Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 74,077.04
1,080.73sensex(1.48%)
நிஃப்டி22,472.80
349.15sensex(1.58%)
USD
81.57
Exclusive

எல்லாம் நல்லதாவே நடக்கும் முக்கியமா லவ் சக்சஸ் ஆகும் | Danush April Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
எல்லாம் நல்லதாவே நடக்கும் முக்கியமா லவ் சக்சஸ் ஆகும் | Danush April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

ஏப்ரல் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷ ராசியில் புதன், ராகு பகவான்; ரிஷப ராசியில் சுக்கிர பகவான்; மிதுன ராசியில் செவ்வாய்; துலாம் ராசியில் கேது பகவான்; கும்ப ராசியில் சனி பகவான்; மீன ராசியில் குரு, சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி மீன ராசியில் சஞ்சாரம் செய்த சூரிய பகவான் மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேப்போல், 21 ஆம் தேதி புதன் வக்கிரமாகிறார். இதனால், ஏப்ரல் மாதத்தில் தனுஷ் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

எல்லாம் நல்லதாவே நடக்கும் முக்கியமா லவ் சக்சஸ் ஆகும் | Danush April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

வரும் ஏப்ரல் மாதத்தில் தனுஷ் ராசிக்கு குரு பெயர்ச்சியாவதில் அனைத்துமே நல்லதா தான் நடக்கும். நீங்கள் எந்த மாதிரியான வேலையை எதிர்பார்த்தீர்களோ அது நல்ல படியா நிறைவேறும். எப்படியோ வாழலாம் என்று நினைக்காமல் இலக்கு ஒன்றை வைத்து அதனை நோக்கி சென்று வெற்றியும் பெறுவீர்கள். தொழிலில் நல்ல வளர்ச்சியும், வியாபாரத்தில் நல்ல லாபமும் கிடைக்கும். பல வருடங்களாக வேலை செய்தும் உங்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் அடுத்த ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்க்காத நேரத்தில் உங்களை வந்து சேறும்.

எல்லாம் நல்லதாவே நடக்கும் முக்கியமா லவ் சக்சஸ் ஆகும் | Danush April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

குடும்பத்தில் இருப்பவர்களின் எதிர்பால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. கூடிய விரைவில் குடும்ப உறுப்பினர்களின் ஆசியுடன் திருமணம் நடைபெறும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களை இழிவு படுத்தியவர்கள் உங்களை வாழ்த்துவார்கள். அரசு வேலைக்காக பல முறை முயற்சித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும். பதவி, அதிகாரத்திற்காக போராடிக் கொண்டிருப்பவர்களாக இருந்தால் அதுவும் உங்களை வந்து சேறும். குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உங்களை விட வயதில் மூத்தவர்களின் ஆசிர்வாதத்தால் சிறப்பாக இருப்பீர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்