மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 25 ஆம் நாளுக்கான [10 ஜூலை 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நல்ல நேரம்
காலை: 06:15 - 07.15 வரை
மாலை: 04:45 - 05:45 வரை
மேஷம் | Today Rasi Palan Mesham
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். துணையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எந்த செயலையும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் செய்வீர்கள். நண்பர்களுடன் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கி, பாசம் அதிகரிக்கும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். விருந்தினர் வருகையால், குடும்பத்தில் சந்தோசம் பெருகும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நற்செயல்!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 7
ரிஷபம் | Today Rasi Palan Rishabam
சகபணியாளர்களுடன் கடுமையாக நடந்துக் கொள்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் வீண் கோபத்தினால் சில சிறந்த வாய்ப்புகளை இழப்பீர்கள். புதிய நபரால் நண்பர்களுக்கிடையில் விரிசல் ஏற்படும். நிதி வளர்ச்சி சுமாராக தான் இருக்கும். வீண் செலவுகளை தவிர்க்கவும். துணையுடன் வரட்டு கௌரவத்தை தவிர்ப்பதன் மூலம் நல்ல உறவுமுறையை பராமரிக்கலாம். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். குழந்தைகளால் அலைச்சல் ஏற்படும். பயணத்தின் போது விலையுயர்ந்த பொருட்களின் மீது கவனம். எதிர்ப்பு!
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
மிதுனம் | Today Rasi Palan Midhunam
தேவையில்லாத சிந்தனை மூலம் தூக்கமின்மை ஏற்படும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் பார்த்து நடந்துக் கொள்ளவும். திடீர் செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். தேவையில்லாமல் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். விபத்தில் சிக்கல் வாய்ப்புள்ளது வாகன பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்கவும். தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டு. வங்கி சார்ந்த பணிகளில் மற்றவர்களை நம்ப வேண்டாம். ஃபோன் மூலம் நல்ல செய்தி வரும். வெற்றி!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்
அதிர்ஷ்ட எண்: 9
கடகம் | Today Rasi Palan Kadagam
உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் காண்பீர்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் பண சம்பந்தமான விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். பணப்புழக்கம் அமோகமாக இருக்கும். சிலர் மனதிற்கு பிடித்த இடங்களுக்கு சென்றும், பிடித்த பொருட்களை வாங்கியும் மகிழ்ச்சி காண்பீர்கள். தொழிலுக்கு எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். சகோதரர்களால் ஒருசில அலைச்சல்கள் ஏற்படலாம். கவலை!
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்
அதிர்ஷ்ட எண்: 1
சிம்மம் | Today Rasi Palan Simmam
கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். பல நாட்களாக இழுத்தடித்த சுபகாரியம் நல்ல முறையில் நடைபெறும். பணியிடத்தில் சகபணியாளர்களுக்கு பக்கபலமாக இருப்பீர்கள். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இணையதளம் சார்ந்த தொழில் செய்வோருக்கு அற்புதமான நாள். சிலர் பிறருக்கு பணஉதவி செய்வீர்கள். மற்றவர்களின் குடும்ப பிரச்சனையில் தலையிடாமல் ஒதுங்கி இருக்கவும். பாராட்டு!
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6
கன்னி | Today Rasi Palan Kanni
விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. காப்பீடு சார்ந்த தனவரவு கிடைக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவு பிறக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். நெருங்கிய சொந்தபந்தங்கள் வழியாக மகிழ்ச்சியான செய்தி வீடு தேடி வரும். பணவரவு அற்புதமாக இருக்கும். சேமிப்பு உயரும். செலவுகள் அவ்வளவாக இருக்காது. புதிய வியாபாரம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பெரிய அளவில் பண முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. நன்மை!
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 7
துலாம் | Today Rasi Palan Thulam
அதிர்ஷ்டம் உங்க பக்கம் இருக்காது. சில விஷயங்களில் கடைசி நிமிடத்தில் வாய்ப்பை இழப்பீர்கள். பணியிடத்தில் அதிக கவனத்துடன் பணியாற்ற வேண்டிய நாள். நெருங்கியவர்களிடம் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்கலாம். சளி அல்லது இருமல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குளிர்ந்த உணவுகளை தவிர்க்கவும். தந்தையின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். தொலைத்தூர பயணத்தை தவிர்க்கவும். தடங்கல்!
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்
அதிர்ஷ்ட எண்: 3
விருச்சிகம் | Today Rasi Palan Viruchigam
நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். வண்டி, மொபைல் ஃபோன் வாங்கும் யோகம் உண்டு. பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதனால் உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்வது சிறந்தது. வரவு செலவு இரண்டும் இருக்கும். ஒருசிலருக்கு வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். அஜாக்கிரதை காரணமாக விலைமதிப்பு மிக்க பொருளை இழக்க வாய்ப்புள்ளது. கவலை!
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 4
தனுசு | Today Rasi Palan Dhanusu
அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். எதிர்பாரா செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகஊழியர்களிடத்தில் இருந்துவந்த மனகசப்பு நீங்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். செலவுகள் இருக்கும் ஆனால் பயனுள்ள விஷயத்திற்காகவே இருக்கும். கவலை வேண்டாம். தாமதம்!
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 2
மகரம் | Today Rasi Palan Magaram
பணியிடத்தில் எல்லா வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். எடுக்கும் புதிய முயற்சிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து போவது நல்லது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். மலைசார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட நாள் கழித்து காதலர்கள் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். மேன்மை!
அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்
அதிர்ஷ்ட எண்: 8
கும்பம் | Today Rasi Palan Kumbam
எந்த காரியத்தையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும். விருந்தினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையால் சூப்பரான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சாதகமான பலன்களை கொடுக்கும். வரவு!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்
அதிர்ஷ்ட எண்: 5
மீனம் | Today Rasi Palan Meenam
முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. புதிய வீடு, மனை வாங்கும் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வும் ஏற்படும். கணவன்-மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பத்திரம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சி!
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
அதிர்ஷ்ட எண்: 7
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…