Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Aloe Vera Hair Oil in Tamil: இருமடங்கு முடி வளர செய்யும் ஹோம் மேட் ஹேர் ஆயில்... இப்படி செஞ்சிப்பாருங்க...!!

Nandhinipriya Ganeshan June 20, 2022 & 17:45 [IST]
How to Make Aloe Vera Hair Oil in Tamil: இருமடங்கு முடி வளர செய்யும் ஹோம் மேட் ஹேர் ஆயில்... இப்படி செஞ்சிப்பாருங்க...!!Representative Image.

How to Make Aloe Vera Hair Oil in Tamil: இந்த காலத்தில் அனைவருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு. இந்த அதிகப்படியான முடி உதிர்வுக்கு உணவு பழக்கம், அதிகப்படியான மன அழுத்தம், முடி பராமரிப்பு பொருட்கள் என ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் இயற்கையாக வளர வேண்டிய முடியின் வளர்ச்சியை சீரழித்து விடுகின்றன. 

அதற்காக நாமும் பல பல முயற்சிகளை எடுத்து சலித்துப்போய், எனக்கு முடி வளரவில்லை என்றாலும் பரவாயில்லை, முடிக்கொட்டாமல் இருந்தாலே போது சாமி என்ற அளவிற்கு வந்தாச்சு.. ஆனாலும் கூட சில சமயம் மனதிற்கு வருத்தமாக தான் இருக்கும். சில பெண்களின் நீளமான கூந்தலை பார்க்கும் பொழுது. இருந்தாலும், நாம் முடியை நல்ல முறையில் கவனித்து வந்தால் ஆரோக்கியமாக இருக்கும். முடி உதிர்வில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்கான ஒரு எளிய குறிப்பை தான் பார்க்கப்போகிறோம்.

வீட்டிலேயே இயற்கையான கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி...? 

அதுதான், கற்றாழை ஹேர் ஆயில். வீட்டிலேயே எந்தவித கெமிக்கலும் இல்லாமல் இயற்கையான கற்றாழை ஹேர் ஆயிலை தினமும் பயன்படுத்தி வந்தால், முடி உதிர்வா? எனக்கா? என்று நீங்களே ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு கொண்டு செல்லும். வாங்க இந்த அற்புத நன்மைகள் கொண்ட ஹேர் ஆயிலை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். 

கற்றாழை ஹேர் ஆயில்:

முதலில் ஒரு கற்றாழையை எடுத்து நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அடுத்து அரை பவுல் அளவிற்கு தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளவும். அதில் இந்த நறுக்கி வைத்த கற்றாழையை சேர்த்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் அரை பாத்திரம் அளவு தண்ணீர் எடுத்து அடுப்பில் வைத்து, தண்ணீர் சூடானதும் இந்த பவுலினை அதில் வைத்து 5-10 (டபுள் பாயிலிங் முறை) நிமிடங்கள் வரை ஹீட் செய்யவும். எண்ணெயை ஒரு மரக் கரண்டியை பயன்படுத்தி கிளறிவிடவும்.

தினமும் இரவில் கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு தடவுவதால், நடக்கும் மாயஜாலத்த பாருங்க…!

15 நிமிடத்திற்கு பிறகு எடுத்து ஆறவைத்து, வடிக்கட்டி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ளவும். இதை வாரத்திற்கு இருமுறை தலையில் அப்ளை செய்து 40 நிமிடம் முதல் 1 மணிநேரம் தலையில் ஊறவைத்து, பின்னர் லேசான ஷாம்பூவால் தலையை வாஷ் செய்துக் கொள்ளலாம்.

வீட்டுத் தோட்டத்தில் முறையான பராமரிப்பில் கற்றாழை வளர்ப்பு…! விரைவில் படர்ந்த கற்றாழைகள் …! எப்படி பெறுவது

முடி உதிர்வால் அவதிப்படுபவர்களும், நானும் எல்லாமே பண்ணிட்டு இருக்கேன் முடியே வளர மாட்டீங்கிதுனு நினைப்பவர்களும் இந்த ஹேர் ஆயிலை பயன்படுத்தி பாருங்க. நீங்க நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு முடி வளர்ச்சி அடர்த்தியாகவும் அதிகமாகவும் இருக்கும். முடி உதிர்வும் குறையும். அதுமட்டுமல்லாமல், முடி மிருதுவாகவும் இருக்கும். இதை ஆண்களும் பயன்படுத்தலாம்.

இனி கெட்டியான தயிருக்கு 8 மணி நேரம் வெயிட் பண்ண தேவையில்ல.... அரை மணி நேரமே போதும்....

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்