சித்திரை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: சித்திரை மாதத்தில் மகரம் ராசியில் ராகு, சூரியன் மற்றும் புதன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், குரு பகவான் சித்திரை மாதம் 08 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், சித்திரை 19 ஆம் தேதி சுக்கிர பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கும், சித்திரை 27 ஆம் தேதி செவ்வாய் பகவான் மிதுனத்திலிருந்து கடகத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் சித்திரை மாதத்தில் மகரம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
மகர ராசிக்காரர்கள், தாயாரின் உடல் நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சனி மற்றும் செவ்வாயின் தாக்கத்தால் உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது. எனவே, வார்த்தைகளை பயன்படுத்தும் போது ஜாக்கிரதையாக பிரயோகியுங்கள். புது வீடு, வண்டி போன்றவற்றை வாங்குவதற்கான அமைப்பு உள்ளது.
உடலில் தினமும் பயன்படுத்தப்படும் உடல் உறுப்புகளில் தொந்தரவு ஏற்படலாம். சுகர், பீ.பி, கொலெஸ்ட்ரால் போன்ற நோய்களுக்கு மாத்திரை எடுத்துக்கொள்ளும் சூழல் உருவாகலாம். அதனால் உடல் நிலையில் அதிக அக்கறை மற்றும் கவனம் தேவை. எந்த பிரச்சனை வந்தாலும் அதனை தைரியமாக சமாளிக்க வேண்டும். மற்றவர்களை நம்பி எந்த ஒரு விஷயத்தையும் செய்யாதீர்கள். மொத்தத்தில் உடல் நிலையில் கவனம் மற்றும் துணிச்சலான செயல்பாடு தான் உங்களை காக்கும்.
வழிபாடு - ஆஞ்சிநேயருக்கு வடை அல்லது வெத்தலை மாலை சாத்தினால் நல்லது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…