Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சில விஷயங்களில் நேர்மையாக நடந்து பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.04.2023

Nandhinipriya Ganeshan Updated:
சில விஷயங்களில் நேர்மையாக நடந்து பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.04.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 20 ஆம் நாளுக்கான [03 ஏப்ரல் 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 06.30 - 07.30 வரை

மாலை: 04.30 - 05.00 வரை

சில விஷயங்களில் நேர்மையாக நடந்து பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.04.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உங்க துணை உங்களை புரிந்து நடந்துக்கொள்வார். கடனாக கொடுத்த பணம் வந்தடையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு சிறப்பான நாள். சில விஷயங்களில் நேர்மையாக நடந்து பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணம் செய்யும் சூழல் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலமான பலன்களை அனுபவிப்பீர்கள். சிலருக்கு தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த வங்கி கடன் கிடைக்கும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

சில விஷயங்களில் நேர்மையாக நடந்து பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.04.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

சுமாரான நாளாக தான் இருக்கும். எனவே, அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். வியாபாரத்தில் கூட்டாளியால் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்பாராத செலவுகள் கவலையை கொடுக்கும். யாரிடம் பேசும் போதும் பேச்சில் பொறுமையும், நிதானமும் வேண்டும். வாகன பயணத்தின்போது எச்சரிக்கை வேண்டும். விலையுயர்ந்த பொருள் திருடுபோகலாம். தோல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். விலங்குகளிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்க்கவும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

சில விஷயங்களில் நேர்மையாக நடந்து பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.04.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவித செயல்பாடுகளில் தடைகள் ஏற்படும், நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உறவினர்களிடம் கோபத்தை குறைத்துக்கொண்டு விட்டுக்கொடுத்து செல்லவும். தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள நேரும், இதனால் மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் அவ்வளவாக இருக்காது. முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

சில விஷயங்களில் நேர்மையாக நடந்து பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.04.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

எந்த செயலையும் செய்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து செயல்படவேண்டும். தந்தைவழி உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். கடன் பிரச்சனைகள் குறைந்து மனதில் நிம்மதி குடிக்கொள்ளும். எதிர்பாரா செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். பணவரவு உண்டு. ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

சில விஷயங்களில் நேர்மையாக நடந்து பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.04.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். இத்தனை நாட்களாக இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்களில் இருந்து வந்த அலைச்சல்கள் குறையும். இரும்பு சார்ந்த வியாபாரம் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். அனுசரனையான வார்த்தைகளின் மூலம் பிறரை கவர்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். கூட்டு தொழிலில் லாபம் மேம்படும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். சிலருக்கு மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

சில விஷயங்களில் நேர்மையாக நடந்து பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.04.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை பற்றி புரிந்து கொள்வீர்கள். பணியிடத்தில் சின்ன சின்ன தவறுகள் ஏற்படும், இதனால் கவலையில் இருப்பீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் பொறுப்புகள் அதிகரிக்கும். துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படும், அனுசரித்து போவது நல்லது. பணவரவு சுமாராக தான் இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்த்துவிடுங்கள். எந்த செயல்களை செய்தாலும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடலாம். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

சில விஷயங்களில் நேர்மையாக நடந்து பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.04.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். விருப்பங்கள் நிறைவேறும் நாள். வராத கடன்கள் வந்தடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு நவீன உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. துணையின் விருப்பப்படி நடந்துக்கொள்வதன் மூலம் நல்லுறவு மேம்படும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

சில விஷயங்களில் நேர்மையாக நடந்து பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.04.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பொறுப்புகள் அதிகமாக காணப்படும். எதையும் லேசாக எடுத்துக்கொண்டால் பிரச்சனை இல்லை. பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சிலருக்கு பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்கவும் வாய்ப்புள்ளது. துணையுடன் கிண்டலான பேச்சை தவிர்ப்பது நல்லது. செலவுகள் தேடி வரும், திட்டமிட்டு பணத்தை செலவு செய்ய வேண்டும். சோர்வு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

சில விஷயங்களில் நேர்மையாக நடந்து பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.04.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வியாபார பணிகளில் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய நாள். கணவன்- மனைவிக்கு இடையே அனுசரித்து செல்வது உத்தமம். வர்த்தக பணிகளில் அதிகமாக முதலீடு செய்வதை குறைத்துக் கொள்ளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். நினைத்து காரியங்கள் நிறைவேறுவதில் தடை ஏற்படலாம். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற செலவுகளை எதிர்க்கொள்ள நேரிடும். ஆசை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

சில விஷயங்களில் நேர்மையாக நடந்து பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.04.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உங்கள் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். தடைப்பட்டு நின்ற காரியங்கள் நடந்து முடியும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். சிலருக்கு புதிய நபர்களின் பழக்கம் ஏற்படும். பணியிடத்தில் கீழ் பணிபுரிவர்களால் பிரச்சனை ஏற்படலாம், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். எதிர்பாராத சில உதவிகள் தேடி வரும். பணபுழக்கம் திருப்திகரமாக இருக்கும். திடீர் ஆன்மீக பயணம் செய்ய வாய்ப்புள்ளது. நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 1

சில விஷயங்களில் நேர்மையாக நடந்து பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.04.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளுங்கள். துணையுடன் அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்களிடம் அனாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. எதிர்காலத்தை பற்றிய சிந்தனையால் வருத்ததுடன் இருப்பீர்கள். நண்பர்களால் அலைச்சல் ஏற்படும். பணியிடத்தில் மறைமுக விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். புதிய நபர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

சில விஷயங்களில் நேர்மையாக நடந்து பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள்.. | Tomorrow Rasi Palan in Tamil | 03.04.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

ஒரு இனிமையான செய்தி காத்திருக்கிறது. உங்க விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும். சின்ன முயற்சியில் பெரிய வெற்றி கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பணவரவும் அமோகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சகபணியாளர்களின் உதவி கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள். இந்த நாளை இன்னும் சிறப்பாக்க உங்க வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள். இயந்திரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்