Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம்.. அதிக கவனம் தேவை..! | Chithirai Month Rasi Palan 2023 Thulam in Tamil

Gowthami Subramani Updated:
தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம்.. அதிக கவனம் தேவை..! | Chithirai Month Rasi Palan 2023 Thulam in TamilRepresentative Image.

சித்திரை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: சித்திரை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, சூரியன் மற்றும் புதன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், குரு பகவான் சித்திரை மாதம் 08 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், சித்திரை 19 ஆம் தேதி சுக்கிர பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கும், சித்திரை 27 ஆம் தேதி செவ்வாய் பகவான் மிதுனத்திலிருந்து கடகத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் சித்திரை மாதத்தில் துலாம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம்.. அதிக கவனம் தேவை..! | Chithirai Month Rasi Palan 2023 Thulam in TamilRepresentative Image

சித்திரை மாத ராசிபலன் 2023 துலாம்

துலாம் ராசி நேயர்களுக்கு, தேவையில்லாத குழப்பம் ஏற்படலாம். தொழிலில் சற்று கவனம் தேவை. தொழில் சார்ந்த விஷயங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த கால கட்டத்தில் தொழிலில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உடல்நிலையைப் பொறுத்த வரை அடிவயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.

பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். பண வரவு கிடைக்கும். அதே சமயம் செலவு செய்தலைக் குறைத்தல் நல்லது. ஆடம்பரச் செலவு வீண் பிரச்சனையைத் தரும். சில நேரங்களில் எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறாமல் போகலாம். எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொள்வது நன்மையைத் தரும். உடல்நிலையைக் கவனமாகப் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பெண் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம். வெளிநாடு செல்வதற்கு அதிக வாய்ப்பு உண்டு. புதிய நபர்களின் அறிமுகம் சிறப்பைத் தரும்.

வழிபாடு: கற்பக விநாயகரின் வழிபாடு மிகப்பெரிய ஏற்றத்தையும், அனுகூலத்தையும் கொடுக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்