Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தைப்பூசத்தன்று இப்டி செய்தால் முருகனின் பரிபூரண அருள் கிடைக்கும்.. | Thaipoosam Valipadu Murai in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
தைப்பூசத்தன்று இப்டி செய்தால் முருகனின் பரிபூரண அருள் கிடைக்கும்.. | Thaipoosam Valipadu Murai in TamilRepresentative Image.

தை மாதத்தில் பௌர்ணமியும் பூசம் நட்சத்திரமும் ஒன்றாக இணையும் நாளே 'தைப்பூசம்'. இந்த மங்களகரமான நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், அலகு குத்துதல்; குறிப்பாக, பழனியில் அதிவிஷேசமாக பக்தர்கள் பாதையாத்திரையாக நடந்து சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்தல் என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கொண்டாடக்கூடிய இந்த தைப்பூச திருநாள் இந்த வருடம் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி வருகிறது. சரி வாங்க, தைப்பூசத்தன்று முருகனை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

தைப்பூசத்தன்று இப்டி செய்தால் முருகனின் பரிபூரண அருள் கிடைக்கும்.. | Thaipoosam Valipadu Murai in TamilRepresentative Image

தைப்பூச முருகன் வழிபாடு:

தைப்பூசம் நாளிற்கு முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்துவிடுங்கள். பிறகு, வீட்டு பூஜையறையில் முருகப் பெருமானின் வேல் அல்லது விக்கிரகம் வைத்திருப்பவர்கள் இந்த தைப்பூச நாளில் கட்டாயம் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒருவேளை உங்களிடம் முருகப் பெருமானின் படம் இருந்தால் ஒரு டம்ளர் பால் மட்டும் நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்தால் போதுமானது. பிறகு, இந்த நாளில் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அலங்கரிப்பது மிகவும் விஷேசமானது. செவ்வரளி பூ கிடைக்காதவர்கள் என்ன பூ கிடைக்கிறதோ அதை சுவாமிக்கு சாத்துங்கள். 

தைப்பூசத்தன்று இப்டி செய்தால் முருகனின் பரிபூரண அருள் கிடைக்கும்.. | Thaipoosam Valipadu Murai in TamilRepresentative Image

அதன்பிறகு, 2 வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்துக் கொள்ளவும். சர்க்கரை பொங்கல் செய்ய முடியவில்லை என்றால் பருப்பு பாயாசமாவது செய்து நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காட்டி மனதார முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இந்த நாளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதும் ஏராளமான நன்மைகளை கொடுக்கும். எனவே, விருப்பம் இருப்பவர்கள் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். இருப்பினும், திருமணத்தடை இருப்பவர்கள் இந்த மங்களகரமான நாளில் விரதம் இருந்து வழிபட்டால், திருமணத்தடை விலகி கூடிய விரைவில் திருமணம் கைக்கூடி வரும். 

தைப்பூசத்தன்று இப்டி செய்தால் முருகனின் பரிபூரண அருள் கிடைக்கும்.. | Thaipoosam Valipadu Murai in TamilRepresentative Image

தைப்பூசம் 2023 வழிபடும் நேரம்:

காலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை [பிரம்ம முகூர்த்தம்] அல்லது

காலை 06.00 மணி முதல் 08.30 மணி வரை அல்லது

காலை 10.30 மணி முதல் 11.45 மணி வரை என இவற்றில் உங்களுக்கு எது வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் வழிபாடு செய்யலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்