Tue ,May 28, 2024

சென்செக்ஸ் 75,390.50
-19.89sensex(-0.03%)
நிஃப்டி22,932.45
-24.65sensex(-0.11%)
USD
81.57
Exclusive

நயன்தாரா முதல் ஐஸ்வர்யா ராய் வரை தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களின் ராசி இதுவா? | Top Tamil Actress Zodiac Signs

Nandhinipriya Ganeshan Updated:
நயன்தாரா முதல் ஐஸ்வர்யா ராய் வரை தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களின் ராசி இதுவா? | Top Tamil Actress Zodiac Signs Representative Image.

ஒருவர் வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கு உழைப்பு, திறமை, அழகு என பல காரணங்கள் இருந்தாலும், ஒருவரின் ராசியும் முக்கிய பங்காக இருக்கிறது. எவ்வளவோ திறமை இருந்தும் ஏன் ஒரு சிலரால் மட்டும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியவதில்லை. காரணம் அதிர்ஷ்டம் தான். சிலர் அவர்களுக்கு கிடைக்கூடிய யோகத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் பெரிய அளவிற்கு முன்னேறி விடுகின்றனர். ஆனால், சிலர் 100 க்கு 110 சதவீதம் முயற்சி செய்தாலும் அவர்கள் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசாமல் போவதால், அவர்களால் முன்னேற முடியாமல் கானாமலேயே போய் விடுகின்றனர். அந்தவகையில், தமிழ் சினிமா உலகில் சமீபத்தில் இளைஞர்களின் மனம் கவர்ந்த டாப் நடிகைகளின் ராசியை பற்றிய தெரிந்துக் கொள்ளலாம்.

நயன்தாரா முதல் ஐஸ்வர்யா ராய் வரை தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களின் ராசி இதுவா? | Top Tamil Actress Zodiac Signs Representative Image

சிம்ரன் | Simran Zodiac Sign

ஆஹா! இவருடைய நடனத்திற்கு மயங்காத ஆட்களே இல்லை. தன்னுடைய மெல்லிடையால் கோடான கோடி இளைஞர்களின் கனவுக் கன்னியாக ஜொலித்த சிம்ரனின் ராசி மேஷம்.

நயன்தாரா முதல் ஐஸ்வர்யா ராய் வரை தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களின் ராசி இதுவா? | Top Tamil Actress Zodiac Signs Representative Image

டாப்சி பன்னு | Taapsee Pannu Horoscope

தமிழில் ஆடுகளம் முதல் பாலிவுட் வரை ஜொலிப்பவர் டாப்சி பன்னு. இவர் முதன் முதலில் நடித்த தமிழ் படமான ஆடுகளத்தின் போதே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடுத்துவிட்டார். அடுத்தடுத்து பல பெரிய நடிகர்களுடனும் இவர் நடித்துவருகிறார். சிறிய கால இடைவெளியில் பெரிய இடத்தை பிடித்த டாப்சியின் ராசி சிம்மம்.

நயன்தாரா முதல் ஐஸ்வர்யா ராய் வரை தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களின் ராசி இதுவா? | Top Tamil Actress Zodiac Signs Representative Image

ஸ்ருதி ஹாசன் | Shruti Haasan Horoscope

உலக நாயகன் கமலின் மகள் என்ற பெருமையையும் தாண்டி பாடகர், ஆக்டர் என பல திறமைகளை தன்னுள் மறைத்துவைத்தவர். என்னதான் உலக நாயகனின் மகளாக இருந்தாலும், இவருக்கும் பல இந்த உயரத்தை அடைய இவரும் பல முறை சரிக்கி விழுந்து தான் வந்திருக்கிறார். ஏனென்றால், அதிர்ஷ்ட காற்று இவர் பக்கம் வீசும் போது பயன்படுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஸ்ருதி ஹாசனின் ராசி கும்பம். 

நயன்தாரா முதல் ஐஸ்வர்யா ராய் வரை தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களின் ராசி இதுவா? | Top Tamil Actress Zodiac Signs Representative Image

காஜல் அகர்வால் | Kajal Aggarwal Horoscope

பரத்துடன் பழனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோன்களில் ஒருவராக வலம் வருகிறார். அடுத்தடுத்து தனது எதார்த்தமான நடிப்பாலும் துணிச்சலாலும் பெரிய பெரிய நடிகர்களுடன் நடித்து இந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். காஜல் அகர்வாலின் ராசி மிதுனம்.

நயன்தாரா முதல் ஐஸ்வர்யா ராய் வரை தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களின் ராசி இதுவா? | Top Tamil Actress Zodiac Signs Representative Image

ஹன்சிகா | Hansika Motwani Horoscope

குட்டி குஷ்பு என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஹன்சிகா எங்கேயும் காதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரீ கொடுத்தார். இவருடைய சிரிப்பிற்கும், குறும்பு தனத்திற்குமே ரசிகர்கள் ஏராளம். ஹன்சிகாவின் ராசி சிம்மம்.

நயன்தாரா முதல் ஐஸ்வர்யா ராய் வரை தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களின் ராசி இதுவா? | Top Tamil Actress Zodiac Signs Representative Image

தமன்னா | Tamanna Bhatia Zodiac Sign

கல்லூரி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தமன்னா, விஜய், அஜித், தனுஷ், கார்த்தி, சூர்யா என அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களுடன் நடித்து டாப் ஹீரோயினியாக வலம் வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். தமன்னாவின் ராசி தனுசு. 

நயன்தாரா முதல் ஐஸ்வர்யா ராய் வரை தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களின் ராசி இதுவா? | Top Tamil Actress Zodiac Signs Representative Image

ஐஸ்வர்யா ராய் | Aishwarya Rai Zodiac Sign

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் தமிழில் அறிமுகமாகி, ஹிந்தியில் பல படங்களும் நடித்து தென்னிந்திய சினிமாவில் நட்சத்திரமாக ஜொலித்தார். சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஐஸ்வர்யா மீண்டும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக ரீ-என்ட்ரீ கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். உலக அழகி என்ற சொல்லுக்கு உருவமாக இன்னமும் ஜொலிப்பவர். ஐஸ்வர்யா ராயின் ராசி விருச்சிகம்.

நயன்தாரா முதல் ஐஸ்வர்யா ராய் வரை தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களின் ராசி இதுவா? | Top Tamil Actress Zodiac Signs Representative Image

த்ரிஷா கிருஷ்ணன் | Trisha Krishnan Horoscope

1999 முதல் அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத முக்கிய ஹீரோயினாகவும், கனவுக் கன்னியாகவும் திகழ்ந்தவர். இவரும் சில நாட்கள் பிறகு அதே இளமையுடன் பொன்னியின் செல்வன் படத்தில் மாஸ் என்ட்ரீ கொடுத்தார். உண்மையில், அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி போயினர். 20 வருடத்திற்கு முன்பு பார்த்த அதே அழகு, கட்டுடல், இளமை கொண்ட அழகு பதுமையாக மீண்டும் தனது சினிமா பயணத்தை தொடங்கியிருக்கிறார். த்ரிஷாவின் ராசி ரிஷபம்.

நயன்தாரா முதல் ஐஸ்வர்யா ராய் வரை தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களின் ராசி இதுவா? | Top Tamil Actress Zodiac Signs Representative Image

கீர்த்தி சுரேஷ் | Keerthy Suresh Zodiac Sign

சாதாரணமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து தற்போது மகா நடிகையாக வலம் வருபவர் நம்ம கீர்த்தி சுரேஷ். எத்தனையோ அவமானங்களையும் கஷ்டங்களையும் சந்தித்து, அதையெல்லாம் தவிடு பொடியாக்கி கனவு கன்னியாக ஜொலிக்கிறார். கீர்த்தி சுரேஷின் ராசி துலாம்.

நயன்தாரா முதல் ஐஸ்வர்யா ராய் வரை தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களின் ராசி இதுவா? | Top Tamil Actress Zodiac Signs Representative Image

சமந்தா | Samantha Horoscope

சென்னை பல்லாவரத்தில் பிறந்து தற்போது சினிமா உலகில் மாஸ், மற்றும் டாப் ஹீரோனாக இருப்பவர் நம்ம சமந்தா. இவருடைய சொந்த வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகள். ஆனால், அதையெல்லாம் தனது வெற்றியின் உயரத்தை அடைய படியாக மாற்றியவர். தோல்வி, அவமானம் என அனைத்தையும் கடந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் நடிகைகளின் பட்டியலில் 2வது இடத்தை பிடித்து இருக்கிறார். க்ளாமர் குயின் சமந்தாவின் ராசி ரிஷபம்.

நயன்தாரா முதல் ஐஸ்வர்யா ராய் வரை தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களின் ராசி இதுவா? | Top Tamil Actress Zodiac Signs Representative Image

நயன்தாரா | Nayanthara Horoscope

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார். வாழ்க்கையில் அத்துனை அடிகளையும் வெற்றியின் படிகளாக்கி, கோடான கோடி ரசிகர்களின் ஆசை நாயகியாவும், தமிழ் சினிமாவில் நம்பர் நடிகையாகவும் வலம் வருபவர் நம்ம நயன்தாரா. 2005 ஆம் ஆண்டு "ஐயா" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தன்னுடைய திறமையான நடிப்பால், தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். திரையுலகிற்கு ஒரு பெண்ணின் பங்களிப்பு அழகு மட்டுமல்ல என்பதை நிரூபித்த நயன்தாராவின் ராசி விருச்சிகம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்