Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

December Month Tamil Rasi Palan 2022 Kanni : கன்னி ராசிக்கு எடுக்கும் காரியத்தில் வெற்றி தான்...!

Manoj Krishnamoorthi Updated:
December Month Tamil Rasi Palan 2022 Kanni : கன்னி ராசிக்கு எடுக்கும் காரியத்தில் வெற்றி தான்...!Representative Image.

கன்னி ராசிக்காரரே 2022 டிசம்பர் மாதம் உங்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உங்கள் ராசிக்கு  2 இல் கேது, 3 இல் இருந்து 4 இல் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை மாறுகிறது, 5 இல் சனி மற்றும் 7 இல் குரு, 8 இல் இராகு, 9 இல் செவ்வாய் சஞ்சாரம் கொள்கிறது. இவ்வாறு இருக்கும் கிரக நிலை அளிக்கும் பலனைக் கீழே காண்போம். 

டிசம்பர் மாத ராசிபலன் 2022- கன்னி (December Month Tamil Rasi Palan 2022 Kanni)

December Month Tamil Rasi Palan 2022 Kanni : கன்னி ராசிக்கு எடுக்கும் காரியத்தில் வெற்றி தான்...!Representative Image

கன்னி

பொது பலன்:

எடுக்கும் முயற்சிகள் வெற்றி ஆகும் கொடுப்பினை உள்ளது. தொழிலில் புதிய திட்டங்கள் பல பிறக்கும். வீட்டில் நிம்மதி இருக்கும். ஆனால் பேச்சை குறைத்தால் பிரச்சனை இல்லை. செலவை சமாளிக்கும் அளவு பணப்புழக்கம் உண்டு. 

குடும்ப  வாழ்க்கை:

திருமண செய்ய முயற்சி மேற்கொள்ளலாம், திருமண பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். 7 இல் குரு, 4 இல் புதன் மற்றும் சுக்கிரன் இருப்பதால் காதல் வாழ்க்கையில் நெருக்கம் கூடும். குடும்பத்தில் நல்ல புரிதல் உண்டாகும்.  

தொழில்: 

தொழில் வளர்ச்சிக்காக மாற்றங்கள் செய்ய உகந்த மாதமாகும்.  புதிய முயற்சிகள் கைகூடும். வீடு, வண்டி வாகனம் வாங்க சிறந்த மாதம் ஆகும். 8 இல் இராகு இருப்பதால் நிதானமாக இருக்க வேண்டும், தேவையில்லாத பேச்சு வார்த்தை குறைத்து கொள்ளுவதால் நல்லது. மாணவர்கள் புதிய கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கும். ஓரளவு கையில் பணப்புழக்கம் இருக்கும். 

உடல்நலம்:

சனியின் பார்வை ஆரோக்கியத்தில் சிறு தொந்தரவு அளிக்கும். மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. வயதான கன்னி ராசிக்காரருக்கு திருப்திகரமான மனநிலை இருக்கும்.    

சந்திராஷ்டமம்:

டிசம்பர் 4, 5, 6, 31

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்