Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரிஷப ராசியினருக்கு தொழில் சிறக்கும்.. லாபமும் இரட்டிப்பாகும்.. | January Month Rasi Palan 2023 Rishabam

Nandhinipriya Ganeshan Updated:
ரிஷப ராசியினருக்கு தொழில் சிறக்கும்.. லாபமும் இரட்டிப்பாகும்.. | January Month Rasi Palan 2023 Rishabam Representative Image.

ஜனவரி மாதத்தில் மேஷ ராசியில் ராகுவும்,  ரிஷப ராசியில் செவ்வாய் வக்கிர நிலையிலும், துலாம் ராசியில் கேது பகவானும், தனுசு ராசியில் சூரியன் மற்றும் புதன், மகர ராசியில் சுக்கிரன் மற்றும் சனிபகவான், மீன ராசியில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 8 ஆம் தேதி புதன் பகவான் வக்கிர நிலைமை முடிவடைந்து நேர் பாதையில் பயணிக்க இருக்கிறார். 13 ஆம் தேதி செவ்வாய் பகவானின் வக்கிர நிலையானது முடிந்து நேர்பாதையில் பயணிக்கிறார். 15 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 23 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். திருக்கணித பிரகாரத்தின் படி, சனி பகவான்  ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஜனவரி மாதத்தில் ரிஷப ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மற்றும் எதிர்மறையான பலன்கள் இரண்டுமே இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப காலத்தை பயன்படுத்திக் கொண்டால் அனுகூலப் பலன்களை பெறலாம். இந்த மாதத்தில் செவ்வாய் பகவான் உங்க ராசியிலேயே சஞ்சரிப்பதால் பிரிந்து இருந்த கணவன் - மனைவி மீண்டும் ஒன்று சேர்வார்கள். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு புதுவீடு கட்டி குடியேறுவதற்கும் வாய்ப்புள்ளது. 

ரிஷப ராசியினருக்கு தொழில் சிறக்கும்.. லாபமும் இரட்டிப்பாகும்.. | January Month Rasi Palan 2023 Rishabam Representative Image

விளையாட்டு வீரர்களுக்கு போட்டியில் சிறந்த இடத்தை பிடிப்பார்கள். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கவும் வாய்ப்புள்ளது. திருமண யோகம் உண்டு. 5ஆம் வீட்டின் அதிபதியான புதன் 8ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், மாணவர்களுக்கு சராசரியான பலன்களையே கொடுக்கும். எனவே, படிப்பில் கவனம் தேவை.

பெரிய செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மாதத்தின் தொடக்கத்தில், சுக்கரன் 9ம் வீட்டில் நிற்பதால், காதல் வாழ்க்கையில் தகறாறு ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன்-மனைவி அனுசரித்து நடந்துக்கொள்வது நல்லது. 

ரிஷப ராசியினருக்கு தொழில் சிறக்கும்.. லாபமும் இரட்டிப்பாகும்.. | January Month Rasi Palan 2023 Rishabam Representative Image

பங்குச்சந்தை மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும். அப்பா வழியில் உள்ள சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் சுமூகமாக நடக்கும். தொழிலில் தனவரவு அற்புதமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அற்புதமான காலம். வேலை தேடி அலைந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பரம்பரை சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் சுமூகமாக முடிவடையும். 

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்து வருவது சிறப்பான பலன்களை பெற்று தரும். 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2,3,6

சந்திராஷ்டம நாள்:19, 20


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்