மே மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மே மாதத்தில் மேஷம் ராசியில் சூரியன், குரு, ராகு மற்றும் புதன், மிதுனத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், மே மாதம் 03 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும், மே 11 ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியும், மே 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மீண்டும் மே 31 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுவதால் மே மாதத்தில் தனுசு ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
உங்கள் ராசியின் ராசிநாதன் 4 ஆம் வீட்டிலிருந்து 5- ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக, இந்த மாதம் சிறப்பாக அமைகிறது. ராசி அதிபதி செவ்வாய் பகவான் 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. வெளிநாடு தொடர்பான ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் நன்மைகள் ஏற்படும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு இந்த காலம் உரித்தான காலம் என்றே கூறலாம். உங்கள் ராசிக்கு 7 மற்றும் 10 ஆம் அதிபதியான புதன் பகவான் 6 ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.
புதன் அதிக வலுப்பெறாமல், மறைவிடங்களில் இருப்பது தனுசு ராசிக்காரர்களுக்கு உறவினர் வழியில் நன்மைகள் ஏற்படும். அதே போல, மனைவி வழியில் நன்மைகள் உண்டாகும். நண்பர்களால் நன்மை உண்டாக வாய்ப்புண்டு. சுக்கிர பகவானின் சஞ்சாரம், தனுசு ராசிக்காரர்கள் வேலையில் முன்னேற்றம் பெறுவீர்கள். தாய் வழி உறவினர்கள் மூலம், உங்களின் முன்னேற்றம் ஏற்படும். அது மட்டுமல்லாமல், தந்தை வழி உறவினர்கள் மூலமாகவும் உங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் நிகழும். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக உள்ளது. இந்த மாதம் 24, 25, மற்றும் 26 ஆகிய நாள்களில் சந்திராஷ்டமம் வருவதால் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…