Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனம் | uthirakosamangai temple history in tamil

UDHAYA KUMAR Updated:
உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனம் | uthirakosamangai temple history in tamilRepresentative Image.

ராமநாதபுரம் திரு உத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். 

மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு கலைப்பு நடைபெற்றது. 

உலகப் புகழ் பெற்ற திரு உத்தர கோச மங்கை கோவிலில் பச்சை மரகத மேனியாக நடராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார். 

மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி தாயார் கோவில் மிகவும் சிறப்பு மிக்க சிவாலயம் ஆகும்.  மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்கிற சிறப்புகளைக் கொண்டது இந்த கோவில்.  இலந்தை மரத்து அடியிலே சுயம்புவாய் தோன்றிய கடவுள் இவர். 

நடராஜ பெருமாள் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும், மதுரையில் கால் மாற்றி ஆடியதாகவும், திருஉத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு. 

உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனம் | uthirakosamangai temple history in tamilRepresentative Image

பச்சை மரகதக் கல்லால் ஆன ஆறு அடி நடராஜர் சிலை

உலகில் வேறெங்கும் இல்லாத பச்சை மரகதக் கல்லால் ஆன ஆறு அடி நடராஜர் சிலை இங்கு இருக்கிறது. இந்த சிலையின் வீரியத்தை பக்தர்கள் தாங்கிக் கொள்ளமாட்டார்கள் என்பதால் எப்போதும் சந்தனம் பூசியே காணப்படும். மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்று மட்டும் சந்தனக்காப்பு கலையப்படும். இந்த நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். 

ஆருத்ர தரிசனம் விழா டிசம்பர் 28ம் தேதி இரவு சந்தன காப்பு கட்டுதலுடன் துவங்கியது.  இன்று ஜனவரி 5ம் தேதி காலை 8 மணிக்கு மரகத நடராஜரின் திருமேனி மீது பூசப்பட்டிருந்த சந்தனக் காப்பு கலையப்பட்டது. 

உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனம் | uthirakosamangai temple history in tamilRepresentative Image

உத்திரகோசமங்கை கோவில் எங்கு உள்ளது

மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே, வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று, இவ்வூரை அடையலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்