Sun ,Jul 14, 2024

சென்செக்ஸ் 80,519.34
622.00sensex(0.78%)
நிஃப்டி24,502.15
186.20sensex(0.77%)
USD
81.57
Exclusive

விபரீத ராஜயோகத்தைப் பெறப்போகும் கடக ராசிக்காரர்கள்! | Kadagam February Month Rasi Palan 2023 in Tamil

Gowthami Subramani Updated:
விபரீத ராஜயோகத்தைப் பெறப்போகும் கடக ராசிக்காரர்கள்! | Kadagam February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

பிப்ரவரி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: கடகம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய்,  6 ஆம் இடமான கன்னி ராசியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 9 ஆம் இடமான தனுசு ராசியில் புதன், 10 ஆம் இடமான மகரத்தில் சனி மற்றும் சூரியன், 11 ஆம் இடமான லாப ஸ்தானம் கும்பத்தில் சுக்கிரன், 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 4 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 13 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி சுக்கிரன் பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், 21 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், பிப்ரவரி மாதத்தில் கடகம் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

விபரீத ராஜயோகத்தைப் பெறப்போகும் கடக ராசிக்காரர்கள்! | Kadagam February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆங்கில மாதங்களில் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதத்தில், கடக ராசி மற்றும் கடக லக்னம் உள்ளவர்களுக்கு, நான்காவது வீட்டில் கேது பகவான் சஞ்சாரம் செய்கிறார். இது அந்த அளவுக்கு நல்லவற்றைத் தராது. ஜனவரி மாதத்தில் இருந்தது போல, எல்லா விஷயங்களும் உங்களுக்கு இருந்தாலும், அதை உங்களால் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். இது மன விரக்தியை ஏற்படுத்திக் கொடுக்கும். எதாவதொரு சிந்தனை உங்கள் மனதில் எழுந்து கொண்டே இருக்கும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை கொள்வது முக்கியம். தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

இந்த மாதத்தில் கடன் தொல்லை இருக்கும். கடன் கொடுத்தோ அல்லது கடன் வாங்கியோ பிரச்சனைகளுக்கு உள்ளாவீர்கள். குடும்ப ஒற்றுமை பலமாக உள்ளது. என்ன பிரச்சனைகள் வந்தாலும், குடும்பத்துடன் ஒற்றுமையுடன் இருப்பீர்கள். வண்டி வாகனங்களைப் பொறுத்த வரை மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. இந்த மாதத்தில் உங்களுக்கு அஷ்டமச் சனி இருப்பதால், எல்லா விஷயத்திலும் கவனமாகச் செயல்படுவது நல்லது.

அதே சமயம், ஆறாம் வீட்டில் புதன் பகவான் சஞ்சாரம் செய்திருப்பது ஓர் அற்புதமான நாள்களாக அமையும். ஜனவரி மாதத்தில் புதன் பகவானுடன் சூரியம் சஞ்சாரம் செய்வதால் மிதமான முன்னேற்றம் இருந்திருக்கலாம். ஆனால், இந்த மாதத்தில் புதன் தனித்து நின்று விபரீத ராஜயோகத்தைத் தருவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் இருக்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிறிய பதவியில் இருந்தாலும், உங்களை விட மூத்த பதவியில் உள்ளவர்கள் உங்களிடம் கேட்டே முடிவுகளை எடுப்பர். நீங்கள் இறங்கிய விஷயத்தில் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். ராகு பகவான் 10-ல் இருப்பதால், சில அவப்பெயர்களைக் கொண்டு வந்தாலும் புதன் பகவான் அவற்றை சமாளிப்பதாக உள்ளார்.

விபரீத ராஜயோகத்தைப் பெறப்போகும் கடக ராசிக்காரர்கள்! | Kadagam February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். அதாவது பின்னடைவிலிருந்து தப்பித்து செல்லும் நிலை என்றே கூறலாம். அதே சமயம், தொழிலைப் பொறுத்த வரை கவனமாகச் செயல்படுவதும் அவசியம். இதில் எந்த புதிய முதலீடுகளையும் செய்யாதிருப்பது நல்லது. இருக்கும் முதலீடுகளை எப்படி சரியாகப் பயன்படுத்தலாம் என்பதில் தெளிவான சிந்தனை கொண்டிருக்க வேண்டும். அனைவரிடமும் இனிமையாக நடந்து கொள்ள வேண்டும். மன மகிழ்ச்சியுடன் இருக்கும் நாளாக அமையும்.

புத்திசாதுர்யம் அதிகமாக இருக்கும். சனி பகவான் ஆதிக்கத்தால் பிரச்சனைகள் நேர்ந்தாலும், அவற்றை புதன் பகவான் சமாளிக்கும் இடத்தில் உள்ளார். தொழில் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

உங்கள் ராசிக்கும் ஏழாம் இடத்தில் சூரிய பகவான் இருப்பது நல்லது இருக்காது. கண்டக சனியில் நிறைய பிரச்சனைகளைச் சந்தித்திருப்பினும், அஷ்ட சனி நடைபெறும் இந்த காலகட்டத்தில் அலைச்சல்கள் அதிகமாகவே இருக்கும். ஒரு காரணமற்ற அலைச்சலாக இருக்கும். வயிறு சம்பந்தமான நோய்கள் உண்டாகலாம். நேரத்திற்கு சாப்பிட்டு, உடல் நலத்தை கவனித்துக் கொள்வது நல்லது. பயம், பதட்டம் அதிகரிக்கும். மன உறுதியோடு செயல்பட்டு அதனைத் தவிர்க்கலாம்.

எதாவதொரு வகையான கவலைகள் அதிகரிக்கும். வேலை சார்ந்து, குடும்பம் சார்ந்த, பணம் சார்ந்த என பல்வேறு வகைகளில் கவலைகள் நேரிடலாம். இவை எதையும் கண்டு கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருந்து, அடுத்து என்ன செய்யலாம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

விபரீத ராஜயோகத்தைப் பெறப்போகும் கடக ராசிக்காரர்கள்! | Kadagam February Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

அஷ்டமச் சனி இருக்கிறது என பயப்படத் தேவையில்லை. இது உங்களுக்கு சிறந்த ஒரு அனுபவத்தைத் தரும். இந்த அனுபவத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் வெற்றியைப் பெறலாம். இந்த கால கட்டத்தில் உங்களுடைய அனுபவத்தை வைத்து உங்களின் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.

தேவையில்லாத விரயச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கடன் வாங்குவதோ அல்லது வழங்குவதோ அறவே கூடாது. இது உறவினர்களுக்கிடையே விரிசலை உண்டாக்கும். எந்த பிரச்சனைகளிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்களைத் தேடி பிரச்சனைகள் வந்தாலும், தலைக்கணம் இருக்கக் கூடாது. தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். தியானம், யோகா உள்ளிட்டவற்றில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. நேர்மையான வழியில் எப்படி முன்னேறுவது என்பதில் மட்டும் இருக்க வேண்டும். புதிய வீட்டுக்கு குடி பெயர்ப்பது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். எதிர்பாராத வெற்றிகள் உங்களுக்குக் கிடைக்கும்.

குரு பகவான் 9 ஆவது வீட்டில் சஞ்சாரிக்கிறார். இது உங்களுக்கு இராஜ யோகம் என்றே கூறலாம். சனி பகவான் துன்பத்தைத் தந்தாலும், குரு பகவான் உங்கள் பக்கம் நின்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தருவார். பதவி முன்னேற்றம் கண்டிப்பாக கிடைக்கும். இந்த மாதம் உங்களுக்குச் சம்பள உயர்வும் இருக்கும். உங்களின் அறிவுரைகளைப் படியே பெரிய மனிதர்களும் நடந்து கொள்வர். இறங்கிய விஷயங்களில் எந்தவொரு கஷ்டம் சனி பகவானால் வந்திருப்பினும், அவை அனைத்தும் ஒரு பெரிய லாபகரமானதாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2, 3, 6

சந்திராஷ்டம நாள்: 20, 21

பரிகாரம்: குலதெய்வக் கோவில்களுக்குச் சென்று வழிபடுதல் மற்றும் குரு பகவானை வழிபடுதலும் நன்மையைத் தரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்