Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜூன் மாதத்தில் பணம் தண்ணியா செலவாகும்.. சிக்கனம் தேவைப்படும் ராசிக்காரங்க.. | June Matha Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
ஜூன் மாதத்தில் பணம் தண்ணியா செலவாகும்.. சிக்கனம் தேவைப்படும் ராசிக்காரங்க.. | June Matha Rasi Palan 2023 in TamilRepresentative Image.

ஜூன் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: 

ஜூன் மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷப ராசியில் சூரியன், மிதுன ராசியில் சுக்கிரன், கடக ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் சந்திரன் மற்றும் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஜூன் 07 ஆம் தேதி புதன் பகவான் ரிஷப ராசிக்கும், ஜூன் 15 ஆம் தேதி சூரிய பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 24 ஆம் தேதி புதன் பகவான் மிதுன ராசிக்கும், ஜூன் 30 ஆம் தேதி செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதேபோல், ஜூன் 17 ஆம் தேதி சனி பகவானின் வக்கிர நிலையானது ஆரம்பமாகிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் 12 ராசியினரும் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஜூன் மாத ராசி பலன்கள் 2023:

மேஷம் - பெண்களுக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். வீடு மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மாதத்தில் முயற்சிக்கலாம். இருப்பினும் சுக்கிரனும், செவ்வாயும் 4ஆம் இடமான சுகஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், தாய்வழி உறவினர்களில் ஒரு ஆணுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் படிக்க..

ரிஷபம் - உங்க லக்னத்தில் கிட்டத்தட்ட ஒன்பது நாட்கள் சூரியன் மற்றும் புதன் கிரகங்கள் அமர்ந்திருப்பதால், வெற்றி மேல் வெற்றி வந்து தேடி தரும். பெண்களுக்கு ஆளுமை திறம் அதிகரிக்கும். நினைத்தது கைகூடும். ஆரோக்கியம் மேம்படும். மனதில் உத்வேகம் பிறக்கும். எப்போதும் கோபமாக நடந்துக்கொண்டிருந்த ரிஷப ராசியினர் கோபத்தை கைவிட்டு அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். மேலும் படிக்க..

மிதுனம் - மாதத்தின் முதல் பாதி அற்புதம். குறிப்பாக வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருப்பவர்கள் ஏராளமான நன்மைகள் நடைபெறும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும் அல்லது நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த அதிகாரிகள் மாறலாம். பெண்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்க்கவும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். மேலும் படிக்க..

கடகம் - லக்னத்திலேயே சுக்கர, செவ்வாய் சேர்க்கை இருப்பதால் வாழ்க்கையில் தள்ளிப்போன பல முக்கியமான விஷயங்கள் அனைத்தும் எதிர்பாராமல் நடந்து முடியும். வண்டி, வாகனம் வாங்கும், மாற்றும் யோகம் உண்டு. கடகம், மீனம், விருச்சிகம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். இருப்பினும், இந்த காலக்கட்டத்தில் கணவன் உடல்நிலையில் கவனம் தேவை. மேலும் படிக்க..

சிம்மம் - இந்த ஜூன் மாதத்தில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் ஒன்பது நாள்களுக்கு இருக்கப் போவதால் தொழிலில் லாபம் உண்டாகும். பெரிய நபர்களின் ஆதரவால், தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய தொழில் செய்வதற்கான காலமாகவும் இந்த நேரம் அமைகிறது. பதவி உயர்வு, மதிப்பு கூடுதல் போன்றவையும் உங்கள் தொழிலுக்கு மேன்மை தரும். மேலும் படிக்க..

கன்னி - கன்னி ராசிக்கு ராசி அதிபதியான சூரியனும், புதனும் 9 நாள்களுக்கு இணைந்து இருக்கப்பட உள்ளனர். இவர்கள் ரிஷபம் என்று சொல்லக் கூடிய லாப ஸ்தானத்தில் இருக்கப் போகிறார். இதனால், பூர்வீக சொத்து, முன்னோர்கள் சொத்து, பாரம்பரிய சொத்துக்கள், சுபகாரியம், சுபநிகழ்ச்சிகள் நடப்பது, வண்டி வாகனம் வாங்குவது உள்ளிட்ட அனைத்து நன்மைகளும் நடக்கும். மேலும் படிக்க..

துலாம் - இந்த ஜூன் மாதத்தில் துலாம் ராசிக்காரர்கள் சுமார் 9 நாள்களுக்கு அதாவது, 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை புதன், சூரியன் இரண்டும் இணைந்து ரிஷப ராசி என்று சொல்லக் கூடிய சுக்கிரன் வீட்டில் இணைந்திருக்கிறது. இதன் காரணமாக, நியைய நல்ல விஷயங்கள் நடக்கும். சந்தோஷம் உண்டாகலாம். மேலும், மனதிற்கு திருப்தி அளிக்கும் வகையில் அமையும். மேலும் படிக்க..

விருச்சிகம் - விருச்சிக ராசி மற்றும் விருச்சிக லக்னம் சார்ந்த நபர்களுக்கு, ஏழாம் இடத்தில் சூரியன், சுக்கிரன் சேர்ந்து இருப்பது, உங்களுக்குத் தொழிலில் நல்ல லாபத்தைத் தரும். நட்பு வட்டாரங்களால் ஏராளமான நன்மைகளைப் பெறுவீர்கள். பல்வேறு விதமான உதவிகளைப் பெறுவீர்கள். மற்றவர்களிடத்தில் உதவி கேட்டால், உடனே உங்களுக்குக் கிடைத்து விடும். மேலும் படிக்க..

தனுசு - வீடு, மனை, சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். கடன் சுமைகள் குறையும். உடலில் இருந்து வந்த நோய்கள் குறைய தொடங்கும். பல நாட்களாக இழுபறியாக இருக்கும் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மருத்துவம் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். மேலும் படிக்க..

மகரம் - பூர்வபுனிய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் புதன் சேர்ந்து இருப்பதால் மகர ராசியினருக்கு பெரும் யோகமான மாதமாக அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கூடிய விரைவில் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களால் பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அடுத்தடுத்து சுப காரியங்களால் வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். மேலும் படிக்க..

கும்பம் - தாய்மார்களுக்கு ஜூன் மாதம் அமோகமாக இருக்கும். சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அம்மாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் மேம்படும். நினைத்த இடத்தில் படிப்பதற்கான யோகம் உள்ளது. பிடித்த வேலை கிடைக்கும். வங்கி வேலைக்காக காத்திருந்தால் அது கூடிய விரைவில் உங்களுக்கு கிடைக்கும். கார் மற்றும் உணவு உற்பத்தி செய்யும் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல ஏற்றம் தரும் மாதமாக இருக்கும். மேலும் படிக்க..

மீனம் - ஜூன் மாதம் மீன ராசியினருக்கு, நல்ல ஏற்றமான மாதமாக அமையும். ஆடம்பரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். பொருளாதார பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் நன்மைகள் நடக்கும். சில முக்கிய விஷயங்களுக்காக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். இடமாற்றம் மற்றும் தொழில் மாற்றத்திற்கான சிறந்த நேரம். மேலும் படிக்க.. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்