Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திடீர் வாய்ப்புகள்.. திடீர் திருப்பங்கள் ஏற்படும்.. | Chithirai Month Rasi Palan 2023 Midhunam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
திடீர் வாய்ப்புகள்.. திடீர் திருப்பங்கள் ஏற்படும்.. | Chithirai Month Rasi Palan 2023 Midhunam in TamilRepresentative Image.

சித்திரை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: சித்திரை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, சூரியன் மற்றும் புதன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், குரு பகவான் சித்திரை மாதம் 08 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், சித்திரை 19 ஆம் தேதி சுக்கிர பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கும், சித்திரை 27 ஆம் தேதி செவ்வாய் பகவான் மிதுனத்திலிருந்து கடகத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் சித்திரை மாதத்தில் மிதுன ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

திடீர் வாய்ப்புகள்.. திடீர் திருப்பங்கள் ஏற்படும்.. | Chithirai Month Rasi Palan 2023 Midhunam in TamilRepresentative Image

சித்திரை மாத ராசிபலன் 2023 மிதுனம்:

உங்க ராசிக்கு 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் 3 கிரகங்களின் சஞ்சாரம் இருப்பதால், வேறு மொழி மற்றும் மதம் சார்ந்த நபர்களால் அன்பு தொல்லைகள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு திடீர் வாய்ப்புகள் தேடி வரும். ஆன்மீகவாதிகளுக்கு மிக அனுகூலமான மாதமாகவும் இருக்கிறது. இப்பினும் மூத்த சகோதரர், சகோதரிகளிடம் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். கால் முட்டிகளில் விபத்துகளும் பாதிப்புகளும் வாய்ப்புகள் உண்டு. மிகுந்த கவனம் தேவை. 

பணவரவு இருந்தாலும் வீட்டு சூழ்நிலைகளை சமாளிக்க செலவுகள் ஏற்படும். வியாபாரம் எப்பவும்போல இருக்கும். குடும்பத்தில் சுப விஷேசங்கள் நடைபெறும். தாய்வழி பந்தங்களால் அனுகூலம் உண்டு. நீண்ட நாள் எண்ணங்கள், ஆசைகள் நிறைவேறும். உத்தியோகம் சாதமாக இருக்கும். இருப்பினும், வேலை மாற்றம் அல்லது நிறுவன மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக மாறலாம். எந்த பிரச்சனையும் இல்லை. பூர்வீக சொத்துக்களால் சாதகமான பலன் உண்டு. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்