Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

முக்கிய காரியங்களில் தடை ஏற்படலாம்.. தடையை நீக்க இத கண்டிப்பா செய்யுங்க..!| Chithirai Month Rasi Palan 2023 Simmam in Tamil

Gowthami Subramani Updated:
முக்கிய காரியங்களில் தடை ஏற்படலாம்.. தடையை நீக்க இத கண்டிப்பா செய்யுங்க..!| Chithirai Month Rasi Palan 2023 Simmam in TamilRepresentative Image.

சித்திரை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: சித்திரை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, சூரியன் மற்றும் புதன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், குரு பகவான் சித்திரை மாதம் 08 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், சித்திரை 19 ஆம் தேதி சுக்கிர பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கும், சித்திரை 27 ஆம் தேதி செவ்வாய் பகவான் மிதுனத்திலிருந்து கடகத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் சித்திரை மாதத்தில் சிம்ம ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

முக்கிய காரியங்களில் தடை ஏற்படலாம்.. தடையை நீக்க இத கண்டிப்பா செய்யுங்க..!| Chithirai Month Rasi Palan 2023 Simmam in TamilRepresentative Image

சித்திரை மாத ராசிபலன் 2023 சிம்மம்

தமிழ் மாதத்தில் முதல் மாதமான சித்திரை மாதத்தில், சிம்ம ராசி நேயர்களுக்கு சாதகமும், பாதகமும் சேர்ந்தே வருகிறது. உடல்நிலையைப் பொறுத்த வரை அம்மா, அப்பாவின் உடல்நிலையில் சற்று பிரச்சனைகள் ஏற்படலாம். வீட்டில், உடன் பிறந்த சகோதர, சகோதரிகளிடையே தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். வெகு தூர பயணங்களில் தடை ஏற்பட வாய்ப்புண்டு.

இருப்பினும், வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக, முன்கூட்டியே சரியாக பிளேன் செய்து கொள்வது நல்லது. இந்த மாதத்தில் நீங்கள் செய்ய முடிக்கும் காரியத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். காரியத் தடை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. முனீஸ்வரன் வழிபாடு செய்து காரியத்தைத் தொடங்குதல் வெற்றியைத் தரும்.

வழிபாடு: முனீஸ்வரன் வழிபாடு சிறப்பைத் தரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்