Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,743.56
-128.73sensex(-0.17%)
நிஃப்டி22,372.90
-32.70sensex(-0.15%)
USD
81.57
Exclusive

Aadi Month Rasi palan 2022 in Tamil: ஆடி போய் ஆவணி வந்தா டாப் தான்.. ஆனால், இந்த 4 ராசிக்காரங்க ஆடிலயே அடிச்சித்தூக்கறாங்களே…! ஆடி மாத ராசிபலன்கள்….!

Gowthami Subramani July 12, 2022 & 17:45 [IST]
Aadi Month Rasi palan 2022 in Tamil: ஆடி போய் ஆவணி வந்தா டாப் தான்.. ஆனால், இந்த 4 ராசிக்காரங்க ஆடிலயே அடிச்சித்தூக்கறாங்களே…! ஆடி மாத ராசிபலன்கள்….!Representative Image.

Aadi Month Rasi palan 2022 in Tamil: சுபகிருது வருடம் ஆடி மாதம் (17.07.2022- 16.08.2022) தினங்களில் உங்கள் ராசிக்கான பலன்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டமா, செல்வமா, நஷ்டமா, தோல்வியா என்ன பலன்களைப் பெறுவீர்கள் என்பதை இந்தப் பதிவில் காணலாம். உங்களுக்கான பரிகாரமும் இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.


Part 2: சிம்மம் முதல் விருச்சிகம் வரையிலான ஆடி மாத ராசி பலன்கள்


தனுசு

பொதுப்பலன்: எல்லோரையும் சந்தோஷப்படுத்த நினைக்கும் தனுசு ராசிக்காரர்களே..! இந்த ஆடி மாதத்தில் நீங்கள் பெறப்போகும் பலன்கள் என்ன தெரியுமா? தேவையில்லாத பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். உங்களுடைய உடல் சார்ந்த பிரச்சனைகள், குடும்ப உறுப்பினர்களுடன் விவாதம், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, கண் சார்ந்த பிரச்சனைகள், வேலையிடத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த அனைத்தையும் தூக்கிப் போடும் அளவிற்கு உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானம் வளம் பெறுகிறது. நீங்கள் எடுக்கக்கூடிய திடீர் முடிவுகள் வெற்றியிலும், முன்னதாக திட்டமிட்ட விஷயங்கள் தோல்வியிலும் முடியும்.

மூலம்: மறைமுகமான இடங்களில் சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பூராடம்: மிக முக்கியமான நண்பர்களைச் சந்திப்பீர்கள். எதிர்பார்க்கக் கூடிய சொத்துக்கள், பதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உத்திராடம்: பதவி உயர்வு கிடைப்பதுடன் எதிர்பார்க்காத பல நல்ல விஷயங்கள் நடக்கும். பொருளாதார ஏற்றம் சிறப்பாக உள்ளது.

மகரம்

பொதுப்பலன்: என்றும் விலை மதிப்பில்லாத அன்பினைத் தரும் மகர ராசி நேயர்களே..! இந்த ஆடி மாதத்திற்கான பலன்களைக் கேளுங்கள். மகர லக்கனம் சார்ந்த நேயர்களே..! இந்த ஆடி மாதம் சிறப்பான மாதமாக உள்ளது. திருமணம் கைகூடுதல், வெளிநாடுகள் சார்ந்த வரன் கிடைக்கும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்.

தொழில், வேலை முதலியவற்றில் உயர் பதவி கிடைக்கும். தொழில் பின்னடைவு எப்போதும் இருக்காது. வண்டி, வாகனங்கள் தொடர்பான அனைத்துக் கவலைகளும் விலகும். புதிதாக ஒரு வண்டி வாங்கும் யோகம் கிடைக்கும். வீடு வாங்குவதற்கு ஏற்ற காலமாக உள்ளது.

உத்திராடம்: உத்யோகத்தில் சிறந்து விளங்க மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். அதனைப் பயன்படுத்தி சிறந்து விளங்குவீர்கள்.

திருவோணம்: நல்ல தகவல்கள் கிடைத்தல், நல்ல விஷயங்களைப் பெறுதல் உள்ளிட்ட நல்ல விஷயங்களாகவே நடக்கும்.

அவிட்டம்: மனோ தைரியம், நம்பிக்கை அதிகமாக இருந்தாலும், இந்த கால கட்டத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் பெரும் கவனம் தேவை.

கும்பம்

உதவி என்றால் கர்ணனையே மிஞ்சும் அளவிற்கு தானம் தரும் கும்ப ராசிக்காரர்களே..! இந்த மாதத்தில் சிறப்பான நிகழ்வுகள் நடக்கும். போட்டித்தேர்வுகள் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்குவீர்கள். தொழில் மற்றும் வேலையில் சிறந்து விளங்குவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். சிறந்த பிரயாணம் உண்டாகும், தொழில், வேலை, இடம் உள்ளிட்டவைகளில் மாற்றங்களை ஏற்படுத்த போராடுவீர்கள். வெளிநாடு சம்பந்தமான உத்தியோகங்கள் கிடைக்கும். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினாலும், எது தேவை, தேவை இல்லை என்பதை நன்கு ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது.

அவிட்டம்: அதிக பண வரவு உண்டாகும்.  பல வெற்றிகரமான சாதனைகளைப் படைக்கும் காலமாக இந்த மாதம் உள்ளது.

சதயம்: புதிய நபர்கள் அறிமுகமாவார்கள். அதன் மூலம் பெரும் அளவில் வெற்றி, செல்வம் அனைத்தும் கிடைக்கும்.

பூரட்டாதி: எல்லா விஷயத்திலும் லாபம், முன்னேற்றம், வளர்ச்சி அடையக்கூடிய வகையில், இந்த மாதம் திகழ்கிறது.

மீனம்

எல்லாவற்றையும் பாஸிட்டிவ்-ஆக எண்ணும் மீன ராசி நேயர்களே..! இந்த ஆடி மாதம் மிகச் சிறப்பான மாதமாகத் திகழ்கிறது. நீண்ட கால சொத்துக்கள் கிடைக்கப்பெறுதல், வரவு உண்டாகுதல், காதல் கைகூடி பெறுதல் முதலிய அனைத்து நல்ல விஷயங்களும் உண்டாகும். எதுவாகினும், பேச்சில் கவனமுடன் பேசுவது மிக அவசியம். மற்றவர்களைத் துன்புறுத்தல் கூடாது. ஆரோக்கியத்தில் மிகக் கவனமாக இருப்பது அவசியம். மற்ற அனைத்து விஷயங்களும் சிறப்பாக உள்ளது. பதவி உயர்வு கிடைப்பதற்கான சிறந்த மாதமாக இந்த மாதம் உள்ளது.

பூரட்டாதி: பிரம்மாண்டமான மாதமாக உள்ளது. எல்லா விதத்திலும் சிறப்பு கிடைக்கும்.

உத்திரட்டாதி: கடன் கொடுத்த தொகை எல்லாம் விரைவில் உங்களை வந்தடையும்.

ரேவதி: எல்லா விதத்திலும், முன்னேற்றம், லாபம், வளர்ச்சி உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக கிடைக்கும்.


Part 1: மேஷம் முதல் கடகம் வரையிலான ஆடி மாத நட்சத்திர பலன்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Aadi Matha Rasi Palan 2022 | Aadi Month Rasi Palan in Tamil | Aadi Month Rasi palan 2022 in Tamil | Aadi Matha Rasi Palan 2022 in Tamil | Aadi Matha Rasi Palan 2022 Dhanusu | Aadi Matha Rasi Palan 2022 Magaram | Aadi Matha Rasi Palan 2022 Kumbam | Aadi Matha Rasi Palan 2022 Meenam | Aadi Month Rasi Palan 2022 Dhanusu | Aadi Month Rasi Palan 2022 Magaram | Aadi Month Rasi Palan 2022 Kumbam | Aadi Month Rasi Palan 2022 Meenam | Aadi Matha Rasi Palan 2022 in Tamil Viruchigam | Aadi Masam Rasi Palan | Aadi Month Rasi Palan


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்