Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீண்ட காலமாக இருந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க, இத செய்யுங்க…! | Aani Matha Rasi Palan 2023 Mesham in Tamil

Gowthami Subramani Updated:
நீண்ட காலமாக இருந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க, இத செய்யுங்க…! | Aani Matha Rasi Palan 2023 Mesham in TamilRepresentative Image.

ஆனி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: ஆனி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, ரிஷபத்தில் புதன், மிதுனத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் ஜூன் மாதம் 16 ஆம் தேதி (ஆனி 01) ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஜூன் 27 ஆம் தேதி (ஆனி 12) கும்ப ராசி அவிட்ட நட்சத்திரத்தில் சனி பகவான் வக்கிர கதி ஆரம்பிக்கிறார். இதற்கிடையில், ஜூலை 02 ஆம் தேதி (ஆனி 17) கடகத்தில் இருக்கும்  செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும், ஜூலை 03 ஆம் தேதி (ஆனி 18) சுக்கிர பகவான் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கும், மீண்டும் ஜூலை 04 ஆம் தேதி (ஆனி 19) மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆனி மாதத்தில் மேஷ ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

நீண்ட காலமாக இருந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க, இத செய்யுங்க…! | Aani Matha Rasi Palan 2023 Mesham in TamilRepresentative Image

ஆனி மாத ராசிபலன் 2023 மேஷம்:

மேஷ ராசி மற்றும் மேஷ லக்னம் சார்ந்த நபர்களுக்கு ராகு உங்கள் ராசியில் அமர்ந்துள்ளார். இருப்பினும், ராகுவுடன் குரு பகவான் அமைந்துள்ளதால் பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. மருத்துவம் சார்ந்த செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், வேறு பெரிய பிரச்சனைகள் நடக்காது. குரு பகவான் உங்கள் ராசியில் இருப்பது உங்களுக்கு நன்மை தரும்.

சுக்கிரன் மற்றும் செவ்வாய், உங்களுக்கு நன்மை தரக்கூடிய இடத்தில் அமையப்போகிறார்கள். நீண்ட காலமாக, முன்னோர்களின் சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகி, தீர்வு கிடைக்கும். தாயார், மனைவி, அல்லது பிள்ளைகளின் பெயர்களில் சொத்து வாங்குவதற்கான சிறப்பான மாதமாக அமைகிறது. வீடு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கும் இந்த கால கட்டம் சிறப்பாக அமைகிறது.

கேது பகவான் தொழில் ஸ்தானத்தில் அமைவது சிறிதளவு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இருப்பினும், குரு பகவான் இருப்பது, உங்களுக்கு நன்மையைத் தரக்கூடியதாக அமையும். குருவின் பார்வையானது சிறப்பாக இருப்பதால், பொருளாதாரத்தில் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாது.

புதன் பகவான், வெற்றி ஸ்தானத்தில் அமைவதால், நீங்கள் பணியில் சிறப்பாக விளங்க உதவுகிறது. இந்த நேரத்தில், முயற்சி செய்தால், வெற்றியில் முடியும் என்றே கூறலாம். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, எதிர்பார்த்த நன்மைகளைப் பெறுவீர்கள். அரசு சார்ந்தவற்றில் உங்களுக்கு நன்மை உண்டாகும். அரசு வேலைக்கு முயற்சி செய்யும் நபர்களுக்கும் இது ஒரு சிறப்பான காலமாக அமையும். நீண்ட காலமாக குழந்தைகள் இல்லாமல் இருப்பவர்கள், குலதெய்வத்தை வழிபட்டு குழந்தை வரம் வேண்டி வேண்டிக்கொள்ளலாம். மாணவர்களும், தங்களது கல்வியில் சிறப்பாக விளங்குவார்கள். சனி வக்ர பெயர்ச்சியின் காரணமாக, நீங்கள் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்