Sat ,May 11, 2024

சென்செக்ஸ் 72,664.47
260.30sensex(0.36%)
நிஃப்டி22,055.20
97.70sensex(0.44%)
USD
81.57
Exclusive

அதிக செலவு உண்டாகும்.. ஆனா இத மட்டும் கண்டிப்பாக செய்யவே கூடாது..! | Chithirai Month Rasi Palan 2023 Viruchigam in Tamil

Gowthami Subramani Updated:
அதிக செலவு உண்டாகும்.. ஆனா இத மட்டும் கண்டிப்பாக செய்யவே கூடாது..! | Chithirai Month Rasi Palan 2023 Viruchigam in TamilRepresentative Image.

சித்திரை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: சித்திரை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, சூரியன் மற்றும் புதன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், குரு பகவான் சித்திரை மாதம் 08 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், சித்திரை 19 ஆம் தேதி சுக்கிர பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கும், சித்திரை 27 ஆம் தேதி செவ்வாய் பகவான் மிதுனத்திலிருந்து கடகத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் சித்திரை மாதத்தில் விருச்சிக ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

அதிக செலவு உண்டாகும்.. ஆனா இத மட்டும் கண்டிப்பாக செய்யவே கூடாது..! | Chithirai Month Rasi Palan 2023 Viruchigam in TamilRepresentative Image

சித்திரை மாத ராசிபலன் 2023 விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு, கேது இடம் பெற்றிருப்பதால் உடல் நிலையில் மிகக் கவனமாக இருப்பது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவு ஏற்பட வாய்ப்புண்டு. வேலையிலும் கடுமையான போராட்டத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும். செய்ய நினைத்த காரியங்களில் தடை ஏற்படும். மற்றவர்களிடம் குடும்பத்தைப் பற்றியோ, தொழில்களைப் பற்றியோ கூற வேண்டாம். ஐந்து கிரக சேர்க்கையின் காரணமாக, வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

சிறிய உடல் நிலைப் பிரச்சனையாக இருந்தாலும், கவனித்துச் செயல்படுவது நல்லது. பொருளாதாரத்தில் சற்று கவனம் தேவை. கடன் கொடுத்தல், வாங்கலில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். குடும்பத்தாரிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். பொறுமையோடு செயல்பட்டால், வெற்றி நிச்சயம். செய்யும் காரியத்தில் கவனம் தேவை.

வழிபாடு: ஹனுமன் வழிபாடு மேம்பாட்டைத் தரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்