Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆரம்பமே அமர்களமாகப் போகுது.. நினைத்தது நிறைவேறும் | January Month Rasi Palan 2023 Mesham

Nandhinipriya Ganeshan Updated:
ஆரம்பமே அமர்களமாகப் போகுது.. நினைத்தது நிறைவேறும் | January Month Rasi Palan 2023 MeshamRepresentative Image.

ஜனவரி மாதத்தில் மேஷ ராசியில் ராகுவும்,  ரிஷப ராசியில் செவ்வாய் வக்கிர நிலையிலும், துலாம் ராசியில் கேது பகவானும், தனுசு ராசியில் சூரியன் மற்றும் புதன், மகர ராசியில் சுக்கிரன் மற்றும் சனிபகவான், மீன ராசியில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 8 ஆம் தேதி புதன் பகவான் வக்கிர நிலைமை முடிவடைந்து நேர் பாதையில் பயணிக்க இருக்கிறார். 13 ஆம் தேதி செவ்வாய் பகவானின் வக்கிர நிலையானது முடிந்து நேர்பாதையில் பயணிக்கிறார். 15 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 23 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். திருக்கணித பிரகாரத்தின் படி, சனி பகவான்  ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஜனவரி மாதத்தில் மிதுன ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

இந்த ஜனவரி மாதம் மேஷ ராசியினருக்கு அற்புதமான பலன்களை பெற்றுத்தரப் போகிறது. இந்த மாதத்தில் நடைபெற இருக்கும் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பல பலன்களை கொடுக்கவுள்ளது. நினைத்தது நிறைவேறும். புதிய முயற்சிகளில் துணிந்து இறங்கலாம். அனுகூலப் பலன்களை பெற்று தரும். உங்க ராசியின் 4ஆம் இடத்தை சுக்ரம், சனி, குரு பகவானும் பார்வையிடுவதால், எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிடைக்கும். வீடு, மனை சார்ந்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும். 

ஆரம்பமே அமர்களமாகப் போகுது.. நினைத்தது நிறைவேறும் | January Month Rasi Palan 2023 MeshamRepresentative Image

சுக்ரனின் அருளால் தொழில் துறையில் அமோகமாக லாபம் இருக்கும். சூரியனும் சனியும் 10வது வீட்டில் இணைவதால் பணியிடத்தல் நல்ல மதிப்பை பெற இரட்டிப்பாக வேலை செய்ய வேண்டியிருக்கும். சகஊழியர்களிடமும் மேலதிகாரிகளிடமும் இருந்து வந்த கருத்து முரண்பாடுகள் விலகும். மாணவர்களை பொறுத்தவரை கேட்டது நடக்கும். 

குடும்பத்தில் இருந்து வந்த அனைத்து பிரச்சனையும் விலகி, ஒற்றுமை ஏற்படும். தள்ளிப்போன சுபகாரியங்கள் நல்ல முறையில் நடைபெறும். அனைத்து பணிகளையும் மிகவும் சுறுசுறுப்பாகவும் அக்கறையுடனும் மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு நிறைய சுபவிரைய பலன்களை அள்ளிக்கொடுக்கப்போகிறது. ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.  குடும்பத்தில் அனைவரிடமும் அக்கறை காட்டுவீர்கள். ஆக மொத்தம் மேஷ ராசியினருக்கு இந்த வருடத்தின் முதல் மாதம் சூப்பரோ சூப்பர். 

பரிகாரம்: அனுமன் அல்லது துர்க்கை அம்மனை தினமும் வழிபாடு செய்து வரலாம். வாரத்திற்கு ஒருமுறை நவகிரக வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை கொடுக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1,3,6,9 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்