Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Horoscope Tamil: இன்று பொறுமையை இழப்பதால் பிரச்சனையை அனுபவிக்கும் அந்த  ராசிக்காரர் நீங்களா..? பொறுமை இருங்க...ஜூன் 22, ராசிபலன்..!

Manoj Krishnamoorthi June 21, 2022 & 16:30 [IST]
Tomorrow Horoscope Tamil: இன்று பொறுமையை இழப்பதால் பிரச்சனையை அனுபவிக்கும் அந்த  ராசிக்காரர் நீங்களா..? பொறுமை இருங்க...ஜூன் 22, ராசிபலன்..!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 10:30-  11:30 வரை

மாலை: 04:30-  05:30 வரை 

Tomorrow Horoscope Tamil

மேஷம் (Aries 2022 Horoscope)

உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும், மேலும் மனதிலிருந்த எதிர்மறை எண்ணங்கள் மறைந்து அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும் அலுவலகத்தில் சில கடினமான சூழல் இருக்கும். நிதி நிலையில் கவனமாக இருக்க வேண்டும், கையில் பணப்புழக்கம் குறைவாக இருக்கும். குடும்ப வாழ்க்கை  அமைதியாக இருக்கும், வீட்டில் விட்டு கொடுத்து போவீர்கள். மன நிலை நிம்மதியாக இருக்கும்.  உடல்நலம் மிகவும் நன்றாக உள்ளது. மாணவர்களின் கல்வி நிலை நல்ல முன்னேற்றம் கொள்ளும், ஆசிரியரின் மதிப்பைப் பெறுவர். உழைப்பு!  

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

உங்களின் அயராது உழைக்கும் குணத்துக்கு இன்று மிகவும் நன்மைகள் நடக்கும், உங்கள் ராசிக்கு இன்று தொழில் சிறப்பாக இருக்கும், தொழில் தொடர்பாக இன்று பயணம் மேற்கொள்வீர்கள். வீட்டில் தகவல் பரிமாற்றத்தால் சில தவறுகள் நடக்கும். இன்று வெற்றியடைய அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். திருமண வாழ்வில் சாந்தமாக இருக்க வேண்டும். கையில் சீரான செல்வ வரவு இருக்கும். அதிகமான உழைப்பு ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளைத் தரும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

மிதுனம் (Gemini 2022 Horoscope)

அனைவரிடமும் தன்மையாக பேசும்  உங்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும், ஆனால் நண்பர்களின் மூலம் கிடைக்கும் உதவி மகிழ்ச்சியான மனநிலையை அளிக்கும். அலுவலக பணிகளை முடிக்க அதிகமான உழைப்பு தேவைப்படும், உங்களின் அயராது உழைப்பு நற்பெயரை வாங்கி தரும். சுய தொழில் செய்பவருக்கு இன்றைய இலக்கை முடிக்க அதிகம் போராட வேண்டும். பண வரவு சிறப்பாக இருக்கும், வீட்டில் இயல்பு நிலையில் நடந்து கொள்வீர்கள்.  ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லையென்றாலும் மனம் பதட்டமாக இருக்கும். நட்பு! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை  

அதிர்ஷ்ட எண்: 4

கடகம் (Cancer 2022 Horoscope)

பணிவான குணத்தைக் கொண்ட கடக ராசிக்காரரே இன்று உங்கள் ராசிக்கு பொறுமையாக இருக்க வேண்டிய நாளாகும், முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் பிறரின் ஆலோசனைப் பெறுவது நன்மை ஆகும். கவனக் குறைவின் காரணமாக இன்று அதிக நேரம் ஒரு வேளை மட்டும் செய்ய வேண்டியிருக்கும். திருமண வாழ்க்கையில் சிறிய ஊடல்கள் உருவாகும், கருத்து வேறுபாடு இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் பொறுமை காப்பது நன்மை ஆகும். உடல்நலத்தில் திடீரென எதிர்மறையான விளைவுகள் இருக்கும் ஆனால் பெரியதாக பாதிக்காது. கவனம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:  9

சிம்மம் (Leo 2022 Horoscope)

உங்கள் தெளிவான திட்டங்கள் இன்று எதிர்பார்த்த அளவு பலன் அளிக்காது, இன்றைய தினம் வழக்கமான வெற்றியைப் பார்க்க கடினமாக உழைக்க வேண்டும். தொழிலில் லாபம் குறையும், கையிருப்பை செலவு செய்ய வேண்டியிருக்கும். அலுவலகத்தில் கொடுத்த வேலையை விரைவாக முடிப்பீர்கள், ஆனால் உடல்நலம் பாதிக்கக்கூடும். விட்டில் அனுசரணையாக நடக்க வேண்டும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது, பயணத்தின்போது அதிக கவனமாக இருக்க வேண்டும் முக்கிய பொருட்களை இழக்க நேரிடும். நிதானம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

கன்னி (Virgo 2022 Horoscope)

இன்பமான வாழ்க்கை எதிர்பார்த்த உங்களுக்கு இன்றைய நாள் நன்றாக இருக்கும், குடும்பத்தில் இன்பம் அதிகமாகும் இன்றைய பொழுது முழுவதும் நிம்மதியாகக் கழிப்பீர்கள்.  தொழில் போட்டிகளைச் சமாளித்து விடுவீர்கள். பண வரவு இருக்கும், அதை செலவு செய்யும்போது அதீத கவனம் தேவை. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும்.  மாணவர்களின் கல்வி நிலை மிகவும் நன்றாக  இருக்கும், சக மானவர்களுடன் போட்டிப் போட்டு படிப்பார்கள், சில மாணவர்களுக்கு எதிர்பாராத ஊக்கத் தொகை கிடைக்கும். உங்களின் திடமான மன நிலை ஆரோக்கியமான உடல்நலத்தைத் தரும். போட்டி! 

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

அதிர்ஷ்ட எண்: 8


துலாம்- மீனRepresentative Image. ம் வரை அடுத்த 6 ராசியின் தினசரி ராசிபலன் பற்றி அறிய இங்கு இளிக் செய்யவும்.


இதுபோன்ற உடனுக்குடன் ஜோதிட செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்