Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Grow Aloe vera at Home: வீட்டுத் தோட்டத்தில் முறையான பராமரிப்பில் கற்றாழை வளர்ப்பு…! விரைவில் படர்ந்த கற்றாழைகள் …! எப்படி பெறுவது

Gowthami Subramani June 22, 2022 & 17:00 [IST]
How to Grow Aloe vera at Home: வீட்டுத் தோட்டத்தில் முறையான பராமரிப்பில் கற்றாழை வளர்ப்பு…! விரைவில் படர்ந்த கற்றாழைகள் …! எப்படி பெறுவதுRepresentative Image.

How to Grow Aloe vera at Home: வீட்டுப் பராமரிப்பில் கற்றாழையை வளர்ப்பது குறித்தும், விரைவாக கற்றாழையை நல்ல முறையில் எவ்வாறு பெறலாம் என்பது குறித்தும் இதில் காணலாம் (How to Grow Aloe vera at Home).

கற்றாழை செடிகள்

வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கேற்ப விளங்கும் ஒரு மருந்துச் செடி கற்றாழை ஆகும். பெரும்பாலும், ஏராளக்கணக்கான பயன்பாடுகளில் கற்றாழை உள்ளது. அழகு சாதனமாகவும், மருந்துப் பொருளாகவும் நமக்கு பெரிதும் உதவக் கூடியதாக விளங்குவது கற்றாழை ஆகும். ஆனால், இதை எப்படி வளர்ப்பது என்று தெரியாமல், சிலர் கற்றாழ செடி கிடைத்தும் வாடி விடுவதால் பயனற்று போகிறது (How to Grow Aloe vera at Home in Tamil).

மருத்துவ குணம் நிறைந்த கற்றாழை

கற்றாழை மிகுந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு செடியாகும். கற்றாழையில் உள்ள இலையில் “அலோயின்”, “அலோசோன்” போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன. மேலும், இந்த வேதிப்பொருள்களின் அளவு சுமார் 4 -லிருந்து 25% வரை இலையில் காணப்படும். இதன் காரணமாகவே, இதன் இலைகள் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இருமல், சளி, குடல்புண் போன்றவற்றிற்கு கற்றாழைச் சாறு பெரிதும் பயன்படுகிறது. மேலும், இது ஒரு எளிய மருந்து சிகிச்சை என்பதால், பெரும்பாலானோர் வீட்டுத் தோட்டங்களில் கற்றாழை செடியை வளர்த்து வருகின்றனர் (How to Grow Aloe Vera Plant at Home).

நம் வீட்டில் கற்றாழை செடியை எவ்வாறு வளர்த்தலாம் என்பதையும், இதனை முறையாக பராமரிக்கும் முறைகளையும் பற்றி இதில் காண்போம் (How to Care Aloe Vera Plant at Home in Tamil).


Representative Image. How to Grow Strawberry at Home in Tamil: இனி ஸ்ட்ராபெர்ரிய உங்க வீட்டுலயும் வளரவைக்க முடியும்...! இத மட்டும் பண்ணுங்க... எப்படி வளருதுனு பாருங்க....!


மண்வளம் மிகவும் முக்கியம்

வீட்டுத் தோட்டங்களில் கற்றாழைச் செடியை வளர்ப்பதன் மூலம், நாம் எப்போது வேண்டுமானாலும், எடுத்துக் கொள்ளலாம். தினமும் அல்லது இரண்டு நாள்களுக்கு ஒரு முறை கற்றாழையின் மேல்பாகத்தை எடுத்துவிட்டு, உள்ளே இருக்கும் வழவழப்பான பகுதியை உட்கொள்வதன் மூலம், உடல் குளிர்ச்சியுடன் காணப்படும். மேலும், வயிற்ற்றுப் புண்களை அகற்றும் எனவும் கூறப்படுகிறது (How to Grow Aloe Vera Plant Faster at Home).

மேலும், கற்றாழையை பயிரிட தரிசு மண், மணற்பாங்கான நிலம் மற்றும் பொறை மண் போன்றவை ஏற்றக்கூடியதாக அமையும். இருந்த போதிலும், எல்லா வகை மண்ணிலுமே கற்றாழையை சாகுபடி செய்ய முடியும். கற்றாழை பெரும்பாலும், காரத்தன்மை 7 முதல் 83.5 வரை கொண்ட மண் வகைகளில் வளர்கின்றது. மேலும், அதிக நீரை ஊற்றி வைப்பதோ, நீரை தேங்கி விடவோ கூடாது. இதனால், கற்றாழைச் செடி வாடிப்போகக் கூடும். மேலும், கற்றாழைச் செடியை நல்ல வடிகால் வசதியுடன் இருக்கும் நிலத்தில் வளர்த்தல் நல்லது (How to Grow Aloe Vera at Home Faster).


Representative Image. How to Make Aloe Vera Gel at Home in Tamil: வீட்டிலேயே இயற்கையான கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி...?


தொழு உரம் இருந்தாலும் போதும்

கற்றாழையை வளர்ப்பதற்கான இன்னொரு முறையைப் பார்க்கலாம். இதில், நிலத்தை இரண்டு முறை உழுது எக்டருக்கு 10 டன் தொழு எரு உரமிட வேண்டும். பின் அதனை சமன் செய்து சிறிய பாத்திகளாக அமைக்க வேண்டும்.

மேலும் செடிகள் தாராலமாக வளர, செடிகளுக்கு இடையே 3 அடி இடைவெளி விட்டு நடுவது நல்லது. மேலும், இதற்கு இரசாயன உரங்களை தேவைக்கேற்ப இட வேண்டும்.

செடிகளின் ஆரோக்கியம் (How to Grow Aloe Vera in Pots)

கற்றாழைச் செடிகளை நடவு செய்வதற்கு முன்பே, அதன் தரத்தைக் கண்காணிக்க வேண்டும். அதே போல, அதன் வேர்கள் சரியான முறையில் உள்ளதா..? இல்லை பூச்சிகள் ஏதேனும் தாக்கியுள்ளதா? போன்ற அனைத்தையும் சரிபார்த்த பிறகே செடியை நட வேண்டும். மேலும், அடிக்கடி செடிகளின் வேர்ப் பகுதிகளைக் கண்காணிப்பது மிக அவசியம். இவ்வாறு செடிகளை முறையாகப் பராமரித்து வந்தால், கற்றாழை மிக அதிகமாக வளர்வதுடன் வீட்டிற்கு அழகு தருபவையாக அமையும் (How to Grow Aloe Vera Seeds at Home).


Representative Image. How to Make Aloe Vera Hair Oil in Tamil: இருமடங்கு முடி வளர செய்யும் ஹோம் மேட் ஹேர் ஆயில்... இப்படி செஞ்சிப்பாருங்க...


கற்றாழையின் பயன்கள்

இவ்வாறு நம் வீட்டிலேயே கற்றாழை வளர்ப்பதால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம். மேலும், அழகு மற்றும் மருத்துவக்குணங்களுக்கு இது முக்கிய பங்காற்றுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்