Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Rasi Palan In Tamil: விஸ்‌வரூப வெற்றி காணும் அதிர்ஷ்ட இராசி உங்களுக்கா! ஜூன் 12, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 11, 2022 & 14:00 [IST]
Tomorrow Rasi Palan In Tamil: விஸ்‌வரூப வெற்றி காணும் அதிர்ஷ்ட இராசி உங்களுக்கா! ஜூன் 12, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                         Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 06:00-  07:00 வரை

மாலை: 03:30- 04:30 வரை


Representative Image.

மேலும் படிக்க: ஜூன் 12, 2022 ஞாயிற்றுகிழமையின் பஞ்சாங்கம்.


Tomorrow Rasi Palan In Tamil

மேஷம் (Aries 2022 Horoscope)

மகிழ்ச்சியான வாழ்வை எதிர்பார்த்த மேஷ இராசியாளரே இன்றைய தினம் உங்களுக்கு ஆக்கப்பூர்வமாக இருக்கும், மேலும் உங்கள் கவலைகள் படிப்படியாகக் குறையும். ஆன்மீக பயணம் செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அலுவலகத்தில் இன்றைய சூழல் நன்றாக உள்ளது, சக பணியாளரின் உதவி அதிகமாகக் கிடைக்கும். பேசும் வார்த்தைகளில் அதிக கவனம் தேவைப்படும். இன்று காதல் வாழ்க்கையில் எல்லையற்ற மகிழ்ச்சி உங்களைத் தொற்றிக் கொள்ளும், காதலர்களுள் நட்புறவு அதிகமாக இருக்கும். ஓய்வு நேரம் அதிகமாக இருக்கும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். உடல்நலம் நன்றாக இருக்கும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு  இன்றைய தினம் கிடைக்கும் அங்கீகாரம் மனதில் எல்லையற்ற இன்பத்தை அளிக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும், சில ரிஷப ராசிக்காரருக்கு தொழில் மாற்றம் ஏற்படும். கல்வி நிலையிலும் பாதிப்பு இல்லை. செலவுகள் பெரியதாக இருக்காது, இன்று கையில் பப் புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும், அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளுவீர்கள். உடல்நலத்தில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். பாராட்டு! 

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

மிதுனம் (Gemini 2022 Horoscope)

நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட உங்களுக்கு இன்று பிறர் பிரச்சனையில் தலையிடாமல் இருந்தால் அமைதியான நாளாக இருக்கும். நண்பர்களின் உதவியால்  தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும், சில ஆக்கப்பூர்வமான  செயல்களை செய்து பாராட்டு பெறுவீர்கள். பொறுமையாக இருந்தால் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்க முடியும். வீடு கட்டும் யோகம் இருக்கிறது அதற்கான முயற்சிகள் எடுக்க இது சரியான தருணமாகும். முயற்சி செய்தால் அது நிறைவேறும். அலுவலகத்தில் மேல் அதிகாரி கண்டிப்போடு இருப்பார். நிதி நிலை நன்றாக இல்லை, செலவு செய்யும்போது சிந்தித்து செலவு செய்தால் எதிர்காலத்திற்கு நல்லது. மண வாழ்க்கை சுமாராகத் தான் இருக்கும். கணவன் மனைவிக்குள் ஓரளவு புரிதல் இருக்கும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

கடகம் (Cancer 2022 Horoscope)

மிக அழகாகப் பேசும் உங்களுக்கு இன்று பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளது, பயணம் செய்யும்போது கவனமாக இருத்தல் வேண்டும். இன்று செலவுகள் இயல்பை விடச் சற்று அதிகமாக  இருப்பதால்  கையில் பணப்புழக்கம் கொஞ்சம் குறைவாக  இருப்பதாக உணரப்படுவீர்கள், எதிர்கால சேமிப்பில் பாதிப்பு இல்லை. தொழிலில் சில கஷ்டமான சூழ்நிலை உருவாகும். வியாபாரம் இன்று எதிர்பார்த்த லாபத்தை அளிக்காது. உடல்நலத்தில் பெரிய பிரச்சனை இல்லை, திடீரென பல வலி ஏற்படலாம். சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 2

சிம்மம் (Leo 2022 Horoscope)

மனதில் இரக்கக் குணமும் நடத்தையில் சாதுரியமும் கொண்ட உங்களுக்கு இன்று ஆரோக்கியம் நன்றாக உள்ளது. தொழிலில் உங்கள் நிலை முக்கியத்துவம் பெற்று இருக்கும், தொழில் வேலைச் சுமை அதிகமாக வாய்ப்பு உள்ளது. இன்று செலவு அதிகமாகும், பண கையில் குறைவாகப் புழங்கும். கல்வி நிலை நன்றாக உள்ளது. புதிய நட்பு கிடைக்கும்,குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனை உருவாகும் அதனால் வீட்டில் அமைதி கெடும். எனவே வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும். மன ஒருநிலையில் இருக்காது பலவிதமான சிந்தனைகள் மனதில் ஓடும். சுகம்! 

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிகப்பு

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Virgo 2022 Horoscope)

இக்கட்டான் சூழ்நிலையிலும் மன தைரியத்தைத் தளரவிடாமல் உறுதியான நிலையைக் கொண்ட கன்னி இராசியாளரே இன்றைய தினம் உங்கள் நிதி நிலைமை அதிகமான செலவு இருக்கும். இன்று நீங்கள் எண்ணிய காரியம் நிறைவேறும், ஆனால் சரியான திட்டமிடல் தேவைப்படும். இன்று உங்களின்  முயற்சிக்கு அலுவலகத்தில் பாராட்டுப்  பெறுவீர். உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், உஷ்ணமான உணவுகளைத் தவிர்க்கவும். திருமண வாழ்க்கை மிகவும் சுமாராக  இருக்கும், கணவன்  மனைவி உறவில் அனுசரித்துச் செல்ல வேண்டும். மானவர்களின் கல்வி நிலையில் வளர்ச்சி இருக்கும். ஜெயம்!

அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்டமான எண்: 9


Representative Image. மேலும் படிக்க: அடுத்த 6 ராசியின் (துலாம்- மீனம்) ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்