Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aadi Matha Rasi palan 2022: இந்த 4 ராசிக்காரருக்கு நடக்கும் நன்மையால் இந்த மாதம் இவர கையில் பிடிக்க முடியாது… ஆடி மாத ராசிபலன்..!

Manoj Krishnamoorthi July 12, 2022 & 11:00 [IST]
Aadi Matha Rasi palan 2022: இந்த 4 ராசிக்காரருக்கு நடக்கும் நன்மையால் இந்த மாதம் இவர கையில் பிடிக்க முடியாது… ஆடி மாத ராசிபலன்..!Representative Image.

சுபகிருது வருடம் ஆடி மாதம் (17.07.2022- 16.08.2022) தினங்களில் உங்கள் ராசி பெறப்போகும் பலன் பற்றி அறிய இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். ஆடி மாத பலனில் நீங்கள் மேலும் நற்பலன் பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று குழப்பமா.. இவ்வாசகத்தில் நீங்கள் செய்ய பரிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.


Rameshwaram Temple Online Booking : புண்ணிய பூமி இராமேஸ்வரம் கோவில் இணைய வழி பதிவு..!


மேஷம்

பொதுபலன்: சந்தோஷமான மனநிலையால் சுற்றத்தாரையும் ஆனந்தமாக வைக்கும் நீங்கள் தான்  கடுமையான பேச்சின் மூலம் மற்றவரின் மனதையும் காயப்படுத்துவீர்கள். இந்த மாதம் உங்கள் மதிப்பு கூடும். தொழில், குடும்பம் என அனைத்து ஏரியாவிலும் நீங்கள் தான் முன்னிலையில் இருப்பீர்கள். அரசாங்க வேலையினருக்கு கௌரவ பதவி கிடைக்கும்.

வீட்டில் சில சங்கடங்கள் இருந்தாலும், இன்பத்துக்குக் குறை இருக்காது. தாய்வழி மூலம் நல்ல ஆதாயம் பெற முடியும். செல்வ நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும், குடும்ப செலவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்புள்ளது.

அஸ்வினி:  புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

பரணி: திருமண வாழ்விலுள்ள சங்கடங்கள் குறையும், தொழிலில் நல்ல மாற்றம் இருக்கும்.

கிருத்திகை:  நல்ல தகவல் பல கிடைக்கும்.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: முருகன்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று அனுமன் கோவில் சென்று வர நன்மைகள் உங்களைத் தேடிவரும்.

ரிஷபம்

பொதுபலன்: உங்கள் ராசிக்கு சகோதர வழியில் நல்ல பலன் கிடைக்கும், தொழில் மாற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகமாக இருக்கும். ஒருசிலர் புதிய தொழில் தொடங்குவதை பற்றி அதிகம் ஆலோசனை செய்வர். நெடுந்தூர பயணம் உண்டு. வண்டி வாகனத்தினால் சில விரைய செலவு ஏற்படும். நிதி நிலை சற்று தடுமாற்றம் கொள்ளும்.

கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும், காதல் வாழ்க்கையில் நட்பான அணுகுமுறை அதிகமாக இருக்கும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், திடீரென மருத்துவ செலவு ஏற்படும்.

கிருத்திகை: தொழில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது, உடல்நலத்தில் சிறிய கோளாறு இருக்கும்.

மிருக ஸீரிஷம்: திருமண வாழ்வு சிறப்பாக இருக்கும், குடும்பத்தினரின் உதவி மனதிற்கு நிம்மதி அளிக்கும்.

ரோகிணி: நல்ல செலவுகள் உண்டு.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி

பரிகாரம்: வாரந்தோறும் லட்சுமி தேவியை மனதில் நினைத்து வெள்ளிக்கிழமை காலையில் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.

மிதுனம்

பொதுபலன்: இந்த மாதம் உங்களுக்கு நல்ல பண வரவு இருக்கும், இந்த மாதம் உங்களின் முக்கியத்துவம் முதன்மை இடத்தில் இருக்கும். உங்களின்  பேச்சு அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் அமையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலை சிறப்பாக உள்ளது.

குடும்பத்தில் நிம்மதியாக இருக்க முடியும்.  நண்பர்கள் அல்லது உடன்பிறந்தவர்களின் மூலமாக ஆதாயம் பெறுவீர்கள். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆரோக்கியத்தில் குறையில்லை. 

மிருக ஸீரிஷம்: எதிர்பார்க்காத பதவி உயர்வு கிடைக்கும். நிதி நிலையில் நல்ல மாற்றம் இருக்கும்.

திருவாதிரை: மண வாழ்க்கை இன்பமாக இருக்கும், பண தட்டுப்பாடு குறையும்.

புனர்பூசம்: செல்லுமிடமெல்லாம் சிறப்பு  என்ற நிலை இருக்கும்.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்:  கிருஷ்ணர் வழிபாடு

பரிகாரம்: பெருமாளுக்கு துளசி மாலை சமர்ப்பிப்பது நலமான வாழ்க்கை அளிக்கும்.

கடகம்

பொதுபலன்: உங்களின் மரியாதைக்கு மேலும் ஒரு அங்கீகாரமாக இந்த மாதம் உங்களுக்குக் கௌரவ பதவி கிடைக்கும் யோகம் அதிகமாக உள்ளது,  தொழில் ஸ்தானம் மிகவும் நன்றாக உள்ளது. வேலை தேடும் கடக ராசிக்காரருக்கு இந்த மாதம் உயர்ந்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வெற்றிகள் குவியும், நல்ல நிதி நிலை உள்ளது.

வீட்டில் பிரச்சனைகள் குறையும், நிம்மதியாக இருக்க முடியும். குடும்ப நபரின் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும். காதல் வாழ்க்கை ஓரளவு நன்றாக உள்ளது.

புனர்பூசம்:  வீட்டில் நிம்மதியாக இருப்பீர்கள். சுப செலவுகள் இருக்கும்.

பூசம்: கைவிட்டதாக எண்ணிய பழைய காரியங்கள் இந்த மாதம் மீண்டும் தொடங்குவீர்கள். விடாமுயற்சி அதிகமாக இருக்கும். சிறப்பான செல்வ நிலை கையில் உள்ளது.

ஆயில்யம்: திருப்திகரமான மாதமாக அமையும், குடும்பத்தினரின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: ராகவேந்திர பகவான்.

பரிகாரம்:  வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் விநாயகருக்கு அருகம்புல் படைத்து தீபம் ஏற்ற வேண்டும். 


PART 2: சிம்மம்- விருச்சிக ராசியின் ஆடி மாத பலன்


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

Tag: Aadi Matha Rasi Palan 2022 |  Aani Matha Rasi Palan 2022 In Tamil | Aadi Month Rasi Palan In Tamil |  Aadi Matha Rasi Palan 2022 In Tamil Mesham |  Aadi Matha Rasi Palan 2022 In Tamil Rishabam | Aadi Matha Rasi Palan 2022 In Tamil Kadagam | Aadi Matha Rasi Palan 2022 In Tamil Mithunam | Aadi Masam Rasi Palan | Aadi Masam Rasi Palan 2022 | Aadi Matha Rasi Palan 2022 Mithunam |  Aadi Matha Rasi Palan 2022 Mesham |  Aadi Matha Rasi Palan 2022 Rishabam |  Aadi Matha Rasi Palan 2022 Kadagam | Aadi Masam Sirappu  

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்