி கசனை தடுத்து அசுரலோகத்தில் தங்க வைக்கிறாள்.

மகனை திரும்ப பெற குரு பகவான் நாராயணனை நோக்கி வைகை நதிக்கரையில் துறை அமைத்து தவம் இருக்கிறார். இவர் தவத்திற்கு மனமிறங்கிய இறைவன் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் காட்சியளித்து, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். எனவே, இத்திருத்தலம் சித்திரை நட்சத்திர கோவிலாக பாவிக்கப்படுகிறது. 

Most Read: மகம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்க இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்..!

Temple For Chithirai Natchathiram : சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கோவில் எங்கு உள்ளது?Representative Image

எப்படி செல்வது? (Chithirai Nakshatra Temple Route)

அருள்மிகு சித்திராத வல்லபபெருமாள் திருக்கோயில் செல்ல மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக சுமார் 23 கி.மீ பயணித்தால் குருவித்துறை வரலாம். பின் குருவித்துறையில் இருந்து 3 கி.மீ தூரம் வந்தால் திருக்கோயிலை அடையலாம். 

இரயில் பயணத்தில் வந்தால் மதுரை சோழவந்தான் இரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். திருக்கோயிலுக்கு அருகில் உள்ள விமான நிலையம் மதுரை விமான நிலையமாகும். 

கோயில் நேரம்:- காலை 7:30 மணி- 12:00 மணி வரை; மாலை 3:00 மணி- 6:00 மணி வரை

தொடர்புக்கு:- 91 94439 61948, 97902 95795


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்