Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

நினைத்ததை நிறைவேற்றி தரும் தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி? | Thaipoosam Viratham in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
நினைத்ததை நிறைவேற்றி தரும் தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி? | Thaipoosam Viratham in TamilRepresentative Image.

தமிழ் கடவுளான முருகப் பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் இணையும் அற்புத நாளே 'தைப்பூசம்' என்கிறோம். இந்த நாளில் தான் பூமியில் நீர் தோன்றி, அதிலிருந்து உயிர்கள் தோன்ற துவங்கியதாக புராணங்களும், சாஸ்திரங்களும் கூறுகின்றன. தைப்பூச திருநாளில் உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் பால் குடங்கள், பல விதமான காவடி, தேரோட்டம் ஆகியன நடத்தப்படுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல், அன்றைய தினம் வேல் குத்தியும், காவடி தூக்கியும் முருகனை வழிபாடு செய்வார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த நன்னாளில் முருகனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால், அவருடைய பூரண அருளையும் பெற முடியும்.

நினைத்ததை நிறைவேற்றி தரும் தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி? | Thaipoosam Viratham in TamilRepresentative Image

தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி?

காலை எழுந்தவுடன் குளித்து முடித்துவிட்டு, அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிபாடு செய்துவிட்டு ஒரு டம்ளர் பால் மட்டும் குடித்துவிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். காலை முதல் மாலை உண்ணா நோன்பு இருந்து மாலைவேளையில் அருகில் இருக்கும் முருகன் கோவில்களுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களான பால், இளநீர், பன்னீர், தேன் இவற்றில் ஒன்றை வாங்கிக் கொடுப்பது மிகவும் நல்லது. 

நினைத்ததை நிறைவேற்றி தரும் தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி? | Thaipoosam Viratham in TamilRepresentative Image

அதுமட்டுமல்லாமல், நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பவர்கள் தைப்பூசத்தன்று செவ்வரளி பூக்களை வாங்கி உங்கள் கையாளே மாலையாக கோர்த்து முருகப் பெருமானுக்கு சமர்ப்பணம் செய்து, 6 விளக்கு ஏற்றி மனதார வேண்டிக்கொண்டிக் கொள்ளுங்கள். பின்னர், அபிஷேக ஆராதனைகளில் கலந்துக்கொள்வதன் மூலமாக முருகப் பெருமானின் பூரண அருளை பெற முடியும். அதன்பிறகு விரதத்தை முடித்துக்கொள்ளலாம். குறிப்பு: கர்ப்பிணி பெண்கள் விரதம் இருப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. 

தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும் என்பது ஐதீகம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்