Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,718.77
229.78sensex(0.32%)
நிஃப்டி22,047.30
51.45sensex(0.23%)
USD
81.57
Exclusive

நேர்மையா இருக்கனும்.. இல்லைனா சங்கடங்களை சந்திக்க நேரிடும்.. | Chithirai Month Rasi Palan 2023 Kadagam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
நேர்மையா இருக்கனும்.. இல்லைனா சங்கடங்களை சந்திக்க நேரிடும்.. | Chithirai Month Rasi Palan 2023 Kadagam in TamilRepresentative Image.

சித்திரை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: சித்திரை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, சூரியன் மற்றும் புதன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், குரு பகவான் சித்திரை மாதம் 08 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், சித்திரை 19 ஆம் தேதி சுக்கிர பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கும், சித்திரை 27 ஆம் தேதி செவ்வாய் பகவான் மிதுனத்திலிருந்து கடகத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் சித்திரை மாதத்தில் கடக ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

நேர்மையா இருக்கனும்.. இல்லைனா சங்கடங்களை சந்திக்க நேரிடும்.. | Chithirai Month Rasi Palan 2023 Kadagam in TamilRepresentative Image

சித்திரை மாத ராசிபலன் 2023 கடகம்:

உங்க ராசிக்கு 10 ஆம் இடமான கர்ம ஸ்தானத்தில் ஐந்து கிரகங்களின் சேர்க்கை அவ்வளவாக நற்பலன்களை கொடுக்காது. வேலை இழப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. சகபணியாளர்களால் வேண்டாத சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் வர வேண்டிய பதவி உயர்வுகள், சம்பள உயர்வுகள் தடுக்கப்படும். எனவே, மேலிடத்தை பற்றி மற்றவர்களிடம் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

முக்கியமாக வீட்டில் இருக்கும் பெரியவர்களின் உடல்நிலையில் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சில பிரிவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது வார்த்தையில் தெளிவு வேண்டும். சிலருக்கு குழந்தை ஆரோக்கியம் சம்பந்த கவலைகள் அதிகரிக்கும். படிக்கின்ற குழந்தைகளுக்கு படிப்பில் தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரிகளுக்கு வீண் விரையங்கள் ஏற்படும். இந்த பிரச்சனையில் தப்பிக்க வேண்டுமென்றால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள். கூடவே நேர்மையாக நடந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்