Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தான் உண்டு தான் வேலையுண்டுனு இருந்த பிரச்சனை இருக்காது | Dhanusu February Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
தான் உண்டு தான் வேலையுண்டுனு இருந்த பிரச்சனை இருக்காது | Dhanusu February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

பிப்ரவரி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய்,  6 ஆம் இடமான கன்னி ராசியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 9 ஆம் இடமான தனுசு ராசியில் புதன், 10 ஆம் இடமான மகரத்தில் சனி மற்றும் சூரியன், 11 ஆம் இடமான லாப ஸ்தானம் கும்பத்தில் சுக்கிரன், 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 4 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 13 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி சுக்கிரன் பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், 21 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், பிப்ரவரி மாதத்தில் தனுசு ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

தான் உண்டு தான் வேலையுண்டுனு இருந்த பிரச்சனை இருக்காது | Dhanusu February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

பணியில் இருப்பவர்கள் இந்த மாதம் அற்புதமான மாதமாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு என எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கும். நீண்ட நாட்களாக பட்ட கஷ்டத்திற்கு உண்டான பாராட்டு கிடைக்கும் மாதமாக இருக்கும். திருமணம் தள்ளிப்போன அனைத்து தனுசு ராசிக்காரர்களுக்கும் இந்த முறை திருமண யோகம் கிடைக்கும். காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல காலம். சிலருக்கு காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் விலகி, அன்பு அதிகரிக்கும். 

தான் உண்டு தான் வேலையுண்டுனு இருந்த பிரச்சனை இருக்காது | Dhanusu February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

மாணவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த மாணவர்கள் இம்மாத கிரக சஞ்சாரத்தினால் நல்ல மதிப்பெண்கள் எடுப்பீர்கள். உறவுக்குள் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் விலகி, நெருக்கம், ஒற்றுமை அதிகரிக்கும். சனி விலகியதால், உடல்நல பிரச்சனைகள் அனைத்தும் விலகும். சிலருக்கு வீடு மாற்றவும், புது வீடு வாங்கவும் யோகம் உண்டு. ரொம்ப நாட்களாக சந்திக்க வேண்டிய நபரை சந்திப்பீர்கள். அதேபோல், நீண்ட நாட்களாக பிரிந்த வாழ்ந்த தம்பதிகள் ஒன்று சேருவீர்கள். 

தான் உண்டு தான் வேலையுண்டுனு இருந்த பிரச்சனை இருக்காது | Dhanusu February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

மாதத்தின் முதலிலேயே நற்செய்தி காத்திருக்கிறது. புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இருப்பினும், சுய ஸ்தானத்தில் புதன் சஞ்சாரம் செய்வதால் பொருள் விரையம் ஏற்படும். எனவே, பயணத்தின்போது விலையுயர்ந்த பொருட்களின் மீது அதிக கவனம் தேவை. அதேபோல், மற்றவர்களிடம் சண்டை சச்சரவை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் சகஊழியர்கள் வேண்டுமென்றே வம்பிற்கு வருவார்கள், ஒதுங்கி செல்வது நல்லது. ஏமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மற்றவர்களை நம்பி முயற்சிகளில் இறங்குவதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

சந்திராஷ்டம நாள்: 4, 5, 6

பரிகாரம்: தினசரி சித்தர்கள் வழிபாடு செய்து வருவது சிறந்த பரிகாரம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்