Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Horoscope Tamil: இன்று பொறுமையை இழப்பதால் பிரச்சனையை அனுபவிக்கும் ராசிக்காரர் நீங்களா..? மே 24, 2022 இன்றைய ராசிபலன்..! 

Manoj Krishnamoorthi May 23, 2022 & 15:40 [IST]
Tomorrow Horoscope Tamil: இன்று பொறுமையை இழப்பதால் பிரச்சனையை அனுபவிக்கும் ராசிக்காரர் நீங்களா..? மே 24, 2022 இன்றைய ராசிபலன்..! Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 07:30-  08:30 வரை

மாலை: 04:30-  05:30 வரை

மேஷம் (Aries 2022 Horoscope)

உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும், மேலும் உங்கள் ராசிக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும், உங்கள் மேலதிகாரி உஙளைத் தேடி வந்து பாராட்டுவார். நிதி நிலை ஓரளவு நன்றாக உள்ளது, கையில் திருப்திகரமான பணப்புழக்கம் இருக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும், வீட்டில் விட்டு கொடுத்து போவீர்கள். மன நிலை நிம்மதியாக இருக்கும்.  உடல்நலம் மிகவும் நன்றாக உள்ளது. மாணவர்களின் கல்வி நிலை நல்ல முன்னேற்றம் கொள்ளும், ஆசிரியரின் மதிப்பைப் பெறுவர். பாராட்டு!    

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும் தருணமே வாழ்க்கை என்பதை உணர்ந்த உங்களுக்கு இன்று எதிர்பாராத விஜயம் மனதை ஆனந்தமாக்கும், வீட்டில் வாழ்க்கைத் துணையுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். நண்பர்களுடன் அல்லது மனம் விரும்பும் நபருடன் பொழுதைக் கழிப்பீர்கள். பொழுதுபோக்கு தலத்துக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. செல்வ நிலை சீராக உள்ளது, வரவும் செலவும் சமமாக இருக்கும். அலுவலகத்தில் இன்று வேலைகளைத் திட்டமிட்டபடி முடித்து சாதனை படைப்பீர்கள். கல்வி ஓரளவு நன்றாக உள்ளது. உடலும் மனமும் ஒருநிலையில் இருக்கும். வளர்ச்சி!    

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 3

 

மேலும் படிக்க: வைகாசி மாத ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை முதல் பாதி 6 ராசியின் ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

மிதுனம் (Gemini 2022 Horoscope)

தன்மையான பேச்சுக்கு சொந்தக்காரரான உங்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும், அலுவலக பணிகளை முடிக்க அதிகமான உழைப்பு தேவைப்படும். சுய தொழில் செய்பவருக்கு இன்றைய இலக்கை முடிக்க அதிகம் போராட வேண்டும். பண வரவு குறைவாக இருக்கும், வீட்டில் இயல்பு நிலை இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லையென்றாலும் மனம் பதட்டமாக இருக்கும். குழப்பம்! 

அதிர்ஷ்ட நிறம்: நீலம்  

அதிர்ஷ்ட எண்: 4

கடகம் (Cancer 2022 Horoscope)

பணிவான குணத்தைக் கொண்ட கடக ராசிக்காரரே இன்று உங்கள் ராசிக்கு பொறுமையாக இருக்க வேண்டிய நாளாகும், முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் பிறரின் ஆலோசனைப் பெறுவது நன்மை ஆகும். கவனக் குறைவின் காரணமாக இன்று செல்வ இழப்பு ஏற்படும். திருமண வாழ்க்கையில் சிறிய ஊடல்கள் உருவாகும். உங்கள் காதல் வாழ்க்கையில் பொறுமை காப்பது நன்மை ஆகும். உடல்நலத்தில் திடீரென எதிர்மறையான விளைவுகள் உருவாகும். பொறுமை! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 9 

சிம்மம் (Leo 2022 Horoscope)

தெளிவான திட்டங்களை மனதில் வகுத்து திடமான வாழ்க்கை வாழ நினைக்கும் உங்களுக்கு இன்று சாதகமான நாளாகும், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் கொடுத்த வேலையை விரைவாக முடிப்பீர்கள். இன்று குடும்பத்தாருடன் இன்பமாகப் பொழுதைச் செலவிடுவீர்கள்.  வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. செல்வ நிலை நன்றாக உயரும். சிறப்பாக உடல்நலம் இன்று இருக்கும். ஆதரவு! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி (Virgo 2022 Horoscope)

இன்பமான வாழ்க்கை எதிர்பார்த்த உங்களுக்கு இன்றைய நாள் நன்றாக இருக்கும், குடும்பத்தில் இன்பம் அதிகமாகும் இன்றைய பொழுது முழுவதும் நிம்மதியாகக் கழிப்பீர்கள்.  பண வரவு இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும்.  மாணவர்களின் கல்வி நிலை மிகவும் நன்றாக  இருக்கும், எதிர்பாராத ஊக்கத் தொகை கிடைக்கும். உங்களின் திடமான மன நிலை ஆரோக்கியமான உடல்நலத்தைத் தரும். சந்தோஷம்!  

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

துலாம் (Libra 2022 Horoscope)

நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட துலாம் ராசிக்காரரே இன்று உங்கள் ராசிக்கு இன்று செய்யும் செயலில் அதிகமான கவனம் வேண்டும். அலுவலகத்தில் நல்ல நிலை இருந்தபோதும் மனம் வெறுமையாக நினைக்கும். வேலைகளில் சிறிய தவறுகள் அதிகமான நேரத்தைச் சரிசெய்ய எடுத்து கொள்ளும். செல்வ நிலை மந்தமாக இருக்கும், குடும்பத்தில்  வாக்குவாதம் இருக்கும், கணவன் மனைவி ஊறவில் நல்லிணக்கம்  இருக்கும், எதிர்காலத் தேவைக்காக இன்று முதலீடு செய்வதைப் பற்றி சிந்திப்பீர்கள். மனம் பதட்டமாக இருக்கும். உடல்நலம்  சிறிய வலிகள் இருக்கும். மருத்துவரின் ஆலோசனைத் தேவைப்படும். சோர்வு! 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

இனிமையான குணத்தால் அனைவரின் நட்பைப் பெறும்  உங்களுக்கு இன்றைய தினம் கோபம் அதிகமாக வரும், உங்கள் உணர்ச்சிவத்தால் வியாபாரத்தில் சில முன்னேற்றத்தைத் தவற விடுவீர்கள். இன்று வீட்டில் அமைதி காப்பது உறவில் விரிசல் அளிக்காது. திருமண வாழ்க்கையில் விட்டு கொடுத்து போதல் உறவின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அலுவலகத்தில் சில தொல்லைகள் இருக்கும். அதிகமான செலவுகள் இருக்கும். செலவைக் கட்டுப்படுத்த முயல்வது எதிர்காலத்தில் நன்மை பகுக்கும். உடல்நலத்தில் சிறிய கோளாறு இருக்கும்.,ஓய்வு எடுப்பது அவசியமாகும். லாபம்!   

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 2

தனுசு (Sagittarius 2022 Horoscope)

தன்னம்பிக்கை அதிகம் கொண்ட உங்களுக்கு இன்று லாபகரமான நாளாகும், குடும்பத்தில்  நல்ல சூழல் உருவாக்கும். காதல் வாழ்க்கையில் உங்கள் இனிமையான வார்த்தைகள் நல்ல உறவை உருவாகும், புரிதல் ஏற்படும். திருமண வாழ்க்கையில் துணையுடன் அன்பாக இருப்பீர்கள். அலுவலகத்தில் திருப்திகரமான நாளாக  இருக்கும். சக பணியாளருடன் நல்ல உறவு ஏற்படும். பண வரவு உண்டு. ஆரோக்கியக் குறை இருக்காது ஆனால் உணவு கட்டுப்பாடு அவசியமாகும். தொழில் வளர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்:  ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

 

மேலும் படிக்க: வைகாசி ராசிபலன் PART 2, துலாம் முதல் மீனம் வரை அடுத்த 6 ராசியின் ராசிபலனைப் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்

மகரம் (Capricorn 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களுக்கு புரியாத புதிராக இருக்கும், பணியிடத்தில் இன்று இருக்கமான நிலை இருந்தாலும் உங்கள் மனம் இன்பமாக இருக்கும். வீட்டில் துணையுடன் சண்டையிடுவீர்கள். பெற்றோரின் மனதைக் காயப்படுத்தக் கூடும். நிதி நிலை ஓரளவு நன்றாக இருக்கும். உணவு முறையில் ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனைகள் உருவாகும். மாற்றம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8 

கும்பம் (Aquarius 2022 Horoscope)

சாதுவான உங்களுக்கு இன்று பணியிடத்தில் சவால்கள் அதிகமாக இருக்கும், புதுமையான செயல்களை உருவாக்கி உங்கள் திறமையை நிரூபிக்கப் போராடுவீர்கள், விடாமுயற்சியால் வெற்றி அடைவீர்கள். இன்று நிதி நெருக்கடி இருப்பதால் கடன் வாங்கும் சூழல் அதிகமாகும்.  வீட்டில் இன்று அமைதியாக இருப்பது மற்றவர்களுக்குப் புதுமையாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 1

மீனம்(Pisces 2022 Horoscope)

இனிமையான மனதைக் கொண்ட நீங்கள் இன்று உற்சாகமாக இருப்பீர்கள், குடும்பத்தினர் உடன் அதிக நேரம் செலவழிக்கக் கூடும். இன்று உங்கள் செல்வ நிலையில் வரவு அதிகமாகும், பொழுதுபோக்கு அம்சங்களில் ஆர்வம் தோன்றும்.தொழிலில்  நீங்கள் செய்யும் காரியம் அசுர வளர்ச்சி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்ட வேண்டும். திருமண வாழ்க்கை புரிதல் அதிகமாகும். உடல்நலத்தில் பிரச்சனை ஏதுமில்லை. அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்