Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எல்லாமே சொதப்பும் ஆனாலும் முயற்சியால் செய்து முடித்து காட்டுவீர்கள் | Chithirai Month Rasi Palan 2023 Kumbam in Tamil

Priyanka Hochumin Updated:
எல்லாமே சொதப்பும் ஆனாலும் முயற்சியால் செய்து முடித்து காட்டுவீர்கள் | Chithirai Month Rasi Palan 2023 Kumbam in TamilRepresentative Image.

சித்திரை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: சித்திரை மாதத்தில் கும்பம் ராசியில் ராகு, சூரியன் மற்றும் புதன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், குரு பகவான் சித்திரை மாதம் 08 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், சித்திரை 19 ஆம் தேதி சுக்கிர பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கும், சித்திரை 27 ஆம் தேதி செவ்வாய் பகவான் மிதுனத்திலிருந்து கடகத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் சித்திரை மாதத்தில் கும்ப ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

எல்லாமே சொதப்பும் ஆனாலும் முயற்சியால் செய்து முடித்து காட்டுவீர்கள் | Chithirai Month Rasi Palan 2023 Kumbam in TamilRepresentative Image

சித்திரை மாத ராசிபலன் 2023 கும்பம்:

இந்த சித்திரை மாதத்தில் கும்ப ராசியினர், ஏதேனும் யோசனையில் இருப்பீர்கள். எதிர்காலம், பொருளாதாரம், வாழ்க்கை, தொழில் குறித்து பல யோசனையில் நிதானமில்லாமல் செயல் படுவீர்கள். மற்றவர்களுடன் தொடர்பு மேற்கொள்ள சம்மந்தமான சாதனங்களில் பிரச்சனை ஏற்படலாம். நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் நாட்களில் திடீரென பிரச்சனைகள் வரலாம்.

பயணம் மேற்கொள்ளும் திட்டத்தில் இருந்தால் தடைகள் ஏற்படலாம். கணவரின் உடல் நிலையில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்களின் உடல்நிலையிலும் கவனம் செலுத்த வேண்டும். மூக்கு, தொண்டை, வாய் சம்மந்தமான தொந்தரவு ஏற்படலாம். கேதுவின் தாக்கத்தால் எதுவுமே சரியாக நடக்க வில்லை என்ற விரக்தியில் இருப்பீர்கள். அதனால் ஆன்மீகத்தில் ஈடுபட்டு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

வழிபாடு - வாமன ரூபத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று பாரிஜாத பூக்களை வைத்து வணங்கி வந்தால் கெட்டவை நீங்கி நல்லது நடக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்